Home Tamil பந்துவீச்சில் சோபித்த இலங்கை A அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றம்

பந்துவீச்சில் சோபித்த இலங்கை A அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றம்

285

இந்திய A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி பந்துவீச்சில் சோபித்தபோதும், துடுப்பாட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது.

இந்தியாவின் ஹுபில், நெஹ்ரு அரங்கில் இன்று (31) ஆரம்பமான போட்டியில் இலங்கை அணிக்காக வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இந்திய A அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

திக்வெல்லவின் சதம் வீண்: இலங்கை A அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி

சுற்றுலா இலங்கை A மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்…

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய தரப்பு முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தபோதும் லஹிரு குமார ஆரம்ப வீரர்கள் இருவரையும் டக் அவுட் செய்தார். எனினும், மத்திய வரிசை வீரர்கள் நிதானமாக ஆடி இந்திய அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர்.

இதில் விக்கெட் காப்பாளர் சிரிகத் பாரத் A நிலைப் போட்டிகளில் தனது 4ஆவது சதத்தை பெற்றார். 156 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 117 ஓட்டங்களை குவித்தார்.

இதன்போது அவர் முதல் வரிசை வீரர் அன்மோல்பிரீத் சிங்குடன் இணைந்து 91 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். அன்மோல்பிரீத் சிங் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்திய அணியின் பின்வரிசை வீரர்களை சந்தகன் ஆட்டம் காணச் செய்தார்.

இதனால் இந்திய அணி 69.1 ஓவர்களில் 269 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தொடந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணியின் ஆரம்ப வரிசை வீரர்கள் நின்று பிடித்து ஆட முடியாமல் விக்கெட்டுகளை தொடர்ச்சியான இடைவெளியில் பறிகொடுத்தனர். முதல் ஓவரிலேயே பெதும் நிசங்க ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் ஆடிய சதீர சமரவிக்ரமவினால் 8 ஓட்டங்களையே பெற முடிந்தது.

தொடர்ந்து வந்த பானுக்க ராஜபக்ஷ (18) மற்றும் அணித்தலைவர் அஷான் பிரியன்ஜன் (19) ஆகியோரும் சோபிக்க தவறினர்.

இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆரம்பமாகி…

இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை A அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் உள்ள விக்கெட் காப்பாளர் நிரோஷன் திவெல்ல 25 பந்துகளில் 27 ஓட்டங்களுடனும் பிரியமால் பெரேரா 15 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

இதன்படி இலங்கை A அணி மேலும் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க முதல் இன்னிங்ஸில் இந்திய A அணியை விடவும் 182 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

போட்டியில் சுருக்கம்

இந்தியா A அணி (முதல் இன்னிங்ஸ்) – 269 (69.1) – சிரிகத் பாரத் 117, அன்மோல்பிரீத் சிங் 65, லஹிரு குமார 4/53, லக்ஷான் சதகன் 4/64

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 87/4 (18) – நிரோஷன் திக்வெல்ல 27*, சந்தீப் வார்ரி 2/18, ஷிவம் துபே 2/31

Result


South Africa
227/9 (50)

India
230/4 (47.3)

Batsmen R B 4s 6s SR
Hashim Amla c Rohit Sharma b Jasprit Bumrah 6 9 1 0 66.67
Quinton de Kock c Virat Kohli b Jasprit Bumrah 10 17 1 0 58.82
Faf du Plessis b Yuzvendra Chahal 38 54 4 0 70.37
Rassie van der Dussen b Yuzvendra Chahal 22 37 1 0 59.46
David Miller c & b Yuzvendra Chahal 31 40 1 0 77.50
JP Duminy lbw b Kuldeep Yadav 3 11 0 0 27.27
Andile Phehlukwayo st MS Dhoni b Yuzvendra Chahal 34 61 2 1 55.74
Chris Morris c Virat Kohli b Bhuvneshwar Kumar 42 34 1 2 123.53
Kagiso Rabada not out 31 35 2 0 88.57
Imran Tahir c Kedar Jadhav b Bhuvneshwar Kumar 0 2 0 0 0.00


Extras 10 (b 1 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 227/9 (50 Overs, RR: 4.54)
Fall of Wickets 1-11 (3.2) Hashim Amla, 2-24 (5.5) Quinton de Kock, 3-78 (19.1) Rassie van der Dussen, 4-80 (19.6) Faf du Plessis, 5-89 (22.6) JP Duminy, 6-135 (35.3) David Miller, 7-158 (39.3) Andile Phehlukwayo, 8-224 (49.2) Chris Morris, 9-227 (49.6) Imran Tahir,

Bowling O M R W Econ
Bhuvneshwar Kumar 10 0 44 2 4.40
Jasprit Bumrah 10 1 35 2 3.50
Hardik Pandya 6 0 31 0 5.17
Kuldeep Yadav 10 0 46 1 4.60
Yuzvendra Chahal 10 0 51 4 5.10
Kedar Jadhav 4 0 16 0 4.00


Batsmen R B 4s 6s SR
Shikhar Dhawan c Quinton de Kock b Kagiso Rabada 8 12 1 0 66.67
Rohit Sharma not out 122 144 13 2 84.72
Virat Kohli c Quinton de Kock b Andile Phehlukwayo 18 34 1 0 52.94
Lokesh Rahul c Faf du Plessis b Kagiso Rabada 26 42 2 0 61.90
MS Dhoni c & b Chris Morris 34 46 2 0 73.91
Hardik Pandya not out 15 7 3 0 214.29


Extras 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 230/4 (47.3 Overs, RR: 4.84)
Fall of Wickets 1-13 (5.1) Shikhar Dhawan, 2-54 (15.3) Virat Kohli, 3-139 (31.3) Lokesh Rahul, 4-213 (46.1) MS Dhoni,

Bowling O M R W Econ
Imran Tahir 10 0 58 0 5.80
Kagiso Rabada 10 1 39 2 3.90
Chris Morris 10 3 36 1 3.60
Andile Phehlukwayo 8.3 0 40 1 4.82
Tabraiz Shamsi 9 0 54 0 6.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<