பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி சுற்றுப் போட்டியின் முதல் நாள் போட்டிகள் நேற்று ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானம் மற்றும் றோயல் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றன. முதல் நாள் நிறைவில் ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாத எட்டு அணிகள் கோப்பைக்கான (Cup) காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

31 பாடசாலைகள் பங்குபற்றிய இத்தொடர் நேற்று காலை 8.20 மணிக்கு ஆரம்பமானதுடன் அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. A, B, C மற்றும் D குழுக்களுக்கான போட்டிகள் றோயல் கல்லூரி மைதானத்திலும் E, F, G மற்றும் H குழுக்களுக்கான போட்டிகள் ரேஸ் கோர்ஸ் மைதானத்திலும் இடம்பெற்றன.

நடப்பு சம்பியனான புனித தோமியர் கல்லூரி பலம் மிக்க புனித ஜோசப் கல்லூரியை 22 – 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்து குழு A இல் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் காரணமாக புனித ஜோசப் கல்லூரியினால் கிண்ணத்திற்கான (Bowl) காலிறுதிக்கே தகுதிபெற முடிந்தது.

கடந்த வருடம் இரண்டாம் இடத்தை சுவீகரித்த இசிபதன கல்லூரி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதுடன், டி. எஸ். சேனநாயக்க கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரி அணிகள் தொடரில் கலந்து கொள்ளாத காரணத்தினால் அப்போட்டிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பைக்கான காலிறுதிக்கு முன்னேறியது.

2015 ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற புனித பேதுரு கல்லூரி, திரித்துவக் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி ஆகிய அணிகளும் மூன்று போட்டிகளிலும் வெற்றிகளை சுவீகரித்து தத்தமது குழுக்களில் முதலிடங்களைப் பெற்றுக் கொண்டன.

ஸாஹிரா கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகள் மோதிக் கொண்ட விறுவிறுப்பான போட்டி 14 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. எனினும் முன்னைய போட்டிகளில் புனித அந்தோனியார் கல்லூரி அதிக புள்ளிகளைப் பதிவு செய்திருந்த காரணத்தினால் அவ்வணி கோப்பைக்கான காலிறுதிகளில் இடம்பிடித்தது. இதன்படி ஸாஹிரா கல்லூரி கிண்ணத்திற்கான காலிறுதிகளில் விளையாடவுள்ளது.

வலுவான வெஸ்லி கல்லூரிக்கு அதிர்ச்சியளித்து 33 – 00 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியீட்டிய கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜ கல்லூரியை இலகுவாக தோற்கடித்த (36 – 00) விஞ்ஞான கல்லூரி அணிகளும் காலிறுதிச் சுற்றிற்கு முன்னேறின.

முதல் நாள் போட்டி முடிவுகள்

  • புனித தோமியர் கல்லூரி 22 – 00 புனித அலோசியஸ் கல்லூரி
  • புனித பேதுரு கல்லூரி 45 – 00 புனித பெனடிக்ட் கல்லூரி
  • மஹாநாம கல்லூரி 29 – 10 ரிச்மண்ட் கல்லூரி
  • திரித்துவக் கல்லூரி 38 – 00 எஹெலியகொட மகா வித்தியாலயம்
  • வித்யார்த்த கல்லூரி 19 – 10 பிலியந்தல மகா வித்தியாலயம்
  • புனித ஜோசப் கல்லூரி 43 – 00 புனித அலோசியஸ் கல்லூரி
  • புனித பேதுரு கல்லூரி 65 – 00 ரிச்மண்ட் கல்லூரி
  • மஹாநாம கல்லூரி 19 – 19 புனித பெனடிக்ட் கல்லூரி
  • திரித்துவக் கல்லூரி 31 – 05 பிலியந்தல மகா வித்தியாலயம்
  • வித்யார்த்த கல்லூரி 45 – 00 எஹெலியகொட மகா வித்தியாலயம்
  • புனித தோமியர் கல்லூரி 22 – 17 புனித ஜோசப் கல்லூரி
  • புனித பேதுரு கல்லூரி 36 – 00 மஹாநாம கல்லூரி
  • ரிச்மண்ட் கல்லூரி 12 – 05 புனித பெனடிக்ட் கல்லூரி
  • திரித்துவக் கல்லூரி 28 – 14 வித்யார்த்த கல்லூரி
  • பிலியந்தல மகா வித்தியாலயம் 31 – 07 எஹெலியகொட மகா வித்தியாலயம்
  • றோயல் கல்லூரி 17 – 00 தர்ஸ்டன் கல்லூரி
  • வெஸ்லி கல்லூரி 31 – 00   CWW கன்னங்கர மகா வித்தியாலயம்
  • விஞ்ஞான கல்லூரி 50 – 00 புனித சில்வெஸ்டர் கல்லூரி
  • புனித அந்தோனியார் கல்லூரி 61 – 00 மொரட்டுவ மகா வித்தியாலயம்
  • ஸாஹிரா கல்லூரி 31 – 00 லலித் அதுலத்முதலி மகா வித்தியாலயம்
  • கிங்ஸ்வூட் கல்லூரி 27 – 05   CWW கன்னங்கர மகா வித்தியாலயம்
  • தர்மராஜ கல்லூரி 42 – 07 புனித சில்வெஸ்டர் கல்லூரி
  • புனித அந்தோனியார் கல்லூரி 66 – 00   லலித் அதுலத்முதலி மகா வித்தியாலயம்
  • ஸாஹிரா கல்லூரி 36 – 00 மொரட்டுவ மகா வித்தியாலயம்
  • இசிபதன கல்லூரி 31 – 14 லும்பினி கல்லூரி
  • வெஸ்லி கல்லூரி 00 – 33 கிங்ஸ்வூட் கல்லூரி
  • விஞ்ஞான கல்லூரி 36 – 00 தர்மராஜ கல்லூரி
  • புனித அந்தோனியார் கல்லூரி 14 – 14 ஸாஹிரா கல்லூரி
  • மொரட்டுவ மகா வித்தியாலயம் 24 – 12 லலித் அதுலத்முதலி மகா வித்தியாலயம்