அணியை வெற்றி பெற வைத்து தடைக்குள்ளான ஜெசன் ஹோல்டர்

494
ICC

உரிய நேரத்திற்குள் பந்துவீசாததன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அதன் தலைவருக்கும் .சி.சி அபராதம் விதித்துள்ளது. மேலும், 12 மாதங்களுக்குள் மீண்டுமொருமுறை அதே தவறை செய்ததன் காரணமாக அணியின் தலைவர் ஜெசன் ஹோல்டருக்கு ஐ.சி.சி இனால் ஒரு போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போன்றவற்றில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு நீண்டநாள் சுற்றுப்பயணம் ஒன்றினை இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கொண்டுள்ளது.

புதிய டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (05)…

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.  

டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த மாதம் 31ஆம் திகதி அண்டியூகாவில் ஆரம்பமாகி கடந்த சனிக்கிழமை (02) மூன்று நாட்களுடன் நிறைவுக்கு வந்திருந்தது. குறித்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தாலும், .சி.சி இனுடைய சட்டங்களுக்கு அமைவாக செயற்படாததன் காரணமாக அணியின் தலைவர் ஜெசன் ஹோல்டர் உட்பட ஏனைய பத்து வீரர்களுக்கும் .சி.சி அபராதம் விதித்துள்ளது.  

மேலும், அணியின் தலைவரான ஜெசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட .சி.சி தடையும் விதித்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் 9ஆம் திகதி சென்.லூசியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மேற்கிந்திய தீவுகள் அணியானது தங்களுக்கு பந்துவீசுவதற்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்களினை குறைவாக வீசியிருந்தது. இதன் காரணமாக குறித்த இரு ஓவர்களையும் வீசுவதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

.சி.சி இனுடைய இலக்கம் 2.22.1 சரத்தில் குறிப்பிடும் அணித்தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும் குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டு ஓவர்களுக்கான கணக்காக அணியின் தலைவராக செயற்பட்ட ஜெசன் ஹோல்டருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீத அபராத தொகையும், போட்டியில் விளையாடிய ஏனைய பத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதமும் என்ற அடிப்படையில் .சி.சி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

.சி.சி இனுடைய குறித்த சரத்தில் உள்ளடங்கும் விதிமுறைகளின் பிரகாரம் இவ்வாறு மந்த கதியில் பந்து விச்சை மேற்கொள்ளும் அணியின் தலைவர் குறித்த அபராதம் விதிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வருடங்களுக்குள், அதாவது 12 மாதங்களுக்குள் மீண்டுமொரு முறை அணித்தலைவராக இதேபோன்று, மந்த கதியிலான பந்துவீச்சு பிரதியை பதிவு செய்வாராயின் அவருக்கு போட்டித் தடை விதிக்கப்படும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

68 வயதில் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்…

அதன் பிரகாரம் குறித்த சரத்துக்கு சான்றானதொரு சம்பவம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2018 ஜூன் மாதம் பார்படோஸில் நிறைவுக்கு வந்த இலங்கைமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போதும் மந்த கதியிலானபந்து வீச்சு பிரதியை பதிவு செய்தார் என்ற காரணத்திற்காக அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயற்பட்ட ஜெசன் ஹோல்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

ஆகவே, .சி.சி வழங்கிய எச்சரிக்கை காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையிலேயே ஐ.சி.சி ஜெசன் ஹோல்டருக்கு ஒரு போட்டித்தடையை விதித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான குமார் தர்மசேன, கிறிஸ் கெப்பனி மற்றும் மூன்றாம் நடுவர் ரொட் டக்கர் ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட குறித்த போட்டியின் மத்தியஸ்தரான ஜெப் க்ரோவ் மூலமாக .சி.சி இனால் இவ்வாறு அபராதமும், ஜெசன் ஹோல்டருக்கு போட்டித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜெசன் ஹோல்டர் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் .சி.சி தெரிவித்துள்ளது.

ஜெசன் ஹோல்டரின் தடையால் இறுதி டெஸ்ட் போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் தலைவராக கார்லஸ் பிரத்வெயிட் செயற்படுவார் என மேந்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<