வீரர்களை உள்வாங்க எனக்கும் இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர் – ஹரீன் பெர்னாண்டோ

230

இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்களை இணைத்துக் கொள்வதற்காக தனக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊழல் மோசடி பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஐ.சி.சி இனால் 2 வாரகால அவகாசம்

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை …

BBC சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கு இலஞ்சம் தருவதாக என்னை அணுகியிருந்தார்கள். எனவே குறித்த விடயம் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலுக்கு அறிவித்தேன். அவர் உடனே தலையில் கையை வைத்துக் கொண்டார்.

இவ்வாறு என்னிடம் கேட்டபோது நானும் தலையில் கை வைத்தேன். அப்போதுதான் என்னையும் இந்த சதியில் சிக்கவைப்பதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என நினைத்தேன். அதன் பிறகுதான் எண்ணினேன் இதற்கு முன்னரும் இவ்வாறுதான் நடந்திருக்கும்” என அமைச்சர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கே இலஞ்சம் வழங்க முற்பட்டமை ஊடாக, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் எந்தளவிற்கு ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றது என்பதை உணர முடிகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் பல தகவல்களை ஐ.சி.சி இன் அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேபோன்று, எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுகின்ற வீரர்களுக்கு தண்டணை வழங்குவதற்கான புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்த்துள்ளேன். அத்துடன், கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரத்தில் கிரிக்கெட் யாப்பை மாற்றுவதற்கான குழுவொன்றையும் நியமித்து அதையும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், உண்மையில் ரொஷான் மஹானாம தலைமையில் இடைக்கால நிர்வாக சபையை நியமிக்கத்தான் எண்ணியிருந்தேன். ஆனால், ஐ.சி.சி இதற்கு அனுமதி வழங்காத காரணத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் ஐ.சி.சி இன் ஊழல் அதிகாரியொருவரை நியமிக்க இணக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு சர்வதேச கிரிக்கெட் …

இது இவ்வாறிருக்க, இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படுவார் என தெரிவுக்குழுவினர் தன்னிடம் அறிவித்திருந்ததாக அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

இதனிடையே, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ரொஷான் மஹானாமவுடன் அங்கு சென்று இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<