ஹேரத் விரும்பும் காலம் வரை தனது பாணியில் விளையாட வேண்டும் – ரிச்சர்ட் ஹார்ட்லி

1246

இலங்கை அணியின் இடது கை சுழல் ஜாம்பவான் ரங்கன ஹேரத் தான் விரும்பும் காலம் வரை கிரிக்கெட் உலகில் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என டெஸ்ட் கிரிக்கெட் உலகில் 400 விக்கெட்டுக்களை எடுத்த முதல் வீரரான சேர் ரிச்சர்ட் ஹார்ட்லி தெரிவித்துள்ளார்.

தில்ருவான் பெரேராவின் அதிரடி சுழலினால் டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின்…

கடந்த வாரம் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஹேரத் தனது 39வது வயதில் 400 விக்கெட்டுக்களைப் பெற்று கிரிக்கெட் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். இதன் போது இச்சாதனையை புரிந்த ரிச்சர்ட் ஹர்ட்லியை விட அதிக வயதில் இச்சாதனையைப் புரிந்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஹேரத் தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சேர் ரிச்சர்ட் ஹார்ட்லி ரங்கன ஹேரத் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் விளையாட்டு மீதான விருப்பு குறையும் போதே வயது ஒரு தடையாக அமையும். மேலும் மேலும் ஒரு வீரரின் உடல் தகுதி காயங்கள் வலிகளினால் சவாலுக்கு உள்ளாகும் போதும் விளையாட்டின் மீதான விருப்பு குறையும்.

நான் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வயதான வீரர் என்பதை ஒரு பெருமையாகவோ அல்லது ஒரு சாதனையாகவோ கருதவில்லை. அது எனது 18 வருடகால கிரிக்கெட் அனுபவத்தின் உச்சமாகவே கருதுகிறேன். என் வாழ்வின் உச்ச கட்ட அந்த பெறுபேற்றை நான் அடைந்தது 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியாகும். ஒருவரின் விளையாட்டு வெளிப்பாடு சிறந்த நிலையில் இல்லாதுவிடின் அவர் ஒய்வு பெறுவது சிறந்தது.

நான் 39 வயதாக இருக்கும் போதே அந்த நிலைமைக்கு முகம் கொடுத்தேன் இருந்த போதும் நான் எனது இறுதிப் பந்தில் விக்கெட்டினைக் கைப்பற்றியதுடன் அப்போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினேன். எனவே ஹேரத் தான் விரும்பும் காலம் வரை தனது சிறப்பான விளையாட்டினை தொடர வேண்டும் என தெரிவித்தார்.

சேர் ரிச்சர்ட் ஹார்ட்லி மொத்தமாக 431 விக்கெட்டுக்களைப் பெற்றுள்ள ஒரு சிறந்த சாதனை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.