மத்திய ஓவர்களில் நாம் சிறப்பாக செயற்பட்டிருக்க வேண்டும் – சர்பராஸ்

74
AFP

நேற்று (30) கராச்சியில் இடம்பெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை பெற்றுக் கொடுத்திருந்தது.  

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்றைய போட்டியில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்ததுடன், இப்போட்டி மூலம் 10 வருடங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பாகிஸ்தான் மண்ணுக்கு மீள் வருவதற்கான ஒரு அத்திவாரமும் இடப்பட்டிருந்தது. 

ஷானக, ஷெஹானின் சாதனை இணைப்பாட்டம் வீண்

இலங்கை அணிக்கு எதிராக கராச்சி….

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டும், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவாகிய பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் உஸ்மான் சின்வாரியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். 

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு 306 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்த வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் ஒன்றை காண்பிக்க உஸ்மான் சின்வாரி பிரதான காரணமாக அமைந்திருந்தார்.  

பின்னர் செஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரின் போராட்டத்தினால் இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு சற்று அச்சுறுத்தலாய் அமைந்த போதிலும் இறுதியில் தோல்வியினேயே சந்தித்தது.  

இப்போட்டியில் உஸ்மான் சின்வாரி மொத்தமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது தடவையாக 5 விக்கெட்டுக்கள் கொண்ட பந்துவீச்சு பிரதியினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமான தனது பந்துவீச்சு குறித்து பேசியிருந்த உஸ்மான் சின்வாரி இவ்வாறு தெரிவித்திருந்தார். 

”கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்த பின்னர் இப்படியான ஒரு மறுபிரவேசத்தினை காட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. மைதானம் மெதுவாக இருந்த காரணத்தினால் சில போட்டித்திட்டங்களுடன் இருந்தோம். அதோடு நாம் (பந்துவீச்சில்) காட்டிய ஆரம்பத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையும் இருந்தது.”

தோல்வியிலும் சாதனை படைத்த ஷெஹான் ஜயசூரிய – தசுன் ஷானக்க ஜோடி

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான்…..

மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பராஸ் அஹ்மட் தமது அணியின் பந்துவீச்சுத்தரப்பு இலங்கையின் துடுப்பாட்டத்தின் போது விட்ட பிழைகளை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 

”போட்டியின் மத்திய ஓவர்களில் நாம் செயற்படும் விதம் இன்னும் முன்னேற வேண்டும்.“

இலங்கை அணியின் வீரர்களான தசுன் ஷானக்க மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் பாகிஸ்தான் அணியின் மத்திய ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டு 177 ஓட்டங்கள் என்கிற சாதனை இணைப்பாட்டத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சர்பராஸ் அஹ்மட் தமது அணியின் துடுப்பாட்ட வீரர்களை பாராட்டியிருந்ததோடு, இலங்கை அணியுடனான தொடரில் பாகிஸ்தானின் இளம் வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

”நாங்கள் துடுப்பாடிய விதமும், நாங்கள் போட்டியில் பெற்றுக்கொண்ட ஓட்டங்களும் நன்றாக இருந்தது. மைதானம் மெதுவாக இருந்த போதும் நாம் சிறந்த முறையில் செயற்பட்டிருந்ததோம். அதோடு, இத்தொடரில் எமது இளம் வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கவும் காத்திருக்கின்றோம்.”

இலங்கை அணியுடனான தொடரில் வெற்றி பெற்றிருக்கும், பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. இந்நிலையில், தொடரின் கடைசியும் இறுதியுமான போட்டி நாளை (2) இரண்டாவது போட்டி இடம்பெற்ற அதே கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<