கொழும்பு, கண்டி, கேகாலை மற்றும் மன்னார் மாவட்ட அணிகள் அரையிறுதிக்குள்

614
SLC Districts One Day

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு கொழும்பு, கண்டி, கேகாலை மற்றும் மன்னார் மாவட்ட அணிகள் தெரிவாகியுள்ளன.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் 8 அணிகள் இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்தன.

கொழும்பு மாவட்டம் எதிர் மாத்தறை மாவட்டம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாத்தறை மாவட்ட அணித் தலைவர் அஷான் ப்ரியஞ்சன் கொழும்பு மாவட்ட அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார்.

மழையின் குறுக்கீட்டால் கைநழுவிச் சென்ற இலங்கையின் வெற்றி வாய்ப்பு

அந்த வகையில் முதலில் களமிறங்கிய கொழும்பு மாவட்ட அணி, மாத்தறை அணியின் அதிரடிப் பந்து வீச்சில் முதல் 2 ஓவர்களுக்குள் தில்ஷான் முனவீர உள்ளிட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை வெறும் 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில் இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.

அதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் அஷான் ப்ரியஞ்சன் மற்றும் மாதவ வருணபுர ஆகியோர் அணியை மீட்டெடுக்க நிதானத்துடன் துடுப்பாடி 21 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் அணித் தலைவர் அஷான் ப்ரியஞ்சன் 13 ஓட்டங்களுக்கு லஹிறு குமாரவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.

அதனை தொடர்ந்து மாதவ வருணபுரவுடன் இணைந்து கொண்ட லசித் அபேரத்ன நான்காவது விக்கெட்டுக்காக 102 ஓட்டங்களை இணைப்பாட்டமாக  பெற்றதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 135 ஓட்டங்களுக்கு உயர்த்தியிருந்தனர்.

பின்னர் களமிறங்கிய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்துக்கு ஆட்டமிழந்தாலும் சிறப்பாகத் துடுப்பாடிய லஹிறு மதுஷங்க 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணிக்குப் பங்களிப்புச் செய்தார்.

இறுதிவரை போராடி ஓட்டங்களை குவிக்க முயற்சித்த மாதவ வருணபுர 123 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்ளடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றிருந்த போது, துஷ்மந்த சமீரவின் பந்து வீச்சில் இகலகமகேவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அந்த வகையில் கொழும்பு மாவட்ட அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.

அதனையடுத்து குறித்த இலக்கை நோக்கி களமிறங்கிய மாத்தறை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

அதனையடுத்து போட்டியை முன்னெடுத்துச் செல்ல உகந்த காலநிலை இல்லாததால் குறித்த போட்டியில் டக்வார்த் லூயிஸ் முறைப்படி கொழும்பு மாவட்ட அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக நடுவர் குழாமினால் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் கொழும்பு மாவட்ட அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு மாவட்டம்: 209/10 (46.2) மாதவ வருணபுர 86, லசித அபேரத்ன 47, லஹிறு மதுஷங்க 24, லஹிறு குமார 21/4, துஷ்மந்த சமீர 48/3, மலிங்க அமரசிங்க 29/2

மாத்தறை மாவட்டம் : சதுன் வீரக்கொடி 51, பர்வீஸ் மஹரூப் 25,  விஷ்வ பெர்னாண்டோ 18/2, லஹிறு மதுஷங்க 21/2

சரித் அசலங்கவின் சதத்துடன் இலங்கை இளையோர் அணிக்கு முதல் வெற்றி


யாழ் மாவட்டம் எதிர் கண்டி மாவட்டம்

வடக்கு குழு மட்டப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து முதலிடத்தில் இருந்த யாழ் மாவட்ட அணி, இன்றைய போட்டியில் மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமையினால் தோல்வியைத் தழுவியுள்ளது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி மாவட்ட அணித் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

கண்டி மாவட்டத்தின் ஆரம்பம் கசப்பாக இருந்தாலும், எட்டாவது விக்கெட்டுக்காக இணைந்துகொண்ட சாமர கப்புகெதர மற்றும் சஜித்ர சேனாநாயக்க இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக துடுப்பாடி தங்களுக்கிடையே 108 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதனால்  அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தி 274 ஓட்டங்களை யாழ் மாவட்ட அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.  

அதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யாழ் மாவட்ட அணி முதலிரண்டு விக்கெட்டுகளை இரண்டு ஓவர்களுக்குள் 6 ஓட்டங்களுக்கு இழந்து நெருக்கடியில் வீழ்ந்தது. அதனையடுத்து களமிறங்கிய தரங்க பரணவிதான மற்றும் டி.எம் டில்ஷான் ஆகியோர் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட வேளையில் டில்ஷான் 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றாலும், ரமித் ரம்புக்வெல்ல அதிரடியாக துடுப்பாடி 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உள்ளடங்கலாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் தறிந்து ரத்னாயக்கவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.  

அந்த வகையில் பிரபல அதிரடி துடுப்பாட்ட வீரர்களை உள்வாங்கிய அவ்வணி  27.4 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. எனவே, அவ்வணி 107 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

போட்டியின் சுருக்கம்  

கண்டி மாவட்டம்: 273/7 (50) சாமர கப்புகெதர  100, சஜித்ர சேனாநாயக்க 53*, ஓஷாடோ பெர்னாண்டோ 36, சம்மு அஷான் 24, ஜீவன் மென்டிஸ் 47/3, துலஞ்சன மென்டிஸ் 38/2, தனஞ்சய டி சில்வா 17/2

யாழ் மாவட்டம்: 166/10 (27.4) ரமித் ரம்புக்வெல்ல 47, மனோஜ் சரத்சந்திர 27, தரங்க பரனவிதாறன 24, கசுன் மதுசங்க 45/3, தறிந்து ரத்னாயக்க 34/2, சஜித்ர சேனநாயக்க 26/2, ஜெப்ரி வந்தர்சே 29/2  

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா


கேகாலை மாவட்டம் எதிர் பதுளை மாவட்டம்

நீர்கொழும்பு சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில், கேகாலை மாவட்ட அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பதுளை மாவட்ட அணித் தலைவர் இஷான் ஜயரத்ன, கேகாலை அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார். அதனையடுத்து களமிறங்கிய கேகாலை மாவட்ட அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதிலும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் 40.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து எதிரணிக்கு 149 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அவ்வணி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக ஹஷான் துமிந்து 46 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், சிறப்பாக பந்து வீசிய ராணுவ வீரர் சீக்குகே பிரசன்ன 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிகவும் இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய அவ்வணி முதல் மூன்று விக்கெட்டுகளையும் 7 ஓட்டங்களுக்கு இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அதனையடுத்து, களம் நுழைந்த துஷான் விமுக்தி மற்றும் ஹிமேஷ லியனகே ஆகியோர் நான்காம் விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

எனினும், அவர்களிருவரதும் ஆட்டமிழப்புக்கு பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியதால் 20.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணி பெற்றுக்கொண்டது.

அதேநேரம் இன்றைய தினம் அதிரடியாக பந்து வீசிய பிரபாத் ஜெயசூரிய மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.    

போட்டியின் சுருக்கம்

கேகாலை மாவட்டம்: 148/10 (40.3) பசிந்து லக்சன 31, ஹஷான் துமிந்து 46, சஹான் அராச்சிகே 30, சீக்குகே பிரசன்ன 29/3, சஞ்சிக்க ரித்ம 27/2, ஜனக சம்பத் 17/2

பதுளை மாவட்டம்: 73/10 (20.3) ஹிமேஷ லியனகே 26, துஷான் விமுக்தி 10, பிரபாத் ஜெயசூரிய 8/4, அகில தனஞ்சய 16/4, சஹான் அராச்சிகே 21/2

சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்


மன்னார் மாவட்டம் எதிர் திருகோணமலை மாவட்டம்  

பனாகொட ராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடயிலான போட்டியில்,  மன்னார் மாவட்ட அணி சத்துர பீரிஸ் மற்றும் உதார ஜெயசுந்தர ஆகியோரின் அதிரடிப் பந்து வீச்சின் மூலம் திருகோணமலை மாவட்ட அணியை 201 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்ட அணித் தலைவர் ரொஸ்கோ தட்டில் முதலில் மன்னார் மாவட்ட அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி லஹிறு திரிமான்னவின் 74 ஓட்டங்களின் உதவியுடன் 9 விக்கெட் இழப்பிற்கு குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 272 ஓட்டங்களை பதிவு செய்தது. திருகோணமலை மாவட்ட அணி சார்பாக சொஹான் ரங்கிக்க 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து கடினமான ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய திருகோணமலை மாவட்ட அணி, 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 71 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சுமிந்த லக்சான் அதிக பட்ச ஓட்டங்களாக 19 ஒட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்ததால் 201 ஓட்டங்களால் படுதோல்வியுற்றது.   

போட்டியின் சுருக்கம்

மன்னார் மாவட்டம்: 272/9 (50) லஹிறு திரிமான்ன 74, ஜனித் லியனகே 49, லஹிறு மிலந்த 43, ரோஷேன் சில்வா 39, சொஹான் ரங்கிக்க 55/3, புத்திக்க சந்தருவான் 47/2, லஹிறு ஸ்ரீ லக்மால் 54/2

திருகோணமலை மாவட்டம்: 71 (18.4) சுமிந்த லக்சான் 19, சொஹான் ரங்கிக்க 15, லஹிறு ஸ்ரீ லக்மால் 11, சத்துர பிரிஸ் 23/4, உதார ஜெயசுந்தர 15/4

Match Highlights