இறுதிப் பந்தில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த அவுஸ்திரேலியா

364
Getty Image

இந்தியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி த்ரில் வெற்றியீட்டியுள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி அங்கு இரண்டு டி-20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  

பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் ஆடுவதை விரும்பாத இந்திய அணி?

இந்த ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெறவிருக்கும் ….

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி-20 போட்டி நேற்று (24) நடைபெற்றது. இதன் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 24 ஓட்டங்களுடனும், ரிஷாப் பண்ட் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடிய லோகேஷ் ராகுல் அரைச் சதமடித்து ஆறுதல் கொடுத்தார்.

போட்டியின் இறுதிவரை மகேந்திர சிங் டோனி ஓரளவு தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைக் குவித்தது. அவுஸ்திரேலியா சார்பில் நேதன் கவுல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 127 ஓட்டங்களை இலக்காக கொண்டு அவுஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ஓட்டங்களை எடுப்பதற்குள் முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய கிளென் மெக்ஸ்வெல், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டி ஆர்சி ஷோட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்ட போது டி ஆர்சி ஷோட் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கிளென் மெக்ஸ்வெல் பொறுப்புடன் விளையாடி அரைச்சதமடித்தார். அவர் 56 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து, அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்படி, இறுதி ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் போட்டியின் இறுதி ஓவரை வீசினார்.

அவுஸ்திரேலிய தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி …

முதல் பந்தில் பெட் கம்மின்ஸ் ஒரு ஓட்டத்தை எடுக்க, ரிச்சர்ட்சன் 2ஆவது பந்தில் பௌண்டரி விளாசினார். அதேபோன்று 3ஆவது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார். 4ஆவது பந்தில் ரிச்சர்ட்சன் ஒரு ஓட்டத்தை எடுக்க, 5ஆவது பந்தில் கம்மின்ஸ் பௌண்டரி அடித்தார். இறுதியில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவையிருந்த நிலையில், கம்மின்ஸ் அடித்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா மற்றும் சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

அவுஸ்திரேலிய வீரர் நேதன் கவுல்டர் நைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதையடுத்து, இரண்டு போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் 1-0 என அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுக்கொண்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்திய அணி 126/7 (20)லோகேஷ் ராகுல் 50, மகேந்திர சிங் டோனி 29*, நேதன் கவுல்டர் நைல் 26/3  

அவுஸ்திரேலிய அணி 127/7 (20)கிளென் மெக்ஸ்வெல் 56, போது டி ஆர்சி ஷோட் 37, ஜஸ்ப்ரிட் பும்ரா 16/3

போட்டி முடிவுஅவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<