முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக்

173
Getty Images

27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமானது. இங்லாந்தின் முதல்நிலை தொழில்முறை கால்பந்து தொடரான இந்த போட்டிகளின் முதல் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அது உள்ளிட்ட முதல் இரு தினங்களிலும் நடைபெற்ற முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு.

பார்சிலோனா அணித் தலைவராகிறார் மெஸ்ஸி

அன்ட்ரெஸ் இனியஸ்டாவுக்கு அடுத்து…

மன்செஸ்டர் யுனைடெட் எதிர் லெஸ்டர் சிட்டி

போல் பொக்பா போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம் லெஸ்டர் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக் 2018/19 பருவத்தின் ஆரம்ப போட்டியில் வெற்றியை பதிவு செய்து கொண்டது.   

ஓல்ட் டிரபர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ஆரம்ப போட்டியில் ஒரு மாதத்திற்கு முன் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பொக்பா நான்கு நாட்களுக்கு முன்னரே பயிற்சிக்கு திரும்பிய நிலையில் அணித் தலைவராக மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

போட்டி ஆரம்பித்த விரைவில் அலெக்சிஸ் சான்செஸ் உதைத்த பந்து டானியல் அமார்டியின் கையில் பட யுனைடெட் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை பொக்பா கோலாக மாற்றினார். இதன்மூலம் போட்டியின் பெரும்பாலான நேரத்தில் அந்த அணியால் 1-0 என முன்னிலை பெற முடிந்தது.

Getty Images

இந்நிலையில் 83 ஆவது நிமிடத்தில் வைத்து ஜுவான் மாடா உயர பரிமாற்றிய பந்தை கட்டுப்படுத்திய பின்கள வீரர் லுக் ஷோ சிரேஷ் அணிக்காக தனது முதல் கோலை பெற்றார். இதன்மூலம் மன்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலை பெற்றது.

போட்டியின் மேலதிக நேரத்தில் ஜெமி வார்டி பெற்ற கோல் லெஸ்டர் சிட்டியின் தோல்வியை தவிர்ப்பதாக இருக்கவில்லை.  

பூட்டானிடமும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின்…


நியூகாஸில் யுனைடெட் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

இரண்டாவது ஆண்டாகவும் பிரீமியர் லீக் தொடரில் பயன்படுத்தப்படும் கோல் எல்லை தொழில்நுட்பத்தின் உதவியுடன் டொட்டன்ஹாம் அணி தனது ஆரம்ப போட்டியில் நியூகாஸிலை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ஜான் வெர்டொன்பன் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியபோதும் கோல் எல்லை தொழில்நுட்பத்தின் மூலம் அந்த பந்து 9 மில்லிமீற்றர் வலைக்குள் நுழைந்திருப்பது உறுதியானது.

Reuters

எனினும் டொட்டன்ஹாமின் முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 149 வினாடிகளுக்கு பின் கோல் கம்பத்தில் இருந்து மெட் ரிட்சி ஆறு யார்ட் தூரத்தில் வைத்து அபாரமாக கடத்திய பந்தை ஜோசலு தலையால் முட்டி கோலாக மாற்ற நியூகாஸில் அணி போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.   

எவ்வாறாயினும் இங்கிலாந்து உலகக் கிண்ண நட்சத்திரங்களான ஹெரி கேன் மற்றும் டெலே அலி போன்ற வீரர்கள் இருக்கும்போது டொட்டன்ஹாம் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

Road to Barcelona சம்பியன் கிண்ணம் அல்-அக்ஸா கல்லூரிக்கு

நெஸ்லே லங்காவின் மைலோ…

மறுபுறம் நியூகாஸில் அணி போட்டியின் ஆரம்பத்தில் காட்டிய உற்சாகம் பின்னர் வெளிப்படவில்லை. இந்நிலையில் 18ஆவது நிமிடத்தில் செர்ஜ் ஒரீர் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி நேர்த்தியான கோல் ஒன்றை பெற்றார் அலி.

இதன்மூலம் 2-1 என முன்னிலை பெற்ற டொட்டன்ஹாம் அதனை போட்டி முடியும்வரை தக்கவைத்துக் கொண்டது.  


செல்சி எதிர் ஹடர்ஸ்பீல்ட் டவுன்

புது முகாமையாளருடன் களமிறங்கி இருக்கும் செல்சி அணி ஹடர்ஸ்பீல்ட் டவுன் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியுடன் இம்முறை பிரீமியர் லீக்கை ஆரம்பித்துள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு கோல்களை பெற்ற செல்சி அணி இரண்டாவது பாதியில் மற்றொரு கோலை பெற்று வெற்றியை உறுதி செய்தது. தனது அணி வழக்கமான ஆட்டத்திற்கு திரும்ப இரண்டு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று செல்சியின் புதிய முகாமையாளர் டோரிசியோ சாரி எச்சரித்த நிலையிலேயே அந்த அணி இந்த உறுதியான வெற்றியை பெற்றுள்ளது.

கோர்டோய்ஸை விடுவித்த செல்சி ஸ்பெயின் கோல்காப்பாளரை சாதனை தொகைக்கு வாங்கியது

கோல்காப்பாளர் ஒருவருக்கான…

உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸின் நிகோலோ கண்டே மூலம் 34 ஆவது நிமிடத்தில் கோல் பெறுவதை ஆரம்பித்த செல்சி அணிக்கு 45 ஆவது நிமிடத்தில் ஜொர்கின்ஹோ பெனால்டி உதை மூலம் இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் கடைசி நேரத்தில் (80 ஆவது நிமிடம்) பெட்ரோ செல்சிக்கு மூன்றாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.  

Getty Image

உலகில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக செல்சி அணியில் இணைந்த கேபா அரிசபாலாகா தனது முதல் போட்டியில் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்கவில்லை. ஸ்பெயின் கோல்காப்பாளரான அவர் 80 மில்லியன் யூரோவுக்கு கடந்த வாரம் அத்லடிக் பில்போ கழகத்தில் இருந்து இங்கிலாந்து கழகத்திற்கு ஒப்பந்தமானார்.  

செல்சி அடுத்து பிரீமியர் லீக்கில் தனது சவாலான போட்டியாக வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஆர்சனல் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<