நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி

94
GETTY IMAGES

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது. 

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. 

டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகள…..

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். 

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 68.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அஜிங்கியா ரஹானே 46 ஓட்டங்களுடன் தனது தரப்பில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, நியூசிலாந்து தரப்பின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌத்தி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 348 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில், அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 153 பந்துகளுக்கு 11 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், கைல் ஜேமிசன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் தலா 44 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர். 

தொடர்ந்து, 183 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியினர் மீண்டும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்த மயாங்க் அகர்வால் அரைச்சதம் தாண்டி 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

இதேநேரம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் டிம் சௌத்தி 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

இந்திய அணியின் மோசமான இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் காரணமாக போட்டியின் வெற்றி இலக்காக 9 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், போட்டியின் வெற்றி இலக்கினை 1.4 ஓவர்களில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் அடைந்தனர். 

டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் …..

இப்போட்டியில் அடைந்து கொண்ட தோல்வி மூலம் இந்திய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் முறையாக தோல்வியினை பதிவு செய்து கொள்கின்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி தெரிவு செய்யப்பட்டார். இனி, நியூசிலாந்து – இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (29) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 165 (68.1) அஜிங்கியா ரஹானே 46,  கைல் ஜேமிசன் 39/4, டிம் செளத்தி 49/4

நியூசிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 348 (100.2) கேன் வில்லியம்சன் 89, கைல் ஜேமிசன் 44, ரொஸ் டெய்லர் 44, கொலின் டி கிரான்ட்ஹோமே 43, இஷாந்த் சர்மா 68/5, ரவிச்சந்திரன் அஷ்வின் 99/3

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 191 (81) மயாங்க் அகர்வால் 58, டிம் செளத்தி 61/5, ட்ரென்ட் போல்ட் 39/4

நியூசிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 9/0 (1.4)

முடிவுநியூசிலாந்து 10 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<