புனித பேதுரு கல்லூரியிடம் வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்த புனித பத்திரிசியார்

410
Shabeer Razooniya

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் குழு B இற்கான ஆட்டமொன்றில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியிடம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்ந்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி இத்தொடரில் தமது முதல் தோல்வியை சந்தித்தது.

60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி

மிலான் நகரில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற சுவீடனுடனான..

இத்தொடரில் பங்கு கொள்ளும் பல வீரர்கள் இலங்கை இளையோர் தேசிய அணியுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டமையினால் இத்தொடரின் போட்டிகள் சில காலம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போட்டிகளில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் கொழும்பு பேதுரு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.  

இந்த தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காத நிலையில் புனித பேதுரு கல்லூரியை எதிர்த்து களம் கண்ட யாழ் வீரர்கள், போட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள் தமது முதல் கோலை ஹைன்ஸ் மூலம் பெற்றனர். எனினும் நடுவர் அது ஓப் சைட் கோல் என சைகை செய்ய, அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.  

மறுமுனையில் போட்டியின் 12ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து பந்தை எடுத்து வந்த ஷெஹான் யஷ்மில, எதிரணியின் பெனால்டி பகுதிக்குள் வந்து பந்தை உயர்த்தி அடித்து கோலுக்குள் செலுத்தி பேதுரு கல்லூரி அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

15ஆவது நிமிடத்தில் பத்திரிசியார் கல்லூரியின் கோலுக்கு நேரே, பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் புனித பேதுரு கல்லூரிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் சபீர் ரசூனியா பெற்றார். அவர் உதைந்த பந்து பத்திரிசியார் அணியின் கோல் காப்பாளர் கிஜுமனின் கைகளுக்கே செல்ல, அவர் அதனை இலகுவாகக் கைப்பற்றினார்.

அதன் பின்னர் இரு அணியினரும் சற்று சம அளவிலான ஆதிக்கத்துடன் விளையாடினாலும், கொழும்பு தரப்பினரின் பந்துப் பரிமாற்றங்கள் யாழ் தரப்பினரை விட மிகவும் சிறந்த முறையில் அமைந்தன.

9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர்

ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ…

முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் புனித பத்திரிசியார் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை அவ்வணி வீரர்கள் கோலுக்குள் அனுப்பினர். எனினும் இறுதித் தருவாயில் பேதுரு கல்லூரி கோல் காப்பாளர் மிதுர்சன் பந்தை வெளியே தட்டி விட்டார்.

முதல் பாதி: புனித பேதுரு கல்லூரி 1 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி

இரண்டாவது பாதி ஆரம்பமகி 3 நிமிடங்களில் தன்னிடம் வந்த பந்தை தனியே எடுத்துச் சென்ற சபீர் எதிரணியின் கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை கோலுக்குள் செலுத்தி புனித பேதுரு கல்லூரிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.  

53ஆவது நிமிடத்தில் பத்திரிசியார் வீரர் டிலக்ஷன் எடுத்து வந்த பந்தைத் தடுக்க பேதுரு கல்லூரியின் கோல் காப்பாளர் முன்னே வர, அவரைத் தாண்டி டிலக்ஷன் பந்தை கோலுக்குள் செலுத்தினார். எனினும், இறுதித் தருவாயில் கோல் நோக்கி சென்றுகொண்டிருந்த பந்தை பேதுரு கல்லூரியின் பின்கள வீரரும் இலங்கை இளையோர் தேசிய அணியின் தலைவருமான ஷெஹான் திவன்க வெளியே உதைந்து எதிரணிக்கான சிறந்த கோல் வாய்ப்பைத் தடுத்தார்.  

இதன்போது கிடைத்த கோணர் கிக்கின்போது உள்வந்த பந்தை ஹைன்ஸ் ஹெடர் செய்ய, இறுதித் தருவாயில் கோல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மீண்டும் 62ஆவது நிமிடம் தன்னிடம் வந்த பந்தை சபீர் எதிரணியின் கோல் திசை வரை எடுத்துச் சென்று தனது இரண்டாவது கோலையும், அணிக்கான மூன்றாவது கொலையும் பதிவு செய்தார்.

69ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை எடுத்துச் சென்ற சபீர், அணியின் சக வீரர் ஷெஹான் திவன்கவிடம் பந்தை வழங்க, அவர் அதனை கோலுக்குள் உதைகையில் பத்திரிசியார் கோல் காப்பாளர் கிஜுமன் பந்தைத் தடுத்தார்.  

போட்டியின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில், திடீர் என்று தமது வேகத்தை அதிகரித்த புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான வாய்ப்புக்களைப் பெற்றனர். எனினும், இறுதித் தருவாயில் பேதுரு கல்லூரி வீரர்களால் அந்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.

ஆட்டத்தின் 76ஆவது நிமிடம் தமது பெனால்டி எல்லையில் வைத்து புனித பேதுரு கல்லூரி வீரரின் கைகளில் பந்து பட்டமையினால் யாழ் தரப்பினருக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டியைப் பெற்ற ஹைன்ஸ் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

80 நிமிடங்களைக் கொண்ட இந்தப் போட்டி நிறைவடைந்ததாய் அறிவிக்கப்பட, மேலதிக இரண்டு கோல்களால் யாழ் வீரர்களை புனித பேதுரு கல்லூரியினர் வெற்றி கொண்டனர்.

முழு நேரம்: புனித பேதுரு கல்லூரி 3 – 1 புனித பத்திரிசியார் கல்லூரி

கோல் பெற்றவர்கள்
புனித பேதுரு கல்லூரி – ஷெஹான் யஷ்மில 12’, சபீர் ரசூனியா 42’ & 62’
புனித பத்திரிசியார் கல்லூரி – D.H ஹைன்ஸ் 76’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
புனித பேதுரு கல்லூரி – D. ரோனி 75’
புனித பத்திரிசியார் கல்லூரி – R.டிலக்ஷஷன் 67’

ஏனைய போட்டி முடிவுகள்
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி 5 – 1 லும்பினி கல்லூரி
கிங்ஸ்வுட் கல்லூரி 3 – 0 கின்னியா மத்திய கல்லூரி
கொழும்பு ஸாஹிரா கல்லூரி 3 – 0 திருச் சிலுவைக் கல்லூரி

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<