175 கிலோமீட்டர் வேகத்தில் பந்தினை வீசினாரா மதீஷ பத்திரன?

97

தற்போது இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில், இலங்கையின் இளையோர் அணி இந்தியாவிடம் 90 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியிருந்தது. 

இந்தியாவுடனான இந்த தோல்வி ஒருபுறமிருக்க, இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய மதீஷ பத்திரன, அனைவர் மூலமும் பேசப்பட்டிருந்தார். ஏனெனில், இந்தப் போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது யஷாஷ்வி ஜஸ்வாலிற்கு எதிராக மதீஷ பத்திரன 4ஆவது ஓவரினை வீசிய போது குறித்த ஓவரின் பந்து ஒன்று 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டதாக வேகம் பதியும் கருவியில் (Speed Gun) பதிவானது. 

மதீஷ வீசிய இந்த பந்தே கிரிக்கெட் போட்டிகளில் வீசப்பட்ட உலகின் மிகவும் வேகமான பந்து என்பதால் அனைவரும் இது தொடர்பில் பேசியிருந்தனர். 

வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தால் சம்பியனாகியது CCC

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரில்……….

எனினும், வேகம் பதியும் கருவியில் இருந்த குறைபாடு ஒன்றின் காரணமாகவே மதீஷ வீசிய பந்து இவ்வாறு அதிக வேகத்தில் பதிவாகியிருப்பதாக தற்போது தெரிய வந்திருக்கின்றது. 

எவ்வாறிருப்பினும், உலகில் அதிக வேகத்திற்கு பந்துவீசிய வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சொஹைப் அக்தார் தொடர்ந்தும் நீடிக்கின்றார். 

சொஹைப் அக்தார், 2003ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்தினை வீசி உலகில் அதிக வேகத்தில் பந்துவீசியவராக உலக சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<