FA கிண்ண லீக் வெற்றியாளர்கள் விபரம்

318
FA Cup 2016/17 League winners

2016/17 ஆம் ஆண்டுக்கான காகில்ஸ் புட் சிடி FA கிண்ணத்தின் லீக் மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 61 அணிகளின் விபரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை லீக் மட்டப் போட்டிகளில் அதிக அணிகள் பங்கு கொண்ட லீக்காக யாழ்ப்பாண லீக் உள்ளது. அங்கு இம்முறை 56 அணிகள் போட்டியிட்டன. அது தவிர ஹட்டன், மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, காத்தான்குடி, தெஹிவளை, கொழும்பு ஆகிய லீக்களில் அதிகபடியாக 40க்கும் அதிகமான கழகங்கள் போட்டியிட்டன.   

லீக் வெற்றியாளர்கள்

உதயசூரியன் வி.க (அக்கரைப்பற்று), நகர சபை வி.க (அம்பலாங்கொடை), ஒலிம்பிக் வி.க (அம்பாறை), அனுராதபுரம் ஐக்கிய வி.க (அனுராதபுரம்), அல் அதான் வி.க (பதுளை), லிபர்டி வி.க (பண்டாரவளை), சிவானந்தா வி.க (மட்டக்களப்பு), கோல்டன் ரைஸ் வி.க (பேருவளை) , கிரிந்திவல பாரமவுண்ட் வி.க (பியகம), ப்ரீடம் வி.க (சிலாபம்), குரே வி.க (சிடி), ஓல்ட் பெண்ஸ் (கொழும்பு), தொடவத்த வி.க (தெஹிவளை), சொலனியா வி.க (தெனியாய), சன் ஷைன் வி.க (திவுலபிடிய), வளவை வி.க (எம்பிலிப்பிட்டிய), குறுந்துவத்த யுனைடட் (காலி), கஹடோவிட JF வி.க (கம்பஹா), ரெட் சன் வி.க (கம்பளை), டெக்னிக் வி.க (அம்பாந்தோட்டை)

ரினௌன் வி.க (ஹட்டன்), புனித மரியார் வி.க (யாழ்ப்பாணம்), வானவில் வி.க (கல்குடா), கிரீன் பீல்ட் வி.க (களுத்துறை), மன்செஸ்டர் வி.க (கண்டி), யூத் வி.க (கதிர்காமம்), நஷனல் வி.க (காத்தான்குடி), மாயா வி.க (கேகாலை), சிறைச்சாலை வி.க (களனி), ஜகமீட்பர் வி.க (கிளிநொச்சி), பயனீயர் வி.க (கிண்ணியா), இக்பால் வி.க (குச்சவெளி), யங் ஸ்ப்ரிட் (குருநாகல்), சென் சேர்வியர்ஸ் வி.க (மதுமாந்தை), ஐக்கிய வி.க ஜோசப் வாஸ் (மன்னார்), கோல்ட் மூன் (மாத்தளை), க்ரஹலோக வி.க (மாத்தறை), செரண்டிப் கா.க (மாவனல்லை), மெதகம வி.க (மொனராகலை), யங் பேர்ட்ஸ் வி.க (முல்லைத்தீவு), ரிலையன்ஸ் வி.க (மூதூர்), யங் மேரியன்ஸ் கா.க (நாவலப்பிட்டி),

ஜுபிடர்ஸ் வி.க (நீர்கொழும்பு), SLTB வி.க (NSSA), யங் பேர்ட்ஸ் வி.க (நுவரெலியா), யங் லயன்ஸ் வி.க (ஓட்டமாவடி), நவகம்புற வி.க (Play Grounds), வின்மீன்கள் வி.க (பருத்தித்துறை), BM யூத் வி.க (பொல்கஹவெல), லகி பேர்ட்ஸ் வி.க (பொலன்னறுவை),  விம்பில்டன் வி.க (புத்தளம்), மாநகர சபை வி.க (இரத்தினபுரி), பிலிப் குணவர்தன A வி.க (சீதாவக), மொரட்டுவ பல்கலைக்கழகம் (இலங்கை பல்கலைக்கழகங்கள்), HGS ப்ளூ வி.க (ஸ்ரீ ஜயவர்தனபுற), கிரீன் லைட் வி.க (திருகோணமலை), டயமண்ட்ஸ் வி.க (வடமராட்சி), குறுஞ்சிக்குளம் வி.க (வலிகாமம்), ஈஸ்வரன் வி.க (வவுனியா), ஓல்ட் மெசடோனியன்ஸ் (வத்தளை), அல் ஹிரா வி.க (வென்னப்புவ)