இலங்கை நடுவர்களின் தீர்ப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரூமி

1635

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர்களான கொழும்பு கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் முஹமட் ரூமி மற்றும் இலங்கை போக்குவரத்து அதிகாரசபை (SLTB) கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பல விஜேசேகர ஆகியோர், தமது அணி இறுதியாக விளையாடிய FA கிண்ண போட்டியில் நடுவர்கள் வழங்கிய தீர்ப்புக்களுடன் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்த பருவகால FA கிண்ண தொடரில் 64 அணிகள் மோதும் சுற்றுத் தொடரில் களணிய கால்பந்து மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற போட்டியில், டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ண நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் மற்றும் SLTB அணிகள் மோதின.

டிலானின் கன்னி கோலுடன் கொழும்பு அணிக்கு FA கிண்ண முதல் வெற்றி

தற்பொழுது நடைபெற்று வரும் FA கிண்ணத்தின் 64 அணிகள் மோதும் சுற்றில் இலங்கை..

குறித்த போட்டியில், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளின் டயலாக் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களான கொழும்பு கால்பந்துக் கழக அணி, மிகவும் நுட்பமும் வலிமையுமிக்க SLTB அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது. இதற்காக, இரண்டாம் பாதியில் கொழும்பு அணியின் புதிய வீரர் டிலான் கௌஷல்ய மற்றும் தனுஷ்க மதுஷங்க ஆகியோர் கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

எனினும், குறித்த போட்டி நேரத்தில் இரு அணிகளுக்கும் நடுவரினால் வழங்கிய தீர்ப்புக்களினால் தாம் கடுமையாக பாதிப்படைந்ததாக  இரு அணிகளின் பயிற்றுவிப்பாளர்களும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பல விஜேசேகர, நடுவர்கள் வழங்கியிருந்த பல தீர்ப்புக்கள் பிழையானவை. நான் தீர்ப்பு வழங்கும் போது, எனக்கு சந்தேகம் இருந்தால் உதவி நடுவருடன் கலந்தாலோசிப்பேன். அத்துடன் பிழையை சரி செய்து கொள்வேன். மாறாக உதவி வரும் வரைக்கும் காத்திருக்க தேவையில்லை. ஆனால், இவர்கள் நான்காவது நடுவர்களிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் பந்தினை உள்ளெறிதல் குறித்து தெளிவில்லாமல் நடுவர் எதிரணிக்கு வாய்ப்பினை வழங்கினார். இந்த பிழையான தீர்ப்பினால் நான்காவது நடுவருக்கு இடைநடுவில் குறுக்கிட்டு, வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றியமைக்கும் நிலைமையும் ஏற்பட்டது.

நடுவர் சரியான நேரத்தில் ஊதியை ஊதாததால், வீரர்களுக்கு அதிகமான சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்து எச்சரிக்கை செய்யாததால் வீரர்கள் மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்தார்கள். நடுவர்களின் முடிவுகள் தாமதமாகவே வந்ததனால் வீரர்கள்கூட வெறுப்படைந்திருந்தனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முழு போட்டியிலும், வழங்கப்பட்ட தீர்ப்புகள் கேள்விக்குறியாக இருந்த அதேநேரம், இவற்றினால் இரு அணிகளும் திருப்தியடையும் நிலை காணப்படவில்லை.  

இந்த விடயம் குறித்து பயிற்றுவிப்பாளர் ரூமி கருத்து தெரிவிக்கையில், ”பயங்கரமான கள தீர்ப்புகள். அத்துடன் இது முதலாவது தடவையல்ல. குறித்த கள நடுவரால் இவ்வாறு பலமுறை நடப்பதை கண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

சிடி லீக் ஜனாதிபதிக் கிண்ண இறுதிப் போட்டியில் ஜாவா லேன், கொழும்பு அணிகள்

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில்..

நான் கள நடுவரை பிழையான விதத்தில் குறை சொல்லவில்லை, ஏனென்றால் நானும் ஒரு முன்னாள் கள நடுவர். எனது எண்ணம் என்னவென்றால், இவ்வாறு தொடர்ந்தும் போட்டிகளில் நடைபெற்றால் இலங்கை நடுவர்களின் தீர்ப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நாங்கள் எப்போதும் டிலான் பெரேரா மற்றும் நிவோன் ரொபேஷ் ஆகியோரைப் பற்றி மாத்திரமே பேசிக்கொண்டிருகின்றோம். அவர்களை நாம் எப்போதும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இரு நடுவர்கள் மாத்திரமே.

எங்களுக்கு நிறைய நிறைய போட்டிகள் உள்ளன. எங்களுக்கு நிறைய நடுவர்கள் தேவை. எங்களுக்கு நடுவர்களுக்கான செயலமர்வுகள் மற்றும் வழிகாட்டல்கள் அவசியம். அத்துடன் இந்த போட்டிகளுக்கு நல்ல கள நடுவர்கள் தேவை என்று ரூமி மேலும் தெரிவித்தார்.