செரண்டிப்பை வீழ்த்தி பிரிவு l சம்பியனாகியது பொலிஸ்

473

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரிவு l கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான இறுதிப் போட்டியில் மாவனெல்லை செரண்டிப் கால்பந்துக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் பிரிவு l தொடரின் சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்ற நிலையிலேயே சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் மோதின.

நியூ ஸ்டாரை வீழ்த்திய பொலிஸ் DCL இல்

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கொழும்பு, சுததாச அரங்கில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் டிவிஷன்-1 தொடரின் இரண்டாவது

ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் நிமிடத்திலேயே செரண்டிப் வீரர் மூலம் தமது பெனால்டி எல்லையில் வைத்து எதிரணி வீரர் மொஹமட் ரிப்கான் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, பொலிஸ் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பெற்ற சதுர குனரத்ன இலகுவாக பந்தை கோலாக்கி, ஆரம்பத்திலேயே அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து 18 ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அவ்வணி வீரர் ரியாஸ் அஹமட் ஹெடர் மூலம் கம்பங்களுக்குள் செலுத்தி இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

தமக்கான முதல் கோலைப் பெறும் வகையில் செரண்டிப் வீரர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும், பொலிஸ் பின்கள வீரர்களும், கோல் காப்பாளர் மஹேந்திரன் தினேஷும் தடுத்தனர்.

40 நிமிடங்கள் கடந்த நிலையில், அணித் தலைவர் ஷாமிக குமார உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை செரண்டிப் கோல் காப்பாளர் அமல்ராஜ் தடுக்க முற்பட்டார்.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 2 – 0 செரண்டிப் கால்பந்து கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி ஒரு நிமிடம் கடந்த நிலையில், செரண்டிப் முன்கள வீரர் இவான்ஸ் கோல் நோக்கி ஹெடர் செய்த பந்தை, தினேஷ் கோலுக்கு அண்மையில் இருந்து வெளியே தட்டி விட்டார்.

ஆட்டத்தின் 50 நிமிடங்கள் கடந்த நிலையில் இவான் பொலிஸ் அணியின் பெனால்டி எல்லையில் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, அவ்வணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை இவான்ஸ் கோலாக்கி, அணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார்.

65 நிமிடங்களின் பின்னர் செரண்டிப் முன்கள வீரர்கள் பலருக்கு மத்தியில் இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் அவர்கள் கோல் நோக்கி எடுத்த முயற்சியின் போது பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.

SLTB அணியை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்றது செரண்டிப்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் பிரிவு 1 (டிவிசன்-1) இற்கான கால்பந்து தொடரின்

தொடர்ந்து சதுர குனரத்ன கோல் நோக்கி வேகமாக தூரத்தில் இருந்து உதைந்த பந்தை செரண்டிப் கோல் காப்பாளர் அமல் ராஜ் பாய்ந்து தடுத்தார்.

அடுத்த நிமிடம் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து இவான்ஸ் கொடுத்த பந்தை ஷெரோன் கம்பங்களை விட உயர்ந்து வெளியே அடித்தார்.

அடுத்த நிமிடம் செரண்டிப் வீரர் ஹேமந்த பன்டார போட்டியில் இரண்டாவது மஞ்சள் அட்டையையும், அவர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் 10 வீரர்களுடன் சிறப்பாக ஆடிய மாவனல்லை வீரர்கள் இரண்டாவது கோலுக்கான முயற்சிகளை சிறந்த முறையில் மேற்கொண்ட போதும், அவர்கள் தமக்கான வாயப்புக்களை சிறந்த முறையிவ் நிறைவு செய்யவில்லை.

எனவே ஆட்டத்தின் நிறைவில், பொலிஸ் கழகம் முதல் பாதியில் பெற்ற இரண்டு கோல்களுடன் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 2 – 1 செரண்டிப் கால்பந்து கழகம்

  • கோல் பெற்றவர்கள்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – சதுர குனரத்ன 02’, ரியாஸ் அஹமட் 18’

செரண்டிப் கால்பந்து கழகம் – இவான்ஸ் 54’  

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க