கட்டளைத்தளபதி கால்பந்து தொடர் இறுதி மோதலில் அம்பாறை, மட்டக்களப்பு லீக் அணிகள்

136

இலங்கை இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவு கிழக்கு மாகாணத்தின் கால்பந்து லீக்குகள் (League) இடையே ஒழுங்கு செய்து நடாத்தும், கிழக்கு கட்டளைத்தளபதி கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் நேற்று (23) நிறைவுக்கு வந்திருக்கின்றன.

முதல் தடவையாக இடம்பெற்ற கால்பந்து சமரில் பன்சேனை பாரி வித்தியாலயம் வெற்றி

மட்டக்களப்பின் பிரபல்யம் வாய்ந்த மகளிர்

கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 9 கால்பந்து லீக்குகள் மோதியிருந்த இந்த கால்பந்து தொடரில் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த நொக்அவுட் சுற்று மூலம் மட்டக்களப்பு கால்பந்து லீக், அம்பாறை கால்பந்து லீக், கல்குடா கால்பந்து லீக் மற்றும் கிண்ணியா கால்பந்து லீக் ஆகியவை அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

இதனை அடுத்து ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் நடைபெற்றிருந்தன.


அம்பாறை கால்பந்து லீக் எதிர் கல்குடா கால்பந்து லீக்

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில்  அம்பாறை லீக் அணியும், கல்குடா லீக் அணியும் மோதியிருந்தன. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த போட்டியில் அம்பாறை கால்பந்து லீக் அணி கல்குடா கால்பந்து லீக் அணிக்கு எதிராக கோல் மழை பொழியத் தொடங்கியது.

முதல் அரையிறுதிப் போட்டியின் புகைப்படங்கள்

மிகவும் பலவீனமான பின்களத்தினை (Defence) கல்குடா கால்பந்து லீக் அணியினர் வெளிக் காட்டியிருந்த காரணத்தினால் அம்பாறை கால்பந்து லீக் வீரர்கள் தொடர்ந்து கோல்கள் பெறுவதை அவர்களுக்கு தடுக்க முடியாமல் போனது.

தொடர்ந்து இந்த கோல் மழையுடன் அம்பாறை லீக் அணி, கல்குடா லீக் அணியினை 11-0 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக தம்மைப் பதிவு செய்து கொண்டது.


மட்டக்களப்பு கால்பந்து லீக் எதிர் கிண்ணியா கால்பந்து லீக்

இதேநேரம், தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு கால்பந்து லீக் அணியும், கிண்ணியா கால்பந்து லீக் அணியும் மோதின.

இந்த அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே சம ஆதிக்கத்தை வெளிப்படுத்தின.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் புகைப்படங்கள்

எனினும், பின்னர் தமது வீரர்கள் மூலம் திறமையான ஆட்டத்தை வெளிக்காட்டிய மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி கிண்ணியா கால்பந்து லீக் அணியை 3-1 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டாவது அணியாக மாறிக் கொண்டது.   

அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அம்பாறை கால்பந்து லீக் அணியும், மட்டக்களப்பு கால்பந்து லீக் அணியும் கிழக்கு கட்டளைத்தளபதி கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில்பலப்பரீட்சை நடாத்தவுள்ளன. இந்தப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<