தனது அபார ஆட்டம் குறித்து ஆச்சரியப்பட்ட இயன் மோர்கன்

165
Getty
Getty

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து இவ்வாறானதொரு இன்னிங்ஸை விளையாடுவேனா என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அணித் தலைவர் இயன் மோர்கனின் சாதனை சதத்துடன் 50 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 397 ஓட்டங்களை எடுத்தது. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் ஒரு அணி எடுத்த அதிகப்பட்ச ஓட்டம் இதுவாகும்.

இங்கிலாந்துடனான தோல்விக்கு ரஷீத் கான் காரணமில்லை: குல்படீன்

இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ………

கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.அத்துடன், 1975க்குப் பின் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி இமாலாய வெற்றியை பதிவு செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் குவித்தது தொடர்பில் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் கருத்து வெளியிடுகையில்,

எமது உடைமாற்றும் அறையில் இவ்வாறான இன்னிங்ஸ்களை விளையாடக் கூடிய பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், என்னை இளம் வீரர்களுடன் அதை ஒப்பிடுவது ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை விளையாடுவேனா என்று நான் நினைக்கவில்லை.

மோர்கனின் உலக சாதனையோடு இங்கிலாந்து அணி இலகு வெற்றி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 24ஆவது ……

உண்மையில், ஆப்கானிஸ்தான் அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். அதேபோல, அவர்களது சுழல் பந்துவீச்சுக்கு முகங்கொடுப்பது என்பது முற்றிலும் மாறுபட்ட சவாலாகும். அந்த சவாலை என்னால் வெற்றிகொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

நான் களமிறங்குவதற்கு முன் போட்டி மழையால் தடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, நானா அல்லது ஜோஸ் பட்லாரா களமிறங்குவது என்பது குறித்து ஆலோசித்தோம். பிறகு நான் களமிறங்கினேன்உண்மையில் ஆரம்பத்தில் ஒருசில பந்துகளை எதிர்கொண்ட போது தடுமாற்றத்துக்கு உள்ளாகினேன். எனக்குப் பிறகு ஜோஸ் பட்லர் களமிறங்க இருந்ததால் அந்த சவால்களை எதிர்கொள்ள ஆயத்தமானேன். இடைநடுவில் எனது பிடியெடுப்பு ஒன்றும் தவறவிடப்பட்டது. அவ்வாறு பிடியெடுப்பை எடுத்திருந்தால் நாங்கள் இன்னும் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்திருக்கும்” என தெரிவித்தார்.

அத்துடன், எனது விளையாட்டில் அடிப்படையான ஒருசில விடயங்களில் இருந்து மாறிவிட்டேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய நாள் முதல் ஸ்கூப்ஸ் மற்றும் ஸ்வீப்ஸ் துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றேன். இருப்பினும், தற்போது நான் முன்னர் இருந்ததை விட வலுவாக துடுப்பாடுகிறேன், அது எனது வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது என குறிப்பிட்டார்.   

அத்துடன், நாங்கள் 280, 290, 300 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்க எதிர்பார்த்தோம். அதேபோல, விக்கெட் கொஞ்சம் நெருக்கடியைக் கொடுக்கும் என்று நான் நினைத்தேன், 200 ஓட்டங்களைப் பெறுவது பற்றி நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த ஓட்ட எண்ணிக்கை எதிரணிக்கு சவாலாக இருக்கும் என கருதினோம்.

ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த இயன் மோர்கன்

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் ………….

உண்மையில் இன்று எங்களுக்கு அருமையான நாளாக இருந்தது. இது துடுப்பெடுத்தாட சிறந்த ஆடுகளமாக காணப்பட்டது. எமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டனர். இந்த ஆடுகளத்தில் நிறைய பௌண்சர்களை காணமுடிந்ததுஅதேபோல, சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகவும் இருந்தது. எனவே, எமது வீரர்கள் சிறந்த முறையில் பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்திருந்தனர். உண்மையில் இது திருப்தி அளிக்கிறது. ஏனெனில், அவ்வாறு துடுப்பெடுத்தாடுவது மிகவும் கடினமாகும் என மேர்கன் குறிப்பிட்டார்.

இதேநேரம், ஷீத் கான் பந்துவீசிய 9 ஒவர்களில் 110 ஓட்டங்களை இங்கிலாந்து அணி குவித்தது. இதில் ஷீத் கானின் பந்தை இயன் மோர்கன் மைதானத்தின் சகல திசைகளுக்கும் வெளுத்து விளாசினார். மோர்கன் குவித்த 148 ஓட்டங்களில் 58 ஓட்டங்கள் ஷீத் கானின் பந்துவீச்சில் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், ஷீத் கானின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இயன் மோர்கன் கருத்து வெளியிடுகையில்,

 

போட்டிக்கு முன் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி முன்கூட்டிய யோசனையுடனும் நாங்கள் எந்த விளையாட்டிலும் களமிறங்கமாட்டோம். ஏனென்றால், எவருக்கும் அதுவொரு மோசமான நாளாக இருக்க முடியும். அவர் வெளிப்படையாக ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவருடன் விளையாடிய அனுபவம் எமக்கு உள்ளது. அவர் நீண்ட காலமாக மிக சிறப்பாக விளையாடி வருகின்ற வீரரரும் ஆவார். ஆனால் எல்லா நல்ல வீரர்களையும் போலவே, இவ்வாறான போட்டிகளில் தான் உங்களைப் பற்றி நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளலாம் என கூறினார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணிககெதிராக பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுஇவ்வாறிருக்க, எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை அணியை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது.

அதன்பிறகு புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை இங்கிலாந்து சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<