கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த இந்த பருவகாலத்திற்கான காகில்ஸ் புட் சிடி FA கிண்ணத்தின் சம்பியன் அணியைத் தீர்மானிப்பதற்கான, தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை சுகததாஸ அரங்கில் இடம்பெறவுள்ளது. இதில் நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணியும், ஜாவா லேன் விளையாட்டுக் கழக அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

ஏறத்தாழ 9 மாதங்களுக்கு முன்னர் ஜாவா லேன் விளையாட்டுக் கழகமானது டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுப்போட்டியில் ஏற்பட்ட தொடர் தோல்விகளின் காரணமாக தங்களது வரலாற்றில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு முதற்தர பிரிவில் இருந்து தரமிறக்கப்பட்டிருந்தது.

எனினும் 9 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது FA கிண்ண தொடரில் பல முன்னணி அணிகளை வீழ்த்தி கிண்ணத்தை வெல்வதற்கான இறுதிக்கட்ட பலப்பரீட்சையில் இராணுவ விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது.

2017ஆம் ஆண்டின் FA கிண்ண இறுதிப்போட்டியில் முற்றிலும் மாறுபட்ட இரு அணிகள் சம்பியன் கனவுடன் மோதவிருக்கின்றன. பலமிக்க இராணுவப்படை அணியானது டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் சோபிக்கத் தவறிய போதிலும், பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே இத்தொடரில் தனது சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் எதிரணிகளை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு வீறுநடை போட்டிருந்தது.

ஜாவா லேன் அணியோ டயலொக் சம்பியன்ஸ் தொடரில் அடைந்த ஏமாற்றத்திற்கு ஈடு செய்யும் வகையில் சற்று முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மிகவும் சிறப்பான ஆட்டத்துடன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டிக்கான முன்னேற்றம்

முன்னர் குறிப்பிட்டது போன்றே இரு அணிகளும் மாறுபட்ட எதிர்பார்ப்புக்களுடனும் விளையாட்டுப் பாணிகளுடனும் தங்களது போட்டிகளுக்குள் பிரவேசித்திருந்தன.

பலம் மிக்க கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இராணுவப்படை

கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் இராணுவப்படை..

இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இராணுவ அணியானது தமது போட்டிகளை இலகுவாக வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டதுடன், அவ்வணி எதிரணிகளை சுலபமாக வீழ்த்தியிருந்தது. அரையிறுதிப் போட்டியில் மாத்திரம் அவ்வணி கொழும்பு கால்பந்து கழகத்திடமிருந்து அழுத்தத்தை எதிர்கொண்டிருந்ததுடன், அப்போட்டியில் இராணுவப்படை அணி வீரர்கள் பல வாய்ப்புக்களை தவற விட்டிருந்தமையே இதற்கு காரணமாக அமைந்திருந்தது. 

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 (5-3) (அரையிறுதிப் போட்டி)
ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 1 (காலிறுதிப் போட்டி)
கிரிஸ்டல் பெலஸ் 2 – 0 (5 ஆம் சுற்று)
கிருலப்பனை யுனைட்டட் 5 – 1 (4 ஆம் சுற்று)

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

ஜாவா லேன் அணியோ காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் பிரபல அணிகளை எதிர்கொண்ட நிலையில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே காணப்பட்டது. அதே போன்று முன்னைய சுற்றுக்களில் சிறு அணிகளுடனான போட்டிகளிலும் இவ்வணி பெரிதளவில் சோபிக்காத காரணத்தினால் ஜாவா லேன் அணியானது இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. எனினும் ஜாவா லேன் அணி போட்டிகளுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை மாற்றியமைத்து தங்களது வீரர்களின் சிறப்பாட்டங்களின் உதவியுடன் முன்னணி அணிகளுக்கும் அதிர்ச்சியளித்து வந்துள்ளது.

பலம் மிக்க கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இராணுவப்படை

கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது காலிறுதிப்..

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 (5-3) (அரையிறுதிப் போட்டி)
ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 1 (காலிறுதிப் போட்டி)
கிரிஸ்டல் பெலஸ் 2 – 0 (5 ஆம் சுற்று)
கிருலப்பனை யுனைட்டட் 5 – 1 (4 ஆம் சுற்று)

முக்கிய வீரர்கள்

ஜாவா லேன் அணியின் தடுப்பாட்டம் சிறப்பான நிலையில் காணப்பட்டு வந்துள்ளதுடன், பாகிம் நிஸாம்டீன் பின்கள வீரர்களை நன்றாக வழிநடத்தி வருகின்றார். அத்துடன் அரையிறுதிப் போட்டியை தவறவிட்ட சாமர டி சில்வா அணிக்கு மீண்டும் திரும்புகின்றமையும் அவ்வணிக்கு வலு சேர்க்கவுள்ளது.

ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தின் பலமிக்க அங்கமாக மத்திய களம் காணப்படுகின்றது. ரிஸ்கான் பைஸர் மற்றும் சாணக சமிந்த ஆகியோர் மத்திய களத்தில் அற்புதமாக விளையாடி வருகின்றதுடன், அப்துல்லாஹ் வலப்பக்க விங் நிலை வீரராக திறமையை வெளிப்படுத்தியிருந்தார். மத்திய கள வீரர்கள் உருவாக்கி தருகின்ற வாய்ப்புக்களை திறம்பட பயன்படுத்தி அவற்றை கோல்களாக மாற்றுவதில் இளம் வீரரான நவீன் ஜூட் தொடர்ந்தும் அசத்தி வருகின்றார்.

இராணுவ விளையாட்டுக் கழகமானது தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்குகின்றதுடன், முன்களத்தில் அதிரடி வீரர்களான மதுஷான் டி சில்வா மற்றும் புன்சர திருன எதிரணியின் தடுப்பு வீரர்களுக்கு அழுத்தத்தை வழங்க, சங்க தனுஷ்க லாவகமாக உருவாக்கித் தரும் வாய்ப்புக்களை சஜித் குமார மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் ஆகியோர்  வெற்றிகரமாக கோல்களாக மாற்றி வந்துள்ளனர்.

விங் நிலை வீரர்களான மதுஷான் டி சில்வா மற்றும் புன்சர திருன ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டமானது இஸ்ஸதீன் தனது திறமையை வெளிப்படுத்த உறுதுணையாக அமைந்திருந்தது. அத்துடன் இராணுவ அணியின் மாற்று வீரராக களமிறங்கி வருகின்ற திவங்க சந்திரசேகர உடனடியாக போட்டி நிலைமைக்கு ஏற்ற வகையில் விளையாட்டு பாணியை மாற்றியமைத்து அணிக்கு பங்களிப்பினை வழங்கி வந்துள்ளார்.

அணிகளின் வியூகங்கள்

கடந்த போட்டிகளில் சௌண்டர்ஸ் மற்றும் ரினௌன் அணிகளின் தாக்குதல் ஆட்டத்தை முடக்குவதில் ஜாவா லேன் அணியின் பயிற்றுவிப்பாளர் நஸார் வெற்றிகண்டிருந்த காரணத்தினால் இறுதிப் போட்டியிலும் அதற்கு ஒத்த வியூகத்தினை எதிர்பார்க்கலாம். இராணுவ அணியின் விங் நிலை வீரர்கள் பந்தினை பெறுவதை தடுப்பதில் ஜாவா லேன் அணி அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக கடந்த போட்டிகளை போன்று அப்துல்லாஹ் மற்றும் மாலக பெரேரா தங்களது சக விங் நிலை தடுப்பு வீரர்களுக்கு பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் இஸ்ஸதீனின் முயற்சிகளை தடுப்பதில் பாகிம் அல்லது சாமர ஆகிய இருவரில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இராணுவ அணியும் முன்னைய போட்டிகளில் வெற்றிகரமாக செயற்படுத்திய வியூகத்துடனேயே இப்போட்டிக்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கலாம். எதிரணியின் நட்சத்திர வீரரான நவீன் ஜூடை தடுப்பதில் அசீகூர் ரகுமான் முக்கிய பங்கினை வகிக்கவுள்ளார். அதே போன்று இராணுவ அணியின் துருப்பு சீட்டான சந்திரசேகர இரண்டாம் பாதியில் களமிறங்குகின்றமை அவ்வணிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவுள்ளது.

இறுதி முடிவு

பலமிக்க இராணுவப்படை அணி இப்போட்டியில் அதிக வெற்றி வாய்ப்புள்ள அணியாக தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றது. மறுமுனையில் முதன்முறையாக FA கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஜாவா லேன் அணி இப்போட்டியிலும் பிரபல இராணுவப்படை அணிக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய அணியாகவே காணப்படுகின்றது.

முதன் முறையாக FA கிண்ணத்தை வெல்லுமா ஜாவே லேன்? கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளுமா இராணுவ விளையாட்டுக் கழகம்? பொறுத்திருந்து பார்க்கலாம். இறுதிப்போட்டியின் நேரடி ஒளிபரப்பு மற்றும் உடனடி செய்திகளுக்காக தொடர்ந்தும் ThePapare.com உடன் இணைந்திருங்கள்.