உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி

465

10 அணிகள் பங்குகொள்ளும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நேற்று ஆரம்பமாகின. இதில் பி பிரிவுக்காக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் .சி.சியின் அங்கத்துவ நாடான ஸ்கொட்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி .சி.சி.யின் ஒருநாள் அணிகளின் தரவரிசைப்படி முதல் 8 இடங்களை பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதியைப் பெற்றுக்கொண்டன.

உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் ஆப்கானிடம் வீழ்ந்த உலக சம்பியன்

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் …

இதில் முன்னாள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தரவரிசையில் 9ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதால், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முதற்தடவையாக நேரடியாக தகுதி பெறவில்லை.

ஆகையால், 10 அணிகள் மாத்திரம் பங்குகொள்ளும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான எஞ்சிய இரு அணிகள் தகுதிச் சுற்று மூலம் தெரிவு செய்யப்படவுள்ளன. இதில்பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு இராட்சியம், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், ‘பிபிரிவில் ஆப்கானிஸ்தான், ஹொங் கொங், நேபாளம், ஸ்கொட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, தகுதிச் சுற்றின் முதல் நாளான, நேற்றையதினம் 4 லீக் போட்டிகள் இடம்பெற்றதுடன், இதில் ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராட்சியம், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெற்றிகளைப் பதிவுசெய்தன.

குழு பி பிரிவிற்காக புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும், அண்மைக்காலமாக பிரபல அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக மொஹமட் நபி 92 ஓட்டங்களையும், நஜிபுல்லாஹ் சத்ரான் 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முதலிடம் பிடித்த சங்கக்கார

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள …

பந்துவீச்சில் பிராட் வீல் மற்றும் ரிச்சி பெரிங்கடன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 47.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அவ்வணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு வித்திட்ட கொலம் மெக்லியோட் ஆட்டமிழக்காது 157 ஓட்டங்களை (23 பௌண்டரி, ஒரு சிக்ஸர்) அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

ஜிம்பாப்வேக்கு அபார வெற்றி

பி பிரிவின் மற்றுமொரு போட்டியில் போட்டிகளை நடாத்தும் ஜிம்பாப்வே 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வெற்றி கொண்டது.

25,000க்கும் அதிகமான ரசிகர்களுக்கு முன்னால் புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 380 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணிக்காக பிரன்டன் டெய்லர்(100) மற்றும் சிகந்தர் ராசா (123) ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

381 என்ற இமாலய இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களைக் குவித்து தோல்வியைத் தழுவியது. நேபாள அணி சார்பாக சரத் விசவ்கர்(52), ஆரிப் ஷெய்க்(50) ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுசேர்த்திருந்தனர்.

இதேநேரம், ஜிம்பாப்வே அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த சிகந்தர் ராசா ஆட்டநாயகனாத் தெரிவானார்.

இதேநேரம், பிரிவில் இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், ஐக்கிய அரபு இராட்சிய அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவையும் தோற்கடித்தன. இதில் ஐக்கிய அரபு இராட்சிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் நவீட் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதேவேளை, நாளை(06) நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, ஐக்கிய அரபு இராட்சியத்தையும், ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது.