தடைகளைத் தாண்டி வென்ற கிரிக்கெட் வீரன் என சிறப்பித்துக் கூறக்கூடிய புனித ஜோன்ஸ் கல்லூரியின் அணித்தலைவரும் தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்து வருபவருமாகிய கௌரிபாகன் தேவராஜாவை THEPAPARE.COM  எதிர்வரும் 9ஆம்,10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் 111ஆவது வடக்கின் பெரும் சமரை முன்னிட்டு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டனர்.


இவர் மற்றும் பிரகாஷன் இடையேயான இணைப்பாட்டமே (200 ஓட்டங்கள்) வடக்கின் பெரும் சமரின் அதிகூடிய இணைப்பாட்டமாக இன்றும் இருக்கின்றது.

1985ஆம் ஆண்டில் புனித ஜோன்ஸ் கல்லூரியிலே இணைந்த இவர் தரம் 5 வரை ஒரு சராசரி மாணவனாகவே இருந்துள்ளார். தரம் 6 இல் கிரிக்கெட்டை நோக்கித் தனது முதற்படியை எடுத்து வைத்த கௌரிபாகனிற்கு பயிற்சிக்குச் சென்ற முதல் நாளிலேயே வயிற்றில் பந்து அடிபட்டது, அவ்வடியுடன் அவ்வருடம் கழிந்து மறுவருடம் கிரிக்கெட்டுக்குள் மறுபிரவேசம் செய்த கௌரிபாகன், சூரியகுமார் அவர்களது பயிற்றுவிப்பின் கீழ் நிமால் ராஜேந்திரன் தலைமை தாங்கிய 15 வயதுப்பிரிவு அணிக்குள் மிகுந்த மகிழ்வுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராய் நுழைந்தார். அன்றைய நாளிலிருந்தே இவர் 19 வயதுப்பிரிவு அணியின் பயிற்சிக்குக்கூடத்திற்கு செல்லுமளவிற்கு கிரிக்கெட்டிற்கும் தனக்கும் இடையிலான ஈடுபாட்டை அப்போதே அவ்வளவு அதிகமாகக் கொண்டிருந்தார்.

[rev_slider dfcc728]


1994ஆம் ஆண்டில் தரம் 9 இல் கற்றுக்கொண்டிருக்கையில் வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர், கல்லூரியின் முதற் பதினொருவர் அணியுள் ஒரு விக்கெட் காப்பாளராக நுழைந்திருந்தார். அவ்வருடம் வடக்கின் பெரும் சமரில் 7 விக்கெட்டுகளால் யாழ் மத்திய கல்லூரி  வெற்றிபெற்றிருந்தது.

தனது வடக்கின் பெரும் போர் தருணங்களை நினைவுபடுத்திய கௌரிபாகன் “ 1994இல் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தேன்.1995ஆம் ஆண்டு போட்டிக்கு நாங்கள் மிகவும் பலமானதொரு அணியாகக் களமிறங்கினோம். இருந்தபோதும், இரண்டாவது இன்னிங்ஸில் நழுவவிட்ட சில பிடியெடுப்புகளால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் எனக்குச் சிறந்த களத்தடுப்பாளர் விருதும் கிடைத்திருந்தது” என்றார்.

Gowribahan Thevarajahஅதனைத் தொடர்ந்து 1996, 1997ஆம் ஆண்டுகளில் போர் வலுப்பெற்றிருந்த காரணத்தால் அனைவரும் இடம்பெயர்ந்து இருந்தோம். இதனால், அவ்வருடங்களில் போட்டி இடம்பெறவில்லை. இருந்தபோதும் மீண்டும் சொந்த இடம் திரும்பியதும் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு போட்டியிலும் சதம் கடந்திருந்தார்.

தொடர்ந்தும் கௌரிபாகன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “1997ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் தனபாலன் அவர்கள் தனக்கு மூன்று வருடம் மூத்த சிரேஷ்ட வீரர்கள் இருக்கையிலும் அணித்தலைவர் பொறுப்பை வழங்கினார். 1998இல் கல்லூரியின் விதியான ஒருவர் ஒரு வருடம் மட்டுமே  சிரேஷ்ட அணியைத் தலைமை தாங்கமுடியும் என்ற விதியைத் தளர்த்தி, நான் 1997ஆம் ஆண்டில் ஒரேயொரு போட்டிக்கு மட்டுமே தலைமை தாங்கினேன் என்பதைக் காரணங்காட்டி மறுவருடத்திலும் அணித்தலைமையை வழங்கியிருந்தனர்.”

அவ்வருட வடக்கின் பெரும் சமர் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் “மிகுந்த அழுத்தத்திற்கு மத்தியில் அப்போட்டியில் களமிறங்கினோம், நாம் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்ட போதும், யாழ் மத்திய கல்லூரியின் கேதிஸன் சதம் பெற அழுத்தம் மேலும் அதிகரித்து. அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நான் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தேன் எவ்வாறாயினும் அவ்வருடமும் போட்டி சமநிலையிலேயே நிறைவுற்றது.”என்றார்.

“1999ஆம் ஆண்டு போட்டிக்கு பிரகாஷன் தலைமையில் களமிறங்கினோம். அப்போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் எமது அணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கையில் 3ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நானும் பிரகாஷனும் 200 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தோம். அதில், பிரகாஷன் சதம் பெற நான் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தேன்” என்றார்.


தனது கிரிக்கெட் வாழ்வில் வடக்கின் பெரும் போரில் அதிக இணைப்பாட்டத்தைப் பெற்ற அத்தருணம் இருக்கின்றவேளை, நான் இற்றைக்கும் கவலைப்படும் தருணமும் அதுவே  ஏனென்றால் இத்தனை போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட நான் வடக்கின் பெரும் போரில் ஒரு சதம் பெறவில்லை என்பதாகும்.

தனது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக தான் கொக்குவில் இந்துக் கல்லூரியுடனான போட்டியொன்றில் 236 ஓட்டங்கள் பெற்றதையும் மகிழ்வுடன் தெரிவித்திருந்தார்.

FB_IMG_1488855080368இவ்வருட வடக்கின் பெரும் போர் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் “பிளமின் என்பவர் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதை அறிவேன், கொழும்பில் இருப்பதால் எனக்கு அணியுடன் நேரடித் தொடர்பு இல்லை அதனால், அவ்வளவாக வீரர்களைத் தெரியாது. எவ்வாறிருப்பினும் நான் எப்போதும் எதிர்பார்ப்பது புனித ஜோன்ஸ் வெல்லுகின்ற போட்டியையே அவ்வாறே இம் முறையும்” என கூறினார்.

“விளையாட்டையும், அதன் அடிப்படையையும், அடிப்படை நுணுக்கங்களையும் அறிந்து விளையாடினால் சிறந்த எதிர்காலம் அமையும். தனது ஆங்கில அறிவு முதல் தலைமைத்துவம் வரை அத்தனைக்கும் அடிப்படையாய் அமைந்தது கிரிக்கட்டே” என மேலும் தெரிவித்தார்.

“கல்வியை ஒரு நாளும் விளையாட்டு பாதிக்காது, மாணவர்கள் அக்கறையுடன் போட்டிகள் நிறைவடைந்ததும் அன்றைய பாடவிடயங்கள் தொடர்பாக கேட்டறிவார்களாயின் ஒருபோதும் கல்விக்குப் பாதிப்பு ஏற்படாது. மாறாக, விளையாட்டோடு இணைந்த கல்வியால் சிறந்த எதிர்காலமே அமையும்.” என தனது அனுபவத்தை தெரிவித்தார்.

Gowribahan Thevarajah6 தடவை வடக்கின் பெரும் போரில் விளையாடியிருக்க வேண்டிய வீரன் போர் காரணமாக 4 போட்டிகளிலேயே விளையாட முடிந்தது. அதிலும், கல்லூரிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்த போதும் அவை இறுதி நேரத் தவறுகளால் நழுவியிருந்தன. இவர் கல்லூரிக்கு வடக்கின் பெரும் போரில் மட்டுமே வெற்றி பெற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் வாழ்வில் ஒரு வைத்தியனாக கல்லூரியை உயர்த்திக்கொண்டே நிற்கின்றார்.

வைத்தியர் கௌரிபாகன் தேவராஜா அவர்களிற்கு Thepapar. Com உடன் தனது நேரத்தை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு எதிர்காலம் மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.