இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை பெப். 21இல் நடத்த ஐ.சி.சி அனுமதி

147

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை சம்மதம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ டுபாய் சென்றிருந்தார்.

இந்த நிலையில், டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகத்தில் .சி.சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸனை நேற்றைய தினம் (20) சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இரண்டு வாரங்கள் பிற்போட்டமைக்கான காரணத்தை இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கு தமது பூரண சம்மதத்தை தெரிவித்திருந்த டேவிட் றிச்சர்ட்ஸன், ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துவதற்கு .சி.சி பூரண ஒத்துழைப் வழங்கவுள்ளதாகவும் அமைச்சரின் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>INSERT THE TWITTER LINK HERE<<

இந்த சந்திப்பினை அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் டுபாயில் இருந்து கருத்து வெளியிடுகையில், .சி.சியின் நிறைவேற்று அதிகாரியை நேற்று மதியம் சந்தித்தேன். இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை பிற்போட்டால் இலங்கையின் உறுப்புரிமை .சி.சியினால் இரத்து செய்யப்படும் என இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள ஒருசிலர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நான்கு வருட வேலைத்திட்டம்

இந்த நிலையில், பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இரண்டு வாரங்கள் பிற்போட்டமைக்கான காரணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான சூலானந்த பெரேரா கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். புதிய விளையாட்டுத்துறை சட்டமூலம் தொடர்பில் வெளியான வர்த்தமானியில் இருந்த குறைபாடுகள் காரணமாகவே சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி இரண்டு வாரங்கள் குறித்த தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே இதுதொடர்பில் நான் டேவிட் றிச்சர்ட்ஸனை தெளிவுபடுத்தினேன். அதற்கு அவர் .சி.சியின் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பெப்ரவரி 07ஆம் திகதி நடத்தப்பட இருந்தது. எனினும், புதிய விளையாட்டுத்துறை சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிப்பெயர்ப்புகளில் காணப்படுகின்ற பிழைகளை திருத்தவும், இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளை விசாரணை செய்யவும் கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இரண்டு வாரங்கள் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

வீரர்களை உள்வாங்க எனக்கும் இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர் – ஹரீன் பெர்னாண்டோ

இதேவேளை, இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் குறித்த இறுதி அறிவிப்பை தேர்தல் செயற்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதில் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால தரப்பில் மொஹான் டி சில்வா மற்றும் சம்மி சில்வாவும், ரணதுங்க தரப்பில் கே. மதிவாணன் மற்றும் ஜயந்த தர்மதாச ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்தி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பாவிட்டால் இலங்கையின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

அதேபோல இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களில் ஒருவரான மொஹான் டி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை தொடர்ந்து நடத்தாமல் பிற்போட்டு இலங்கை கிரிக்கெட் உறுப்பரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்யுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ .சி.சியின் பிரதான நிறைவேற்று அதிகாரியை சந்தித்து தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக டுபாய் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க