இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக திமுத் கருனாரத்ன

2244

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவரான டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்த திமுக் கருனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர் கிரிக்கெட் இரசிகர்களால் அறியப்படாத பெயரினை கொண்ட புத்தம்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைக்கு அமைய, திமுத் கருனாரத்னவை இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தெரிவு செய்துள்ளமையினால் அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடாத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

திமுத் கருனாரத்னவின் குறித்த தலைமைப் பதவிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் குறித்த ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இலங்கை டெஸ்ட் அணியின் தற்காலிகத் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றுப் பதிவையும் மேற்கொண்டது.  

இதன் காரணமாக, இம்முறை உலகக் கிண்ணத்தில் திமுத் கருணாரத்னவுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டு வந்தது.

அதேபோன்று, கடந்த வாரம் நிறைவடைந்த சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் போட்டியில் கண்டி அணியின் தலைவராக செயற்பட்ட திமுத் கருணாரத்ன, 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைச்சதத்துடன் 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதனால் குறித்த தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் திமுத் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனவே, திமுத்திற்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் தற்பொழுது அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய தேசிய அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள்…

30 வயதையுடைய இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருனாரத்ன, இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 190 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

திமுத் கருணாரத்ன கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறிருப்பினும், தனக்கு உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைமைப் பதவி கிடைக்காவிட்டால், தான் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<