இந்தோனேஷிய பகிரங்க குத்துச்சண்டையில் ஹன்சிகாவுக்கு வெண்கலப் பதக்கம்

91

இந்தோனேஷியாவின் மனாடோவிஸில் நடைபெற்ற இந்தோனேஷிய பொலிஸ் ஆணையாளர் கிண்ண (கெப்போல்ரி கிண்ணம்) சர்வதேச பகிரங்க குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கையின் கேஷானி ஹன்சிகா வெண்கலப் பதக்கம் வென்றார்.   

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவின் பாலம்பேங்கில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கு முன்னதாக முன்னோடிப் போட்டியாக நடைபெற்ற இந்த பகிரங்க குத்துச்சண்டைப் போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.  

தேசிய மட்ட பளுதூக்களில் வேம்படி மகளிருக்கு இரண்டு பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் …

இதில் 57 கிலோ கிராம் எடைப் பிரிவுக்காக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனை ஸ்டெல்லா மாமவை முதல் சுற்றிலேயே வீழ்த்திய இலங்கை வீராங்கனை கேஷானி ஹன்சிகா, அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அரையிறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை வியூஓவ் திவியுடன் போட்டியிட்ட ஹன்சிகா, 3-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

இதன்மூலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பதக்கமொன்றை வெல்லக்கூடிய வீராங்கனையாகவும் அவர் இடம்பிடித்தார்.

27 வயதான ஹன்சிகா, இலங்கையின் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மாஸ் நிறுவனத்தின் மனித வளப் பிரிவு ஊழியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு ஹன்சிகா கருத்து வெளியிடுகையில், ”போட்டியின் இறுதித் தருவாயில் தோல்வியைத் தழுவியது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. நான் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தேன். ஆனால், எனக்கு எதிபாராத முடிவொன்றே கிடைத்தது. எனவே, எனது ஆற்றல் குறித்து திருப்தி அடைவதுடன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கைக்காக பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

இம்முறை தேசிய விளையாட்டு பெருவிழா பொலன்னறுவையில்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து …

முன்னதாக இம்மாத முற்பகுதியில் மொங்கோலியாவில் நடைபெற்ற யூலான் பட்டார் கிண்ண பகிரங்க குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான அனூஷா கொடித்துவக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

எனினும், இந்தப் போட்டித் தொடரிலும் இலங்கை சார்பாக கலந்துகொண்ட அனூஷா, ஜப்பான் வீராங்கனை அயா ஷின் மொட்டோவிடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.

கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனையாக அனூஷா கொடித்துவக்கு வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…