கால்பந்து சம்மேளனத்தினால் இடைநிறுத்தப்பட்ட நிவ் யங்ஸ் பயிற்றுவிப்பாளர்

943
FFSL suspends New Youngs coach

நிவ் யங்ஸ் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரோஹித பெர்னாண்டோ, இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் இடைநிறுது்தப்பட்டள்ளார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், ரோஹித மூன்று போட்டிகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரீமியர் லீக் டிவிஷன் 2 இறுதிப்போட்டியில் மோதவுள்ள ரட்னம் மற்றும் கெலிஓய அணிகள்

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றில் சொலிட் மற்றும் நிவ் யங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலின்போது, பயிற்றுவிப்பாளர் ரோஹித முறையற்ற விதத்தில் நடந்துகொண்ட காரணத்திணாலேயே அவருக்கு எந்த இடைநிறுத்தம் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், நடுவர்களால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்புடன் உடன்படாத ரோஹித, ஆட்டத்தின் முதல் பாதிக்கு முன்பும், முதல் பாதியின்போதும் நடுவர்கள் மற்றும் மைதானத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து வந்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பயிற்றுவிப்பாளருக்கு நடுவர்களால் ஒருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அதனை ஏற்காத ரோஹித தொடர்ந்து தனது அதிருப்தியை வெளியிட்டவாரே இருந்தார். இந்த சம்பவத்தினால் சிறிது நேரத்திற்கு போட்டியை இடைநிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள இடைநிறுத்தத்தின்படி, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் அடுத்து இடம்பெறவுள்ள 3 போட்டிகளுக்கு நிவ் யங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஆசனத்தில் இருக்க ரோஹிதவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.