மாலிங்க ஓய்வு பற்றி சூசகம்

322

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்கவின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் மனநிறைவு பெற்றிருப்பதாக தனது ஓய்வு பற்றி மாலிங்க சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

[rev_slider LOLC]

மாலிங்க கடந்த ஒரு தசாப்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 157 போட்டிகளில் 110இல் மாலிங்க ஆடி அந்த அணிக்கு கௌரவத்தை சேர்த்துள்ளார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாலிங்க வியாழக்கிழமை (08) நியமிக்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மாலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக..

கிரிக்கெட் ஆடியது போதும் என்ற மனநிலையில் நான் இருக்கிறேன். தொடர்ந்தும் நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவேன் என்று நினைக்கவில்லை. விரைவில் எனது ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்” என்று PTI இந்திய செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில் மாலிங்க குறிப்பிட்டுள்ளார். செயின்ட் மொரிட்ஸ் பனி கிரிக்கெட் சவால் போட்டியில் பங்கேற்க சென்றபோதே மாலிங்க இந்த பேட்டியை வழங்கியுள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் சபையுடன் (SLC) நான் பேசவில்லை. எனினும் நான் நாடு திரும்பியதும் உள்ளூர் கிரிக்கெட்டின் மூலம் எனது உடல் எவ்வளவு ஒத்துழைக்கிறது என்று பார்ப்பேன். என்றாலும் இப்போது எனது ஐ.பி.எல். வாழ்க்கை முடிந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன்  ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில் நான் மீண்டும் விளையாடாமல் இருக்கக் கூடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வான்கடே அரங்கில் மும்பை இந்தியன்ஸின் நீல நிற ஜெர்சியை (Jersey) அணிந்த நிரம்பி வழியும் ரசிகர்கள் முன் போட்டியில் ஆடாதது கடினமாக இருக்கும் என்பது மாலிங்கவுக்கு தெரிந்தபோதும், தனது காலம் நிறைவடைந்திருப்பதை அவரது மனம் புரிந்துவைத்துள்ளது.

“எல்லோருக்குமே அந்த சமிக்ஞை கிடைக்கும். பெரும் ஜாம்பவானான வசீம் அக்ரமுக்குக் கூட தனது காலம் முடிந்து விட்டது தெரியும்” என்றும் அவர் கூறினார்.

டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும்  …

“என்னை தக்கவைத்துக் கொள்ளாத அவர்களது முடிவு பற்றி நான் அதிர்ச்சி அடையவில்லை. மும்பை இந்தியன்சுடன் சிறந்த 10 ஆண்டுகளை நான் செலவிட்டிருப்பதோடு அதிகம் சாதித்திருக்கிறேன். என்றாலும் இந்த ஆண்டில் உரிமையாளர்கள் என்னுடன் கதைத்து தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் இலக்கு பற்றி குறிப்பிட்டார்கள்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சிறந்த அணியை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இப்போது எனது கிரிக்கெட் வாழ்க்கை நேரம் முடிந்து விட்டதை நானும் கூட புரிந்துகொண்டேன்” என்றார் மாலிங்க.

தனியான பாணியில் பந்தை வீசக்கூடியவரான மாலிங்க, ஒரு ஆலோசகராக தான் புதிய அத்தியாயத்தை தொடர எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு 34 வயது என்பதால் இனியும் இளமையை பெற்றிருக்க முடியாது. எனது வாழ்வில் ஒரு மாற்றத்திற்கு இதுவே சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். மும்பை இந்தியன்ஸின் வழிகாட்டும் பங்கை மனதில் கொண்டிருக்கிறேன். புதிய இன்னிங்ஸ் ஒன்றை ஆரம்பிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று மாலிங்க குறிப்பிட்டார்.

மாலிங்க சர்வதேச போட்டி மற்றும் ஐ.பி.எல் போட்டிகள் உட்பட 248 T20 போட்டிகளில் விளையாடி 331 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் தனது பந்து வீச்சு முறைமூலம் T20 அரங்கில் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் வீரராக செயற்பட்டுள்ளமை மாலிங்கவின் சிறப்பம்சமாகும்.

ஐஸ் T-20 கிரிக்கெட் தொடரில் மஹேல, மாலிங்க பங்கேற்பு

உலக கிரிக்கெட் வரலாற்றில் பனிப் பாறைகளுக்கு மத்தியில்..

“ஒரு ஆலோசகராக எனது பணியின் மூலம் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வழி நடாத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது அறிவை அவர்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் பயிற்சியாளர் அரங்கில் என்னை மதிப்பிடவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்றும் மாலிங்க தனது எதிர்பார்ப்பைக் கூறினார்.

மும்பை இந்தியன்ஸில் இருந்து ஜாஸ்பிரிட் பும்ராஹ்வின் தோற்றம் பற்றி அறிந்திருக்கும் மாலிங்க, குறுகிய வடிவ போட்டிகளில் அவர் நம்பிக்கை தருபவராக குறிப்பிட்டுள்ளார்.

“கடைசி ஓவர்களில் ஒரு சிறந்த வீரராகவே பும்ராஹ் தோற்றம் பெற்றார். பதற்றத்திற்கு மத்தியில் இறுதி ஓவர்களில் பந்து வீசும் – என்னிடம் இருக்கின்ற திறமை அவரிடமும் உள்ளது. இதனால் அதிக அழுத்தம் கொண்ட தொடர் என்ற வகையில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு வேறுபட்ட குணாம்சம் தேவைப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

“தனது ஐ.பி.எல். வெற்றியை அவர் தனது சர்வதேச கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தியதே எனக்கு மேலும் பெருமை தருகிறது. தென்னாபிரிக்காவில் அவர் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதை கண்டு நான் அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன். சீரான ஆட்ட திறமை அவரது மிகப்பெரிய திறனாகும்” என்றார் மாலிங்க.