டயலொக் ரக்பி லீக் தொடரின் முதல் வார போட்டி முடிவுகள்

105

கழக ரக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் (DRL) தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (9) ஆரம்பமாகியிருந்தது.  

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற கடற்படை, பொலிஸ் விளையாட்டுக் கழக அணிகள் இடையிலான இந்த மோதல் டயலொக் ரக்பி லீக் தொடரின் இந்த பருவகாலத்திற்கான முதல் போட்டியாக அமைந்தது. இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த கடற்படை விளையாட்டுக் கழகம் ஆட்டத்தின் முதல் பாதியினை 14-10 என தம்வசமாக்கியது.

ஆசிய விளையாட்டு விழா ரக்பி போட்டிகளில் இலங்கை நான்காம் இடம்

ஆசிய விளையாட்டு…

போட்டியில் எஞ்சிய பாதியில் பொலிஸ் வீரர்கள் அதிரடியான முறையில் ட்ரைகளை வைத்து ஆட்டத்தில் முன்னேறிய போதிலும் கடற்படை விளையாட்டுக்கழகம் முதற்பாதி ஆதிக்கத்தோடு போட்டியில் 24-23 என வெற்றி பெற்றது.

முழு நேரம் : கடற்படை விளையாட்டுக் கழகம்  24 – 23 பொலிஸ் விளையாட்டுக் கழகம்


ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

டயலொக் ரக்பி லீக் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான இரண்டாவது போட்டியாக அமைந்த இந்த மோதல் ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் தொடங்கியது.

ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களில் இருந்தே இரண்டு அணிகளும் சம ஆதிக்கத்தை வெளிப்படுத்திய நிலையில் போட்டியின் முதல் பாதி  6-6 என சமநிலையில் முடிந்தது.

பின்னர் இரண்டாம் பாதியில் இராணுவப்படையின் தடுப்புக்களை தகர்த்து ஹெவ்லொக் கழக அணி அதிரடியான ட்ரைகளுடன் 17 புள்ளிகளை எடுத்தது. எனினும், இராணுவப்படை வீரர்கள் 5 புள்ளிகளை மாத்திரமே இரண்டாம் பாதியில் எடுத்தனர். இதனால், ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் 23-12 என்கிற புள்ளிகள் கணக்கில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.

முழு நேரம் : ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் 23 – 12 இராணுவப்படை


CH & FC எதிர் CR & FC

லண்டன் பிளேசில் சனிக்கிழமை (10) நடைபெற்ற இந்தப் போட்டியில் CH & FC அணியும், CR & FC அணியும் மோதின.

சொந்த மைதானத்தில் அதிர்ச்சித் தோல்வியுற்ற பார்சிலோனா

லா லிகா கால்பந்து சுற்றின் 12 வது…

ஆட்டத்தின் முதல்பாதியில் CH & FC அணி 20 புள்ளிகளைப் பதிவு செய்ய CR & FC அணி 15 புள்ளிகளையே எடுத்தது.  இதனால், முதற்பாதி 15-20 என CH & FC அணியின் முன்னிலையோடு முடிந்தது.

போட்டியின் இரண்டாம் பாதி மெதுவாகவே நகர்ந்த நிலையிலும் CR & FC அணி விஸ்வரூப ஆட்டத்தினை காண்பித்து 9 புள்ளிகளை எடுத்தது. மறுமுனையில் இரண்டாம் பாதியில் 3 புள்ளிகளை மட்டுமே CH & FC அணியினர் எடுத்தனர். இதன்படி, இரண்டாம் பாதியில் சிறப்பாக செயற்பட்ட CR & FC அணி CH & FC அணி வீரர்களை 24-23 என தோற்கடித்து.

முழு நேரம் :  CR & FC 24 – 23 CH & FC


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி விளையாட்டுக் கழகம்

சனிக்கிழமை (10) இரத்மலானையில் நடைபெற்று முடிந்த ரக்பி லீக் தொடரின் மற்றைய போட்டியில் நடப்புச் சம்பியன் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் விளையாட்டுக் கழகம் ஆகியவை மோதின.

போட்டியின் முதற்பாதியில் அட்டகாசமாக செயற்பட்ட கண்டி விளையாட்டுக் கழகம் அதனை 14-07 எனக் கைப்பற்றியது.  இதேநேரம், இரண்டாம் பாதியிலும் மிகவும் சிறப்பாக செயற்பட்ட கண்டி வீரர்கள் அதனையும் 14-12 எனக் கைப்பற்றி போட்டியில் 28-19 என வெற்றியினை பதிவு செய்தனர்.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 19 – 28 கண்டி விளையாட்டுக் கழகம்

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க