ரொஸ் டெய்லரின் அதிரடி சதத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

77
Getty image

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரொஸ் டெய்லர் மற்றும் டொம் லேதமின் அதிரடியால் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

நியூசிலாந்தை வைட் வொஷ் செய்தது இந்தியா

நியூசிலாந்து அணி 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து …

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் டொம் லேதம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவில்லை.

இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்து முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்களை எடுத்தனர். 

பிரித்வி ஷா 20 ஓட்டங்களுடனும், அகர்வால் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

பொறுப்பாக துடுப்பாடிய விராட் கோஹ்லி அரைச்சதம் கடந்த நிலையில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கோஹ்லியின் விக்கெட்டை அடுத்து கே.எல் ராகுல் களமிறங்கினார். ஒரு புறம் ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆட மறுமுனையில் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 103 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். 

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு

நியூசிலாந்து சென்றிருக்கும், இந்திய கிரிக்கெட் அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட…

மறுபுறத்தில் கே.எல் ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உட்பட 88 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 347 ஓட்டங்களைக் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டிம் சௌத்தி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி துடுப்பாடக் களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்டில் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் வலுவான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இதில் ஹென்ரி நிக்கோலஸ் அரைச்சதம் கடந்து 78 ஓட்டங்களை எடுத்தார். 

மத்திய வரிசையில் களமிறங்கிய ரொஸ் டெய்லர் மற்றும் டொம் லேதம் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதில் டொம் லேதம் 69 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய ரொஸ் டெய்லர் சதமடித்தார். 

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

இறுதியில் மிட்செல் சாட்னர், சிக்ஸரையும் பௌண்டரியையும் அடிக்க நியூசிலாந்து அணி 11 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது.

ரொஸ் டெய்லர் தனது 20 ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்து, 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்ததுடன், போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இதன்படி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 8 ஆம் திகதி ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 347/4 (50) – ஸ்ரேயஸ் ஐயர் 109, கே.எல் ராகுல் 88*, விராட் கோஹ்லி 51, டிம் சௌத்தி 2/85

நியூசிலாந்து – 348/6 (48.1) – ரொஸ் டெய்லர் 109*, ஹென்ரி நிக்கோல்ஸ் 78, டொம் லேதம் 69, குல்தீப் யாதவ் 2/84

முடிவு – நியூசிலாந்து 4 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<