முதல்முறை இலங்கை வரவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

444

2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.  

 FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து…

அடுத்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ள 21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை உலகின் அனைத்து மக்களும் நேரடியாக கண்டுகளிக்கும் நோக்கில் 54 நாடுகளுக்கு அது கொண்டு செல்லப்படவுள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள தெற்காசிய நாடுகளில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத் தீவுகளையும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவு செய்துள்ளது.  

இதன்படி, குறித்த வெற்றிக் கிண்ணத்தை உலகிற்கு அறிமுகம் செய்யும் சந்தர்ப்பம் முதற்தடவையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், 2018 பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தின் வருகை குறித்து நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும், அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதனை தெரிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.  

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார, மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம்

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு…

எதிர்வரும் 2018 ஜனவரி 23ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் அன்று ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து ஜனவரி 24ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள இந்த வெற்றிக் கிண்ணம் அன்று பிற்பகல் மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

குறித்த கிண்ணம் எமது தீவுக்கு கொண்டுவரப்படுகின்றமை குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கும் பொழுது,

”உலகின் மதிப்பு மிக்க போட்டித் தொடரின் கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றமை எமக்கு பெருமை அளிக்கின்றது. இதற்காக நாம் சிறந்த ஏற்பாடுகளை செய்யவுள்ளோம். குறித்த நிகழ்வின்போது எமது எதிர்காலத் திட்டங்களை விளக்கும் ஒரு முக்கிய செயற்பாட்டையும் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.

  மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க