யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர்.  

இந்த பருவகாலத்திற்கான போட்டிகள் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தற்போது ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு இடம்பெறும் ஒரேயொரு கிரிக்கெட் போட்டித்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்

யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள்….

இம்முறை ஜி.பி.எல் போட்டித் தொடரில் குழு A இல் ரில்கோ றைடர்ஸ், டீப் டைவேர்ஸ் மற்றும் நோர்த் டிரகன்ஸ் ஆகிய அணிகளும், குழு B இல் ரொப் செலஞ்சேர்ஸ், சிவன் வோரியர்ஸ், சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் ஆகிய அணிகளும் களங்கண்டிருந்தன.

இப் போட்டி நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக லயன் திரு. ஆறுமுகநாதனும், சிறப்பு விருந்தினராக மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவியும் கோலூனறிப் பாய்தலில் இலங்கை தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ள வீராங்கனையுமான அனித்தா ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

குழு நிலைப்போட்டிகள்

குழு – A

ரில்கோ றைடேர்ஸ் எதிர் நோர்த் டிராகன்ஸ்

ரில்கோ றைடேர்ஸ்: 65/3 (05) – மதுசன் 35(14), வினோத் 1/06

நோர்த் டிராகன்ஸ்: 66/2 (3.2)

போட்டி முடிவு – 10 பந்துகள் மீதமாக இருக்கையில் நோர்த் டிராகன்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – ஸ்ரீகுகன்

நோர்த் டிராகன்ஸ் எதிர் டீப் டைவேர்ஸ்

டீப் டைவேர்ஸ்: 70/2(05) – ஜேம்ஸ் 54(14), பிருந்தாபன் 2/12

நோர்த் டிராகன்ஸ்: 75/1 (04) – வினோத் 55(18), வதுசனன் 1/18

போட்டி முடிவு – 06 பந்துகள் மீதமிருக்கையில் 04 விக்கெட்டுகளால் நோர்த் டிராகன்ஸ் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – வினோத்

டீப் டைவேர்ஸ் எதிர் ரில்கோ றைடேர்ஸ்

டீப் டைவேர்ஸ்: 73/3(05) – ஜேம்ஸ் 24(10), கல்கோகன் 1/15

ரில்கோ றைடேர்ஸ்: 77/3(04) – மதுசன் 52(18) சரன்ராஜ் 3/09

போட்டி முடிவு – 06 பந்துகள் மீதமிருக்கையில் 02 விக்கெட்டுகளால் ரில்கோ றைடேர்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – மதுசன்

குழு – B

ரொப் செலஞ்சேர்ஸ் எதிர் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்

ரொப் செலஞ்சேர்ஸ்: 64/3 (05) – ஜனுதாஸ் 48(18), சுஜந்தன் 1/08

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்: 65/2(4.5) – சுஜந்தன் 52(19), விதுன் 2/07

போட்டி முடிவு – ஒரு பந்து மீதமாக இருக்கையில் 3 விக்கெட்டுகளால் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – சுஜந்தன்

சிவன் வோரியர்ஸ் எதிர் ரொப் செலஞ்சேர்ஸ்

ரொப் செலஞ்சேர்ஸ்: 60/1(05) – ஐனுதாஸ் 25(14), கஜானந் 19(09), சாகித்தியன் 1/14

சிவன் வோரியர்ஸ்: 61/1 (3.5) – சாகித்தியன் 30(11), சுதர்சன் 27(10), பகீரதன் 1/15

போட்டி முடிவு – 07 பந்துகள் மீதமாக இருக்கையில் 4 விக்கெட்டுகளால் சிவன் வோரியர்ஸ் அணியினர் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – சாகித்தியன்  

ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள பல மாற்றங்களுடனான இலங்கைக் குழாம்

ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு..

சிவன் வோரியர்ஸ் எதிர் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்: 72/4(05) – ஜெயரூபன் 25(13), செல்ரன் 19(05), ரஜீவ் 2/08

சிவன் வோரியர்ஸ்: 38/5 (04) – சாகித்தியன் 13(08), நிறோஜன் 3/08

போட்டி முடிவு – 34 ஓட்டங்களால் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினர் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – நிறோஜன்

குழு A

அணி போட்டி வெற்றி தோல்வி முடிவு
நோர்த் டிராகன்ஸ் 2 2 0 அரையிறுதிக்கு தெரிவு
ரில்கோ றைடேர்ஸ் 2 1 1 அரையிறுதிக்கு தெரிவு
டீப் டைவேர்ஸ் 2 0 2 தொடரிலிருந்து வெளியேற்றம்

குழு B

அணி போட்டி வெற்றி தோல்வி முடிவு
சயன்ஸ் வேல்ட் 2 2 0 அரையிறுதிக்கு தெரிவு
சிவன் வோரியர்ஸ் 2 1 1 அரையிறுதிக்கு தெரிவு
ரொப் செலஞ்சேர்ஸ் 2 0 2 தொடரிலிருந்து வெளியேற்றம்

முதலாவது அரையிறுதி  

நோர்த் டிராகன்ஸ் எதிர் சிவன் வோரியர்ஸ்

குழு A இன் முதலாவது அணியான நோர்த் டிராகன்ஸ் அணி குழு B இன் இரண்டாவது அணியான சிவன் வோரியர்ஸ் அணியை எதிர்த்து முதலாவது அரையிறுதியில் மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த் டிராகன்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் வோரியர்ஸ் அணியினர் சாகித்தியனினது 12 ஓட்டங்கள் மற்றும் பிரதீப்பினது 13 ஓட்டங்களினது துணையுடன் 03 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களினைப் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் அருண்ராஜ், பிரதாபன் ஆகியோர் தலா 08 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நோர்த் டிராகன்ஸ் அணியின் அருண்ராஜ் 09 ஓட்டங்களுடன் பிரதீப்பினால் களம்விட்டு அகற்றப்பட, தொடர்ந்தும் நிதானித்த வினோத் (30), ஸ்ரீகுகன்(15) ஆகியோரது பங்களிப்பினால் 05 பந்துகள் மீதமாக இருக்கையில் வெற்றியிலக்கினை அடைந்தனர்.

இதன் காரணமாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

போட்டி முடிவு – 05 பந்துகள் மீதமாக இருக்கையில் 04 விக்கெட்டுகளால் நோர்த் டிராகன்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – வினோத்

>> போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட  <<

இரண்டாவது அரையிறுதி

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் எதிர் ரில்கோ றைடேர்ஸ்

குழு B இல் முதலாவது இடம் பிடித்த சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியும், குழு A இல் இரண்டாவது இடம் பிடித்த ரில்கோ றைடேர்ஸ் அணியும் இவ் அரையிறுதிப் போட்டியில் மோதியிருந்தன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். அதனடிப்படையில், முதலில் ஆடக் களம்  புகுந்த ரில்கோ றைடேர்ஸ் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மதுசன், கல்கோகன் இணை சிறப்பான ஆரம்பத்தினை வழங்கியது.

கல்கோகன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் மதுசன் ஆட்டமிழக்கது 14 பந்துகளில் 52. ஓட்டங்களினை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்து தொடரில் தனது இரண்டாவது அரைச் சதத்தினை பதிவுசெய்தார். மதுசனின் அரைச் சதத்தின் துணையுடன் 02 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 87 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டனர் ரில்கோ றைடேர்ஸ் அணியினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினரின் ஓட்ட எண்ணிக்கையைக்  கட்டுப்படுத்தி ரில்கோ அணியினர் பந்து வீசிய போதும், உதிரிகளாக 25 ஓட்டங்களும், இறுதி நேர அதிரடி மூலம் சுஜந்தன் 17 ஓட்டங்களினை சேகரித்த போதும் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினரால் ஒரு பந்து மீதமாக இருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  70 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

பந்து வீச்சில் மதுசன் 08 ஓட்டங்களிற்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டி முடிவு – 17 ஓட்டங்களால் ரில்கோ றைடேர்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – மதுசன்

இறுதிப்  போட்டி

இரண்டாவது ஜி.பி.எல் இறுதிப் போட்டியில் தொடர் வெற்றிகளுடன் நோர்த் டிராகன்ஸ் அணியினரும், கத்துக்குட்டிகளாக கருதப்பட்ட போதும் சிறப்பான பெறுதியினை வெளிப்படுத்திய ரில்கோ றைடேர்ஸ் அணியினரும் தீர்மானம்மிக்க இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

தொடர்ச்சியாக நான்காவது போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நோர்த் டிராகன்ஸ் அணியின் தலைவர் வினோத் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார்.

முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்காக களம்புகுந்த ரில்கோ றைடேர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மதுசன், கல்கோகன் இணை முதல் இரண்டு பந்துப்பரிமாற்றங்களிலும் வேகமாக ஆடி முறையே 14, 18 ஓட்டங்களினைப் பெற்றனர்.

மூன்றாவது பந்துப்பரிமாற்றத்தினை வீசிய ஸ்ரீகுகன் 03 ஓட்டமற்ற பந்துகள் உள்ளடங்கலாக 03 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து தனது பந்துப் பரிமாற்றத்தினை நிறைவு செய்தார். பிருந்தாபன் வீசிய நான்காவது பந்துப் பரிமாற்றத்தில் 21 ஓட்டங்கள் சேகரிக்கப்பட்டது. இறுதிப் பந்துப் பரிமாற்றத்தினை வீசிய வினோத் 04 ஓட்டமற்ற பந்துகள் உள்ளடங்கலாக 08 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார்.

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்

20 வயதின் கீழ் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின்..

மதுசனின் 39(18) ஓட்டங்களினதும் கல்கோகனின் 23(12) ஓட்டங்களினதும் துணையுடன் 65 என்ற வெற்றி இலக்கினை நிர்ணயித்தது ரில்கோ றைடேர்ஸ்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடுவதற்காக களம் நுழைந்தது வினோத் அருண்ராஜ் இணை. மதுசன் வீசிய முதலாவது பந்திலேயே Lbw முறை மூலம் வினோத்தின் இலக்கு தகர்க்கப்பட்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அருண்ராஜ், ஸ்ரீகுகன் இணை முதல் 03 பந்துப்பரிமாற்றங்களிலும் 41 ஓட்டங்களினை சேகரித்தது.

நோர்த் டிராகன்ஸ் வெற்றி பெறுவதற்கு 12 பந்துகளில் 26 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நான்காவது பந்துப் பரிமாற்றத்தினை வீசுவதற்கு அழைக்கப்பட்ட மோகன்ராஜ் முதல் 04 பந்துகளையும் அருண்ராஜ்ஜின் மட்டையை ஏமாற்றி லாவகமாக வீசினார். ஐந்தாவது பந்தில் ஓட்டம் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் ஸ்ரீகுகன் மறுத்தார். அடுத்த பந்திலும் ஓட்டம் எதுவும் விட்டுக்கொடுக்காது, ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றத்தினை வீசி போட்டியினை தம்பக்கமாக வசப்படுத்தினார் மோகன்ராஜ்.

இதன் காணரமாக 6 பந்துகளில் 26 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முதலாவது பந்தினை ஓட்டமற்ற பந்தாக மாற்றினார் ரில்கோ றைடேர்ஸ் அணியின் தலைவர் குகபிரசாத். அடுத்த மூன்று பந்துகளையும் மிட் விக்கெட் திசையில் 06 ஓட்டங்களாக மாற்றினார் ஸ்ரீகுகன். அடுத்த பந்திலும் நான்கு ஓட்டங்கள் கிடைக்கப்பெற, போட்டி ஒரு பந்தில் 04 ஓட்டங்கள் தேவை என்ற விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியது. இறுதிப் பந்திலும் அதே மிட் விக்கெட் திசையில் 06 ஓட்டம் கிடைக்கப்பெற தனது அரைச் சதத்தினை 14 பந்துகளில் பூர்த்திசெய்த ஸ்ரீகுகன் நோர்த் டிராகன்ஸ் அணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.

போட்டி முடிவு – 04 விக்கெட்டுக்களால் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டாவது பருவகால கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் கிண்ணத்தினை தமதாக்கியது நோர்த் டிராகன்ஸ் அணி.

போட்டியின் ஆட்டநாயகன் – ஸ்ரீகுகன்

விருதுகள்

  • சம்பியன்ஸ் – நோர்த் டிராகன்ஸ் (50,000 ரூபாய்)
  • இரண்டாம் இடம் – ரில்கோ றைடேர்ஸ் (25,000 ரூபாய்)
  • Fair play – நோர்த் டிராகன்ஸ்
  • அதிக 06 ஓட்டங்கள் – மதுசன்(10) – ரில்கோ றைடேர்ஸ் (5,000 ரூபாய்)
  • அதிக ஓட்டங்கள் – மதுசன்(178) – ரில்கோ றைடேர்ஸ் (5,000 ரூபாய்)
  • அதிக விக்கெட்டுகள் – நிறோஜன்(04) – சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் (5,000 ரூபாய்)
  • சிறந்த களத்தடுப்பாளர் – கல்கோகன் – ரில்கோ றைடேர்ஸ் (5,000 ரூபாய்)
  • தொடர் நாயகன் – மதுசன் – ரில்கோ றைடேர்ஸ் (20,000 ரூபாய்)
  • கடந்த வருடம் ரொப் செலஞ்சேர்ஸ் அணிக்காக கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த வினோத் இவ்வருடமும் நோர்த் டிராகன்ஸ் அணிக்காக கிண்ணத்தினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  
  • கடந்த வருடம் கிண்ணம் வென்ற அதே அணியில் இடம்பிடித்திருந்த சன்சஜன், பிருந்தாபன் ஆகியோர் இம்முறையும் கிண்ணம் வென்ற அணியில் இடம்பிடித்துள்ளனர்.
  • கடந்தவருடம் ஒரு அரைச் சதம் மாத்திரமே பெறப்பட்டது. இவ்வருடம் 04 அரைச் சதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
  • தொடர் நாயகன் மதுசன் (35, 52*, 52*, 39) 178 ஓட்டங்களையும்,  43 ஓட்டங்களிற்கு 03 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
  • தொடரில் அருண்ராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரால் ஓட்டமற்ற பந்துப்பரிமாற்றங்கள் வீசப்பட்டிருந்தன.
  • ஒரு இனிங்ஸில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை – வினோத் 55*(18)
  • சிறந்த பந்து வீச்சு பெறுதி – 08 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்கள்
  • வேகமான அரைச் சதம் – ஜேம்ஸ் 52(14)
  • அதிக பவுண்டரிகள் – மதுசன் 34 பவுண்டரிகள் (6×10 , 4×24)
  • ஒரு பந்துப்பரிமாற்றத்தில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் – வதுசனன் (44)

இறுதிப் போட்டி நிகழ்விற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போது போட்டி நடுவராக செயற்படுபவருமான பிரதீப் ஜெயப்பிரசாத் அவர்களும், சிறப்பு விருந்தினராக மகாஜனாக் கல்லூரி அதிபர் மணிசேகரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ். மாவட்ட கிரிக்கெட் சபை தலைவர் மணிவண்ணனும், செயலாளர் சசிகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினர் பிரதீப் ஜெய பிரசாத் அவர்கள் தனது உரையின்போது கருத்து தெரிவிக்கையில் வீரர்களான நாம் எமது இலக்கை நோக்கி பயணித்தால் யாரும் தடுக்க முடியாது. தற்போது மாகாணசபை கிரிக்கெட் போட்டிகளை நடாத்துகின்றது. அதில் பிரகாசிப்பதனூடாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக முயற்சிகள் இருப்பின் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு வீரர்கள் உள்வாங்கப்படும் காலம் தொலைவிலில்லை. யாழ். கலாச்சாரத்தில் விளையாட்டால் எதிர்காலம் இல்லை எனும் கருதுகோள் உண்டு. ஆனால், இன்று விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் அடுத்த தலைமுறைக்குமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்ள முடியும். ஜி.பி.எல் குழுமத்திற்கு வாழ்த்துக்கள் தொடர்ந்தும் இவ்வாறான போட்டிகளை  ஒழுங்கு செய்வதற்கு.” என்றார்.

“இந்த 05 ஓவர்கள் கொண்ட போட்டிகள் கிரிக்கெட் திறனை வளர்க்காது என்ற கருத்து இருங்கின்ற போதும், இவ் வகையான போட்டிகள் ஆர்வத்தினைத் தூண்டுகின்றன. ஆர்வம் ஏற்படுமாயின் தொடர்ச்சியான பயிற்சிகளூடாக திறன்  நிச்சயமாக வளர்க்கப்படும்.” என்றார் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சசிகரன்.

யாழ். மாவட்ட கிரிக்கெட்டினை வர்த்தகமயமாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜி.பி.எல் போட்டித் தொடரினது முயற்சியில் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் ஜி.பி.எல் குழுமத்தினர். இவ்வருடம் வீரர்களுக்கான ஏலத்தொகையில் 75% மான பணத்தினை வீரர்களிற்கு வழங்கியுள்ளதுடன், மிகுதி 25% பணத்தினை சமூக நற்பணிகளிற்காகவும் பயன்படுத்தவுள்ளனர். ஜி.பி.எல். குழுமத்தின் மிகநேர்த்தியான ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இவ்வாறான முயற்சிகள் தொடர்வதற்கு Thepapare.comஇன் வாழ்த்துக்கள்.