அசூர ஆட்டத்தினை வெளிப்படுத்திய இப்ராஹிமொவிக் மற்றும் ஸேக்கோ

149
Zalatan-Ibrahimovic

ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் 32ஆம் சுற்றின் முதல் கட்டப் போட்டியொன்றில், ஸெல்டன் இப்ராஹிமொவிக் அபாரமாக ஆடி பெற்றுக்கொண்ட ஹட்ரிக் கோல்களினால் 3-0 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் யுனைடட் அணி, செயின்ட்-எட்டைன் அணியினை வீழ்த்தியுள்ளது.

இப்போட்டி ஆரம்பித்து 15ஆவது நிமிடத்தில், தனக்கு கிடைக்கப் பெற்ற இலகுவான ப்ரீ கிக் உதை மூலம் தனது முதல் கோலினை இப்ராஹிமொவிக் பெற்றார்.

ஜப்பான் உட்பட 3 நாடுகளுடன் மோதவுள்ள இலங்கை 16 வயதின்கீழ் அணி

இரண்டாவது பாதி ஆரம்பித்து சற்று நேரத்தில், தலையினால் பந்தினை தட்டி அடுத்த கோல் ஒன்றினை பெற இப்ராஹிமொவிக் முயற்சித்திருந்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது.

போட்டி நிறைவடைய 15 நிமிடங்களின் முன்னர், அணியின் சக வீரரான மர்கஸ் ரஷ்போர்ட்டிடம் இருந்து பெற்றுக்கொண்ட பந்தின் மூலம் இரண்டாவது கோலினை இப்ராஹிமொவிக் பெற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் தனது ஹெட்ரிக் கோலினை போட்டியின் 88ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற பெனால்டி உதை மூலம் பெற்றுக் கொண்டார்.

மன்செஸ்டர் அணியின், நட்சத்திர வீரர் போல் பொக்பா, தனது மூத்த சகோதரரான ப்லோரென்டின் எதிரணியில் இருக்க, இப்போட்டியில் விளையாடி இருந்தார். அதிகூடிய விலைக்கு வாங்கப்பட்டிருந்த ப்லோரென்டின் போட்டியின் இரண்டாம் பாதியில் கோல்பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பினை கம்பத்தில் அடித்து (தலை மூலம்) தவறவிட்டிருந்தார்.

ஸ்பெயினில் நடைபெற்ற இதே தொடரின் மற்றுமொரு போட்டியில், இரண்டாம் பாதியில் வெறும் 20 நிமிடத்திற்கு சற்று கூடிய நேர இடைவெளியில் மூன்று கோல்களை அதிரடியாகப் பெற்ற பொஸ்னிய ஸ்ட்ரைக்கர் ஸெக்கோ, விலாரல் அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் ரோமா அணிக்கு வெற்றியினை தேடித் தந்தார்.

மற்றுமொரு, ஆட்டத்தில் ஜென்ட்ஸ் அணியுடன் 1-0 எனத் தோல்வியடைந்திருக்கும் டொட்டேன்ஹம் அணியானது இத்தொடரில் முன்னேற கடின முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

இப்போட்டியில், பிரான்சின் ஸ்ட்ரைக்கர் ஜெரேமி பெர்பேட்டினால் மாத்திரமே கோலொன்றினை பெற முடிந்தது.

அதேபோன்று, ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் பெடரிகோ பெர்னாட்சி பெற்றுக்கொண்ட ஒரேயொரு கோலின் மூலம் சொந்த மைதானத்தில் வைத்து மொன்ச்சேன்க்ளாட்பாச் அணியினை பியோரென்டினா அணி தோற்கடித்துள்ளது.

அலெக்சான்ட்ரே லகஸெட் பெற்ற இரண்டு கோல்களின் பங்களிப்புடன், 4-1 என்ற கணக்கில் AZ அல்க்மார் அணியினை லையோன் அணி வீழ்த்தியுள்ளது.

3-0 என்ற கணக்கில் ஜெர்மன் அணியான ஸ்கெல்கே, PAOK அணியினை வீழ்த்தியுள்ளது. ஐரோப்பிய கால்பந்து லீக்கில் தனது 50ஆவது கோலினை க்ளாஸ்-ஜான் போட்டியின் இறுதி நேரத்தில் பெற்று ஸ்கெல்கே அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

அரிட்ஸ் அடுரிஸ் தனது 7 ஆவது கோலுடன் தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் அத்லெடிக் அணியை 3-2 என்ற கணக்கில், APOEL அணி வெற்றி கொண்டது.

அத்துடன், முதல் கட்டப்போட்டிகளில் க்ரெஸ்னோடர், ரொஸ்டொவ், சக்தார் டொனேட்ஸ்க், FC கொபேன்ஹேஜன், பெஸிக்டாஸ் மற்றும் அந்தர்லெட்ச் ஆகிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

அந்தர்லெட்ச் அணியானது ஸெனிட் அணியினை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதில் கானா நாட்டை சேர்ந்த ப்ரான்க் ஆர்ச்சியம்பொங் இரண்டு கோல்களையும் பெற்றுத் தந்திருந்தார்.