ஒழுக்க விதியை மீறிய தனுஷ்க குணதிலக்க இடைநிறுத்தம்

1216

இலங்கை அணியின் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு மோசமான நடத்தைக்காக ஆறு சர்வதேச போட்டிகளில் தடையும் தனது ஆண்டு ஒப்பந்த தொகையில் 20 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்

தேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள …

 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) சட்ட விதிகளில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழுவினால் விதிக்கட்டிருக்கும் இந்த இடைநீக்கம் 2017 செப்டெம்பர் 30ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் குழாமில் அவரது பெயரை தேர்வாளர்கள் பரிசீலிக்கவில்லை.

குணதிலக்க இந்திய தொடரின்போது அணி விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவரது ஓட்ட சராசரி 42.41 ஆகும். அவர் இந்தியாவுக்கு எதிராக தனது கன்னி டெஸ்டில் களமிறங்கினார்.

குணதிலக்க மீது கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி குற்றங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.