ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி

132
Cricinfo

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

மெக்ஸ்வெல்லின் அதிரடியால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய…

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி இன்று (2) இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அஷ்டன் டேர்னர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்தார் என்பது விஷேட அம்சமாகும்.

அவுஸ்திரேலிய அணி தமது இன்னிங்ஸிற்காக  7 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக 50 ஓட்டங்களை உஸ்மான் கவாஜா பெற்றிருந்ததுடன் க்லென் மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 173 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த அவுஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் கேறி மற்றும் நதன் கௌல்டர் நைல் ஆகியோர் இணைந்து 7ஆவது விக்கெட்டுகாக பெற்றுக் கொண்ட 62 ஓட்ட இணைப்பாட்டம் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தது.

இன்றைய போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் கடைசியாக விளையாடிய 20 மட்டுப்படுத்தப்பட்ட போட்டி இன்னிங்ஸ்களில் ( டி20 மற்றும் ஒருநாள்) மொத்தமாக 224 ஓட்டங்களையே பெற்றுள்ளதுடன் அவற்றில் அதிக பட்ச ஓட்டமாக 47 ஓட்டங்களே காணப்படுகின்றது. இது அவரின் மோசமான துடுப்பாட்டத்தையே எடுத்துக் காட்டுகிறது. பந்து வீச்சில் மொஹமட் ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

டி20 தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது. இந்திய அணி 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது தவான் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ரோகித் ஷர்மாவுடன் கைகோர்த்த அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து ஷர்மா (37) அம்பதி ராயுடு (13) என அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்திய அணி 99 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.  

உலகக்கிண்ண வாய்ப்பு கிட்டுமா? – மனம் திறந்தார் உபுல் தரங்க

இலங்கை அணியின் அனுபவ ஆரம்ப…

பின்னர் 5ஆவது விக்கெட்டுக்காக இணைந்த டோனி மற்றும் கேதர் ஜாதவ் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 141 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற இவர்கள் 48.2 ஓவர்களில் 240 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை கடந்தனர்.  கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜாதவ் 81 ஓட்டங்களையும் டோனி 59 ஓட்டங்களையும் ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் கௌல்டர் நைல் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக கேதர் ஜாதவ் தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய அணி – 236/7 (50) – கவாஜா 50, மெக்ஸ்வெல் 40, ஸ்டொய்னிஸ் 37, ஷமி 44/2, குல்தீப் யாதவ் 46/2

இந்திய அணி – 240/4 (48.2) – கேதர் ஜாதவ் 81*, டோணி 59*, கோஹ்லி 44, கௌல்டர் நைல் 46/2, அடம் ஸம்பா 49/2

முடிவு : இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி