மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை முதல் இலங்கையில்

1232
Sri Lanka Women's Team

இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் ஆரம்பமாக இருக்கும் 11ஆவது மகளிர் ஒரு நாள் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட இருக்கும் அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காண் சுற்றுப் போட்டிகள் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் இலங்கையின் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

மகளிர் உலகக் கிண்ணத்திற்காக எட்டு நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன. இதில் மோதிக்கொள்ளும் நான்கு அணிகள் (அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள்) ஏற்கனவே .சி.சி இனால் 2014/16ஆம் ஆண்டுகளின் பருவ காலத்தில் நடாத்தப்பட்ட சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அஸ்திரேலியாவுடனான T2௦ போட்டிகளிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் வெளியேற்றம்

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட T2௦ தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்குபற்ற..

இந்நிலையில், இத்தொடரில் விளையாட இருக்கும் மிகுதி நான்கு மகளிர் அணிகளையும் தெரிவு செய்யும் விதமாக இந்த தகுதி காண் சுற்றுப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இத்தொடரில் மோதுவதற்காக முன்னணி அணிகளான இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் தயாராகி வரும் வேளையில் உலக கிண்ணத்தில் பங்கு பெற வேண்டும் என்கிற அவாவில் பங்களாதேஷ், அயர்லாந்து, ஜிம்பாப்வே, தாய்லாந்து, பபுவா நியூ கினியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளின் மகளிர் அணிகளும் இத்தொடரில் விளையாட இருக்கின்றன.

இத்தொடரில் பங்கு பெரும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் குழு A இல் இந்தியா, இலங்கை, அயர்லாந்து, தாய்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய குழுவான B இல் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பவற்றுடன் சேர்த்து பபுவா நியூ கினியா, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் அடங்குகின்றன.

பெப்ரவரி 7ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறும் இப்போட்டித் தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பின் CCC, MCA, NCC, P சரவணமுத்து ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

30 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் சுற்றுப்போட்டிகளின் வெற்றி தோல்விகளின் மூலம் பெறப்படும் புள்ளிகளிற்கு அமைவாக தத்தமது குழுக்களில் முன்னிலை பெறும் முதல் மூன்று அணிகளும் சுப்பர் சிக்ஸ் (Super Six) நிலை போட்டிகளுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 6 போட்டிகளில், புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களினைப் பெறும் அணிகள், மகளிர் உலக கிண்ணத்தில் விளையாட இருக்கும் மேலதிக நான்கு அணிகளாக தெரிவு செய்யப்படும். இதில் முதல் இரண்டு இடங்களினைப் பெற்றுக்கொள்ளும் அணிகள், இத்தொடரின் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன.

இத்தொடரில் இலங்கை அணியினை தென் மாகாணத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இனோக்கா ரணவீர தலைமை தாங்குகின்றார். அண்மைக் காலமாக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்திருந்த இலங்கை மகளிர் அணிக்கு இந்த தொடர் தங்களது திறமையினை நிரூபிக்க ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது.

இத்தொடருக்கான இலங்கை குழாம்

இனோக்கா ரணவீர (தலைவி), சாமரி அத்தபத்து, இனோஷி பெர்னாந்து, நிப்புனி ஹன்சிக்கா, எஷானி லோக்குசூரிய, சுகன்திக்கா குமாரி, ஹர்ஷித்த மாதவி, திலானி மனோதரா, ஹாசினி பெரேரா, உதேஷிக்கா பிரபோதினி, சாமரி பொல்கம்பொல, மல்ஷா செஹானி, பிரஷாதினி வீரக்கொடி, சிரிபாலி வீரக்கொடி

தலைமை பயிற்றுவிப்பளார்: ஹேமந்த தேவப்பிரிய

இத்தொடரிற்காக, கடந்த பல வாரங்களாக நாங்கள் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இத்தொடரில் தெரிவாக இருக்கும் நான்கு அணிகளில் இலங்கையும் ஒன்றாக இருக்க எதிர்பார்த்துள்ளோம் என்று இத்தொடர் பற்றிய தன்னம்பிக்கையினை இலங்கை அணித் தலைவி இனோக்கா ரணவீர வெளியிட்டிருந்தார்.

இத்தொடரின் முதல் போட்டியும், ஏனைய சில போட்டிகளும் மகளிர் கிரிக்கெட்டிணை விருத்தி செய்யும் நோக்கில் .சி.சி இன் இணையதள வாயில்கள் ஊடாக நேரஞ்சல் செய்யப்பட இருக்கின்றன.

போட்டி அட்டவணை

பெப்ரவரி 7, செவ்வாய்க்கிழமை
இலங்கை எதிர் இந்தியா, P. சரவணமுத்து மைதானம்
அயர்லாந்து எதிர் ஜிம்பாப்வே, MCA மைதானம்
தென்னாபிரிக்கா எதிர் பாகிஸ்தான், NCC மைதானம்
பங்களாதேஷ் எதிர் பபுவா நியூ கினியா, CCC மைதானம்

பெப்ரவரி 8, புதன் கிழகிமை
பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், P. சரவணமுத்து மைதானம்
ஸ்கொட்லாந்து எதிர் தென்னாபிரிக்கா, MCA மைதானம்
இலங்கை எதிர் அயர்லாந்து, NCC மைதானம்
இந்தியா எதிர் தாய்லாந்து, CCC மைதானம்

பெப்ரவரி 10, வெள்ளிக்கிழமை
இந்தியா எதிர் அயர்லாந்து, P. சரவணமுத்து மைதானம்
தாய்லாந்து எதிர் ஜிம்பாப்வே, MCA மைதானம்
பபுவா நியூ கினியா எதிர் பாகிஸ்தான், NCC மைதானம்
பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து, CCC மைதானம்

பெப்ரவரி 11, சனிக்கிழமை
தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ், P சரவணமுத்து மைதானம்
ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூ கினியா, MCA மைதானம்
இலங்கை எதிர் ஜிம்பாப்வே, NCC மைதானம்
அயர்லாந்து எதிர் தாய்லாந்து, CCC மைதானம்

பெப்ரவரி 13, திங்கட்கிழமை
ஜிம்பாப்வே எதிர் இந்தியா, P. சரவணமுத்து மைதானம்
இலங்கை எதிர் தாய்லாந்து, MCA மைதானம்
தென்னாபிரிக்கா எதிர் பபுவா நியூ கினியா, NCC மைதானம்
பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து, CCC மைதானம்

சூப்பர் 6 போட்டிகள் (முதல் சுற்றில் இருந்து தெரிவாகும் அணிகள் இடையிலான போட்டிகள்)
பெப்ரவரி 15, போட்டி 1, P. சரவணமுத்து மைதானம். போட்டி 2, NCC மைதானம். போட்டி 3, CCC மைதானம்
பெப்ரவரி 17, போட்டி 4, P. சரவணமுத்து மைதானம். போட்டி 5, NCC மைதானம். போட்டி 6, CCC மைதானம்
பெப்ரவரி 19, போட்டி 7, P. சரவணமுத்து மைதானம், போட்டி 8, NCC மைதானம். போட்டி 9, CCC மைதானம்

இறுதிப் போட்டி பெப்ரவரி 21, P. சரவணமுத்து மைதானம்