கால்பந்தில் ஆபாச பார்வையை காண்பிக்க முயற்சிக்கும் கெமராக்கள்

4074

நேரடி கால்பந்து ஒளிபரப்புகளின்போது அழகான பெண்களை காண்பிப்பது கவலையானது என்று எந்த கால்பந்து ரசிகனும் நினைப்பதில்லை. பெண்களின் அழகை ரசிப்பதற்கு எந்த ரசிகனுக்கும் தடை இல்லை. ஆனால், ஆபாசமான காட்சிகள் வரும்போது விளையாட்டின் மீது நாட்டம் கொண்ட மனம் ஏதாவது ஒரு வகையில் சலனப்படுகிறதோ, என்ற கேள்வி எழுகிறது.

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் …..

‘கவர்ச்சியான பெண்களை நெருக்கமாக காட்டி கால்பந்து விளையாட்டுக்கு ஆபாச பார்வை ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் கெமராக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது’ என்று உலக கால்பந்து சம்மேளனத்தின் பன்முகத்தன்மைக்கு பொறுப்பான பெட்ரிகோ அடியேச் கூறுகிறார். The Independent இணையதளத்திற்கு அளித்த போட்டியிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவில் நடைபெற்ற 2018 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் முழுவதிலும் அது பற்றி தாம் அதிக அவதானம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது உலகக் கால்பந்து சம்மேளனத்தின் முடிவா? என்று அவரிடம் கேட்டபோது, ‘இது எதிர்காலத்தில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று’ என்று பதிலளித்தார். அதாவது இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது என்பதே இதன்மூலம் அர்த்தம் கொள்ள முடிகிறது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பின் உச்ச கட்டத்தை எட்டியபோது கால்பந்து பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள் கூட அதில் நாட்டம் காண ஆரம்பித்தனர். கால்பந்து நேரடி ஒளிபரப்பை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் பின்னணியில் அரங்கில் இருக்கும் ரசிகர்களின் காட்சிகளும் முக்கிய விடயமாக மாறியிருக்கியது.

‘SEX’ என்ற சொல்லை கூகுளில் தேடுபவர்களில் அதிகம் பேர் இலங்கையர்களாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. அப்படித்தான் இலங்கையர்கள் அதிகம் பேர் உலகக் கிண்ணத்தோடு கால்பந்து நேரடி ஒளிபரப்பை பார்ப்பதில் நாட்டம் காண்பிப்பதில் கால்பந்துக்கு அப்பால் அரங்கில் இருக்கும் கவர்ச்சிகரமான பெண்களின் காட்சிகளும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும்….

உண்மையிலேயே கால்பந்து விளையாட்டை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவாகவே இருக்கும். சிலவேளைகளில் கால்பந்து விளையாட்டுப் பற்றி ஞாபகம் வருவதே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் மாத்திரமாகும். அனைத்து வகைக் கால்பந்து குறித்தும் கடும் பிரியம் கொண்டவர்களும் இங்கு இல்லாமல் இல்லை.

‘தெளிவான சாட்சிகள் வெளிப்படும்போது நாம் ஒவ்வொரு காரணமாக ஆராய்ந்து வருகிறோம். சுயாதீன ஒளிபரப்பாளர்கள் மூலம் நாம் அதனை செய்தோம். அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர்கள் மூலமும் நாம் அதனை செய்திருக்கிறோம்’ என்று இந்த ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் பற்றி அடியேச் கூறினார்.

உலகக் கிண்ண போட்டியில் செய்தி சேகரிப்பின்போது கட்டிப்பிடிப்பது மற்றும் தேவையற்ற வகையில் தொடுவது போன்ற தொந்தரவுக்கு உள்ளாகும் செய்தியாளர்கள் பற்றி 30க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக உலக கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக இயக்குனர் பியாரா பொவர் கூறுகிறார். கீழே இருக்கும் வீடியோ அவ்வாறான ஒன்று,

இவ்வாறான விடயங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றபோதும் இப்படி செயற்படும் அனைவருமே மோசமான மனநிலை கொண்டவர்கள் என்று கூறுவதும் நியாயமற்றது. சிலவேளை அன்றைய தினத்தில் இருந்த மகிழ்ச்சியான தருணத்தில் ரசிகர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், குறித்த பெண் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக இருந்தால் கட்டிப்பிடிப்பது, தொடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு விடயம் ‘ஆண்’ ஊடகவியலாளர் ஒருவருக்கு ‘பெண்’ ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் அது பற்றி உலகம் அலட்டிக்கொள்வதில்லை. பாலின சமத்துவம் பற்றி நாம் விரிவான ஒரு விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது என்பதை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கால்பந்து விளையாட்டை அதன் போட்டித் தன்மை மற்றும் பரபரப்பை மாத்திரம் வைத்து பார்த்து ரசிப்பதாக கூறினால் அது மிகப்பெரிய பொய். ஆனால், விளையாட்டுக்கு அப்பால் இருக்கும் ஒரு விடயம் அந்த விளையாட்டையே பாதிக்கச் செய்யும் காரணியாக மாறினால் அது நிச்சயம் அதிகாரிகளின் கவனத்திற்கு வர வேண்டும்.

எவ்வாறாயினும் கால்பந்தை ரசிப்பவர்கள் என்ற வகையில் அழகான பெண்கள் மற்றும் அரங்கில் நிலவும் களியாட்ட காட்சிகளை படம் பிடிக்காமல் தவிர்க்கும் கெமராக்காரர்கள் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். ரசிகர்கள் என்ற வகையில் நாங்களும் கூட அழகான காட்சிகளை பார்க்க ஆசைப்படுபவர்கள் என்பதை 20 மில்லியன் இலங்கையர்கள் சார்பில் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

‘என்றாலும், ஆபாசத்தை அல்ல, அன்பை பரப்புவோம்.’

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க