இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் விரிசலுக்கு விரைவில் ஐ.சி.சியினால் தீர்வு

237

இந்திய கிரிக்கெட் சபைக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால்  மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் அதிகளவில் பேசப்படுகின்ற விளையாட்டுதான் கிரிக்கெட். உலக கிரிக்கெட்டின் பிக் 3 என்றழைக்கப்படுகின்ற கிரிக்கெட் விளையாடும் 3 பிரதான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவது இதற்கு முக்கிய காரணம் என்றே கூறலாம். ஆனால், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுடன் காணப்படுகின்ற அரசியல் மற்றும் தீவிரவாத முறுகல் நிலை, இன்று முழு உலக கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமைகளை இழந்த சேனல் 9

கடந்த 40 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை உயர்தரமாக …

1947 ஆம் ஆண்டு முதல் இவ்விரண்டு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற முறுகல் நிலை, காஷ்மீர் எல்லைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டதுடன், இன்று அது தீவிரவாதத்தை போசிக்கின்ற இருப்பிடாகவும் அமைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனினும், இந்தியாவைப் போல, பாகிஸ்தானிலும் கிரிக்கெட் பிரல்பயமான விளையாட்டாகக் கருதப்படுவதால் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற முறுகல் நிலை, கிரிக்கெட் விளையாட்டிலும் முறுகல் நிலையையும், வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மறுமுனையில் பாகிஸ்தான் இந்திய எல்லைப்பிரச்சினை மற்றும் காஷ்மீர் யாருக்கு சொந்தமானது உள்ளிட்ட விடயங்கள் காரணமாக இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தொடர்ந்து விரிசில் காணப்பட்டு வருகின்றன.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்த அதேசமயம், இதுவரையில் இரு நாடுகளுக்குமிடையில் எந்தவொரு இருதரப்பு கிரிக்கெட் தொடரும் இடம்பெறவில்லை.

எனினும், கடந்த 2012 ஆம் ஆண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், .சி.சியினால் வெளியிடப்பட்ட எதிர்கால கிரிக்கெட் அட்டவணையின்படி, இவ்விரு அணிகளும் 2014-2022 காலப்பகுதியில் 6 தொடர்களைக் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கியிருந்தது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரை அந்நாட்டு மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்துவரும் இந்த தருணத்தில், இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு தொடர நடவடிக்கை எடுத்திருந்ததுடன், 70  மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் சபைக்கு எழுத்து மூலமாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையில் நடைபெறாமல் கைவிடப்பட்டுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடர்களினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு உதவுவதற்கு முன்வருமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, இவ்விரு நாடுகளின் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு மூவரடங்கிய விசேட குழுவொன்றை சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த 10 ஆம் திகதி நியமித்தது.

இதன்படி, இதுதொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளது.

எனவே .சி.சியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுவின் தலைவராக மகாராணி அப்புகாத்துகளில் (சட்டத்தரணி) ஒருவரான மைக்கல் பெலோவ் செயற்படவுள்ளார்.

ஆசிய கிண்ணத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஓரே குழுவில்

இந்தியாவில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண தொடர் ஐக்கிய அரபு …

அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பிணக்குகளைத் தீர்க்கும் குழுவில் அங்கம் வகிக்கும் ஜோன் போல்சன்,  அவுஸ்திரேலிய முன்னாள் நீதிபதி டாக்டர் அனாபெல் பெனெட் ஆகியோரை ஏனைய உறுப்பினர்களாக நியமித்துள்ளது.

எனவே இதன் மூலம், அரசியல் தலையீடுகள் மற்றும் தீவிர தாக்குதல் காரணமாக கிரிக்கெட் உலகின் பரம எதிரகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ள இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்கள், விரைவில் நடைபெற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.