ஜிம்பாப்வே கிரிக்கெட்டை இடை நீக்கம் செய்தது ஐசிசி

491

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ள காரணத்தால், அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதன்படி, ஐசிசியால் ஏற்பாடு செய்யப்படும் தொடர்களில் ஜிம்பாப்வே அணிக்கு பங்கேற்க முடியாது என்பதுடன், குறிப்பாக அடுத்து வரும் மகளிர் T20I உலகக் கிண்ணம் மற்றும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள T20I தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு அணிகளுக்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒரே அணியில் இணையும் கேன் வில்லியம்சன் மற்றும் பெய்லிஸ்

ஐசிசி உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து ………

இலண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஐசிசியின் சந்திப்பின் போது, ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையினுள் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இதில் கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையை, அந்தநாட்டு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆணையம் இடை நீக்கம் செய்திருந்தமையானது, ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் இருப்பதினை உறுதிப்படுத்தியிருந்தன. இதன் அடிப்படையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை, ஐசிசி சட்டக்கோவையின், வரைவு 2.4 (C) மற்றும் (C) ஆகியவற்றை மீறியுள்ள காரணத்தால், அந்த அணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து ஐசிசியின் தலைவர் சஷங்க் மனோஹர் குறிப்பிடுகையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் குற்றமானது ஐசிசியின் சட்டக்கோவையின் தீவிரமான விதிமுறை மீறல் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஐசிசியின் உறுப்புரிமையை பெற்றிருக்கும் கிரிக்கெட் சபை ஒன்றை இடைநீக்கம் செய்வதனை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் இருப்பதை நாம் முற்றிலும் தவிர்க்க முற்படுகின்றோம். அதன்படி, ஜிம்பாப்வே கிரிக்கெட் தீவிரமான விதிமுறை மீறலை மேற்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

முதல் நாளில் வலுவடைந்துள்ள தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி

சுற்றுலா இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் ……..

அதுமாத்திரமின்றி ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையை நீக்குவதற்கான மற்றுமொரு முக்கிய காரணமும் பார்க்கப்படுகிறது. ஐசிசியினால் வழங்கப்படும் நிதி, வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படாமல் ஜிம்பாப்வே அரசாங்கத்தால் பகிரப்படுகிறது எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. 

எவ்வாறாயினும், கடந்த மாதம் தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் சபை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுமாயின், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி குழு சந்திப்பின் போது, ஜிம்பாப்வேயின் இடை நீக்கம் தொடர்பில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில், ஜிம்பாப்வே தங்களுடைய கிரிக்கெட்டை ஐசிசியின் விதிமுறைக்கு ஏற்ப தொடரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<