கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஷாமர கபுகெதர!

103

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷாமர கபுகெதர அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் 11 வருடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ள ஷாமர கபுகெதர, 8 டெஸ்ட் போட்டிகள் உட்பட 163 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 2,500 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார்

கண்டிதர்மராஜ கல்லூரியில் இருந்து இலங்கை அணிக்கு உள்வாங்கப்பட்ட ஷாமர கபுகெதர, தன்னுடைய 19வது வயதில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2006ம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினார்.  

இயற்கையாகவே வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவராகவும், பௌண்டரிகளை இலகுவாக விளாசக்கூடியவருமான ஷாமர கபுகெதர 2006 – 2012ம் ஆண்டுவரை இலங்கை அணிக்குள் இடத்தை பிடித்திருந்தார். எனினும், இதற்கிடையில் அவர் அவ்வப்போது அணியிலிருந்து நீக்கப்பட்டும், உள்வாங்கப்பட்டும் வந்தார். எனினும், குறித்த காலத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திவந்த இவர், 13 அரைச் சதங்களை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.  

BPL 2019: 4 ஓட்டங்களினால் கன்னி சதத்தை தவறவிட்ட பானுக ராஜபக்ஷ

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் கொமில்லா வோரியர்ஸ் அணிக்காக ……….

இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை அணிக்கு மறக்கமுடியாத தருணம் 2010ம் ஆண்டு நடைபெற்ற T20I உலகக் கிண்ணம். குறித்த T20I உலகக் கிண்ணத்தின் 23வது போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி போட்டியில் வெற்றிபெற்று, இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியிருந்தது

இந்தப் போட்டியில் இறுதிப் பந்துக்கு 3 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில், துடுப்பெடுத்தாடிய ஷாமர கபுகெதர, அசிஸ் நெஹ்ராவின் பந்துக்கு சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்

அதேநேரம், கடந்த 2017ம் ஆண்டு இலங்கை அணிக்குள் மீள்வருகையை பெற்றிருந்த கபுகெதர, பல்லேகலையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், உபுல் தரங்கவுக்கு பதிலாக தற்காலிக அணித் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய கமிந்து மெண்டிஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கமிந்து ………..

இதேவேளை, உள்ளூர் போட்டிகளில் எஸ்.எஸ்.சி. அணிக்காக விளையாடும் ஷாமர கபுகெதர கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி நடைபெற்ற கடற்படை அணிக்கு எதிரான லிஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடியிருந்ததுடன், குறித்தப் போட்டியில் 58 ஓட்டங்களை பெற்றிருந்தார்.  

அதுமாத்திரமின்றி, ஷாமர கபுகெதர, இங்கிலாந்தின் கௌண்டி கிரிக்கெட் தொடரில் கடந்த பருவகாலத்தில் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<