தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவராக டு ப்ளெசிஸ் நியமனம்

975

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக பாப் டு ப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேநேரம், தென்னாபிரிக்கா ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு வேறொரு வீரர் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.   

டேல் ஸ்டெய்ன் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்?

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்….

தென்னாபிரிக்கா அணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் விளையாடவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு பிறகு தென்னாபிரிக்கா அணி விளையாடவுள்ள முதலாவது போட்டித் தொடராக இது அமையவுள்ளது.

அண்மையில் இங்கிலாந்தில் நிறைவுக்கு வந்த உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது.

இது அந்த அணியின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. எனவே, எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர்கள் உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு பலமான அணியொன்றை தயார் செய்யும் பணிகளை அந்நாட்டு கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது

இதன் முதல் கட்டமாக ஒருநாள் போட்டிக்கான புதிய அணியை கட்டமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது. இதனிடையே, மூன்று வகை கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்கா அணியின் தலைவராகச் செயற்பட்டு வருகின்ற டு ப்ளெசிஸ், அணியின் புதிய கட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார்

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு….

இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய தொடருக்கான  தென்னாபிரிக்கா அணியின் தலைவராக டு ப்ளெசிஸ் தொடருவார் என்று நேற்று (06) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் இடைக்கால இயக்குனர் கோரி வேன் ஜில் அறிவித்தார்.  

எனினும், ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணிகளுக்கான தலைவர் மாற்றப்படலாம் எனவும், அதுதொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”2023 உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். எனவே, அணித் தலைவர் நியமிப்பதைப் பொறுத்தவரை நாங்கள் அதை எவ்வாறு அணுகுவோம் என்பதை முதலில் பார்ப்போம். அதை உறுதிப்படுத்த எதிர்வரும் ஓரிரெண்டு நாட்களில் நாங்கள் விசேட தேர்வுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளோம்” என்றார்

இதுஇவ்வாறிருக்க, டு ப்ளெசிஸ் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்துவதில் இன்னும் ஆர்வமாக உள்ளார். அதேநேரம், தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்று கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றார்.

ThePapare Tamil weekly sports roundup – 88

Uploaded by ThePapare.com on 2019-08-06.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தென்னாபிரிக்கா கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை தட்டிச் சென்ற டு ப்ளெசிஸ், தனது எதிர்கால இலக்கு குறித்து கருத்து வெளியிடுகையில்

”எனக்கு 35 வயதாகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அந்த மாதிரியான விடயங்களை நீங்கள் திட்டமிட முடியாது. ஒவ்வொரு வருடமும் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் முயற்சி செய்து திட்டமிட வேண்டும்

உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றுடன் வெளியேறிய பிறகு நான் மிகவும் ஏமாற்றமடைந்தாலும், தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடுவது இன்னும் சிறப்பு என கருதுகிறேன். நான் அணியிலிருந்து வெளியேறுவதைப் பற்றி யோசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்கு நிறைய நேரம் இருக்கிறது. வயதாகும்போது நீங்கள் மற்ற போட்டித் தொடர்களைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அதுதான் நடக்க வேண்டிய சமநிலைப்படுத்தும் செயலாகும்” என தெரிவித்தார்

டி20 தொடரை வைட்வொஷ் செய்த இந்திய அணி

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய….

தென்னாபிரிக்கா அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு புதிய தலைவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படும். மேலும், தென்னாப்பிரிக்கா அணி, சிரேஷ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எதிர்வரும் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. தென்னாபிரிக்கா அணி விபரங்கள் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் 50 ஓவர்கள் போட்டியின் தலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார்

அதேநேரம், கோரி வேன் ஜில் தலைமையிலான இடைக்கால தேர்வுக் குழு இந்திய சுற்றுப்பயணத்துக்கான தென்னாப்பிரிக்கா அணி தொடர்பில் இவ்வாரம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க