19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்

4098
Sri lanka Cricket

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முதல் தடவையாக நடைபெற உள்ள இந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மண்ணில் நடைபெற இருப்பது சிறப்பான விடயமாகும். போட்டிகள் நடைபெறும் கால எல்லைகள் வெளியிடப்பட்டாலும் போட்டி நடைபெறும் திகதிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதிகமான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட இடங்களான அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் போட்டிகளை நடாத்த இலங்கை  நிர்வாகக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை “ஏ” அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளராக அவிஷ்க குணவர்தன

இலங்கைஅணி எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியோடு கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்குகொள்ள உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை  “அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளராக அவிஷ்க குணவர்தன மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 39 வயது நிரம்பிய அவிஷ்க குணவர்தன இலங்கை அணிக்காக 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 6 டெஸ்ட் மற்றும் 61 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 2000ஆம் ஆண்டு ஐ.சி.சிநொக் அவுட்போட்டி ஒன்றின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் பெற்றிருந்தார் என்பது அவரது கிரிக்கெட் வாழ்வில் பொன்னான தருணமாகும்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸை நியமித்துள்ளதோடு இலங்கை அணியின் முகாமையாளராக ஜெரில் வொடர்ஸை நியமித்துள்ளது.

புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நிக் லீயை பொறுத்த வரையில் கவுண்டி போட்டிகளில் 1500க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, முதல்தர கிரிக்கெட் போட்டிகள் உட்பட ஏனைய கழக கிரிக்கெட் போட்டிகள் உள்ளடங்கலாக 10,000க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 23 சதங்கள் அடங்குகின்றமை விசேட அம்சமாகும். நிக் லீ தற்போது இங்கிலாந்து கவுண்டி அணிகளில் ஒன்றான சஸெக்ஸ் அணியின் வலிமை மற்றும்  சீரமைப்பு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.

யார் இந்த நிக் லீ?

  • முழு பெயர்நிக்கோலஸ் ட்ரெவர் லீ
  • பிறப்பு – 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி
  • பிறந்த இடம்டார்ட்ஃபோர்ட், கென்ட்
  • வயது – 32
  • துடுப்பாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
  • பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்து வீச்சு
  • விளையாடிய  அணிகள்கேம்பிரிட்ஜ் MCCU, சஃப்பால்க், சசெக்ஸ் 2வது லெவன்

நிக் லீ மொத்தமாக 13 முதல் தர போட்டிகளில் விளையாடி 30.62 என்ற துடுப்பாட்ட சராசரியில் 490 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிகபட்ச ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 79 ஓட்டங்களாகும்.

100 கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டில் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு 100 கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளதாக தெரிவித்துள்ளது.  இதில் 30 வீரர்கள் தேசிய மற்றும்அணிகளுக்கும், 20 வீரர்கள் வளர்ந்து வரும் வீர்ரகளுக்கான அணிக்கும் கைச்சாத்திடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிகுதி 50 வீரர்களில் 25 வீரரக்ள் மாவட்ட வீரர்களாகவும் ஏனைய 25 வீரர்கள் மாகாண வீரர்களாகவும்  கைச்சாத்திட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கூறியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

schoolscricketcrawler