லக்கி ஸ்ராரை வீழ்த்தி FA கிண்ண அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென் நீக்கிலஸ்

379

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதி 32 அணிகளினை தெரிவு செய்வதற்கான போட்டியில் அம்பாறை லக்கி ஸ்ரார் அணியினை 3-0 என வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி சில நிமிடங்களில் நீக்கிலஸிற்கு கிடைத்த கோணர் கிக்கினை அமிலன் உள்ளனுப்ப லக்கி ஸ்ரார் அணியின் கோல் காப்பாளர் அதனை இலகுவாகத் தடுத்தார்.

“வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் காலிறுதியில் பாடும்மீன், கலைமதி, இருதயராசா அணிகள்

வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் எதிர்..

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் யாழ் வீரர் றொக்சன் உள்ளனுப்பிய பந்தினை கோலாக்கத் தவறினார் பெலின்.  

20ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்ரார் அணியின் சம்சுதின் முபாய்ஸ் லாவகமாக கொடுத்த பந்தினை கோலாக்கத் தவறினார் முகமட் ஆசீர்.  அடுத்த நிமிடத்திலேயே இலகுவான வாய்ப்பினை பெற்ற ஹனான் அகமட் கோல் காப்பாளரின் கைகளுள் பந்தை உதைந்து ஏமாற்றினார்.

28ஆவது நிமிடத்தில் றேம்சன், சக வீரர் அமிலனை நோக்கி உள்ளனுப்பிய பந்தினை  லக்கி ஸ்ரார் அணியின் முகமட் முபாரிஸ் தடுத்தார். மீண்டும், அடுத்த நிமிடத்திலேயே பெலினை நோக்கி பின்களத்திலிருந்து பந்து அனுப்பப்பட, லக்கி ஸ்ராரின் கோல் காப்பாளர் முன் நோக்கி நகர்ந்திருந்த போதும் பந்தினை கோலிற்கு வெளியே உதைந்து இலகு வாய்ப்பினை வீணடித்தார் பெலின்.

  • சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம்

போட்டியின் 40ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்ரார் அணியின் அப்துல் மாஜித் தனக்கு கிடைத்த சிறந்த பந்து பரிமாற்றத்தினை கோல்காப்பாளரினது கைகளினை நோக்கி உதைந்தார்.  

முதற் பாதியின் இறுதி நிமிடத்தில் லக்கி ஸ்ராரின் பின்கள வீரர்களினை தாண்டி எடுத்துச் சென்ற பந்தினை சென். நீக்கிலஸின் றொக்சன் கோல் நோக்கி செலுத்த பந்து கோல்காப்பாளரின் கைகளில் பட்டு நழுவிய போதும், இரண்டாவது முயற்சியில் பந்தினை  வெளியே தட்டினார் கோல்காப்பாளர்.

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 08 Matches

Photos: Vadakkin Killadi Yaar???..

மத்திய களத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய லக்கி ஸ்ரார் அணிக்கு முன்கள வீரர்கள் சிறந்த நிறைவுகளைத் தவற விட, மறுபக்கம் இலகு வாய்ப்புக்களை யாழ் தரப்பினர் வீணடிக்க கோல்களேதுமின்றி நிறைவிற்கு வந்தது முதலாவது பாதியாட்டம்.  

முதலாவது பாதி: சென். நீக்கிலஸ் வி.  0 – 0 லக்கி ஸ்ரார் வி.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே புதிதாக பிரதியீடு செய்யப்பட்ட யாழ் மத்தியின் முன்கள வீரர் விக்னேஷ் கோலை நோக்கி உதைந்த பந்தினை  லக்கி ஸ்ராரின் கோல்காப்பாளர் லாவகமாகத் தடுத்தார்.

49ஆவது நிமிடத்தில் நீக்கிலஸ் வீரர் உதைந்த பந்து பெனால்டி எல்லையினுள்ளே  லக்கி ஸ்ரார் வீரரின் கைகளில் பட, பெனால்டி உதை வழங்ப்பட்டது. கிடைக்கப் பெற்ற பெனால்ட்டியினை கோலாக மாற்றினார் றொக்சன்.

குறித்த கோலிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லக்கி ஸ்ராரிற்கு கிடைத்த வாய்ப்பினை கம்பங்களுக்கு வெளியே உதைந்தார் அப்துல் மாஜீத்.

இரண்டாவது பாதியின் 8ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து விக்னேஷ் உள்ளனுப்பிய பந்தினை அமிலன் கோலாக்க தவறினார்.

போட்டியின் 64ஆவது நிமிடத்தில் றேம்சன் வழங்கிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினை றோக்சன் கோலினை நோக்கி உதைக்க, அது கம்பத்திற்கு அருகால் வெளியேறியது.

அடுத்த நிமிடத்திலேயே றேம்சனிடமிருந்து பந்தினை பெற்ற விக்னேஷ் வேகமாக செயற்பட்டு, இலகுவாக பந்தை கோலாக்கி, அணியை இரு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL)..

ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்ரார் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை முகமட் ஆசீர் கோலினை நோக்கி உதைய பந்து கம்பத்திற்கு சற்று மேலால் வெளியே சென்றது.

82ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்ராரின் அப்துல் மாஜீத் மத்திய கோட்டிலிருந்து உதைந்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் லக்கி ஸ்ராரின் பின்கள வீரர்களை தாண்டி இலகுவாக பந்தினை எடுத்துச் சென்ற றோக்சன் முன்னேறிவந்த கோல்காப்பாளரிற்கு மேலால் பந்தினை தட்டிவிட்டு அணிக்கான அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

இரண்டாவது பாதியில் லக்கி ஸ்ரார் அணியின் கோல் பரப்பினை ஆக்கிரமித்த யாழ்ப்பாணம் சென். நீக்கிலஸ் அணியினர் 3 கோல்களினைப் பதிவு செய்து, நடப்பாண்டிற்கான FA கிண்ண சுற்றுத் தொடரின் இறுதி 32 அணிகளுள் ஒரு அணியாக நுழைந்துள்ளனர்.

முழு நேரம்: சென். நீக்கிலஸ் வி.  3 – 0 லக்கி ஸ்ரார் வி.

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – விக்னேஷ் (யாழ்ப்பாணம் சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

யாழ்ப்பாணம் சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் – N.S றொக்சன் 49′ (P), விக்னேஷ் 65′, M. றொக்சன் 84′  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<