டி கொக்கின் அதிரடியால் டி-20 தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா

71
©BCCI Twitter

இந்தியாவுக்கு எதிரான 3ஆவதும், இறுதியுமான டி-20 போட்டியில், குயிண்டன் டி கொக்கின் அதிரடி ஆட்டத்தினால் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது

கோஹ்லியின் T20 சாதனையுடன் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்தியா

விராட் கோஹ்லியின் அரைச் சதம் மற்றும் ஷிகர் ……..

தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதலாவது டி-20 போட்டி பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மொஹாலியில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று (22) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்

இதில் ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுடனும், சற்று அதிரடி காட்டிய ஷிகர் தவான் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ரிஷப் பாண்ட் (19 ஓட்டங்கள்), ஜடேஜா (19 ஓட்டங்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியா (14 ஓட்டங்கள்) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 134 ஓட்டங்களைக் குவித்தது

10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான …..

தென்னாபிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுக்களையும், பிஜோர்ன் போர்ச்சுன், பியூரன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், தப்ரைஸ் ஷம்சி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணியின் சார்பில் ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்

அதிரடி காட்டிய இந்த ஜோடியில் ஹெண்ட்ரிக்ஸ் 28 (26) ஓட்டங்களுடன் வெளியேற, தொடர்ந்து அதிரடி காட்டிய டி கொக் தனது அரைச் சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக களமிறங்கிய பவுமாவுடன் ஜோடி சேர்ந்த டி கொக் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் டி கொக் 79(52) ஓட்டங்களையும், பவுமா 27(23) ஓட்டங்களையும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்

இறுதியில் தென்னாபிரிக்க அணி 16.5 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. இந்திய அணியின் சார்பில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்

இதன்மூலம் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் 1-1 என சமனானது.

போட்டியின் ஆட்டநாயகனாக பியூரன் ஹென்ரிக்ஸ் தெரிவாகியதுடன், தொடரின் நாயகனாக குயிண்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<