இந்தியாவுடனான 3ஆவது டி20யிலிருந்து இசுரு உதான விலகல்

76

இந்தியாவுக்கு எதிராக நாளை (10) நடைபெறவுள்ள 3ஆவதும், இறுதியுமான டி20 தொடரிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான விலகுவதாக அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். 

இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறதுகுவஹாத்தியில் நடைபெறவிருந்த முதலாவது போட்டி ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியாஇலங்கை இடையிலான 2ஆவது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் (07) நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை எடுத்தது. 143 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 பந்துகள் மீதம் இருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை – ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் இம்மாத இறுதியில்

தற்போது இந்தியாவுடன் T20 தொடரில் ஆடிவரும் இலங்கை கிரிக்கெட் அணி குறித்த……..

இந்த நிலையில், இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட்ட போது இசுரு உதானவின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக உடைமாற்றும் அறைக்கு திரும்பிய அவர், மீண்டும் களமிறங்கவில்லை.

இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், இசுரு உதான அதிக வலியுடன் காணப்பட்டார். அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தியா அணியுடனான 3ஆவது போட்டியில் இசுரு உதான விளையாட மாட்டார்” என தெரிவிக்க்பபட்டுள்ளது

இதேநேரம், அவரது காயம் குணமடையும் பட்சத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் அவர் விளையாடுவார் என மிக்கி ஆர்தர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, 2ஆவது போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இசுரு உதான தொடர்பில் பேசிய லசித் மாலிங்க, அவர் எமது பிரதான பந்துவீச்சாளர் ஆவார். இந்த வடிவத்தில் மிகவும் அனுபவமிக்க வீர்ர்களில் ஒருவராக உள்ளார். ஆனால், அவர் பந்துவீச முன் உபாதைக்குள்ளாகியது கவலையளிக்கிறது என தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<