அபார வெற்றிகளுடன் வருடத்தை ஆரம்பித்துள்ள கண்டி, ஹெவ்லொக் அணிகள்

77

இலங்கையில் உள்ள முதற்தர றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 8வது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் ஹெவ்லொக் விளையாட்டுக் கழக அணிகள் அபார வெற்றிகளுடன் தங்களுடைய வெற்றிப் பயணங்களை ஆரம்பித்துள்ளன.

இதன்படி, ஆரம்பித்துள்ள இரண்டாவது கட்டத்தின் ஆரம்பப் போட்டிகளாக இடம்பெற்ற கடந்த வாரப் போட்டிகளின் முடிவுகள் இதோ

அகால மரணமடைந்த இளம் ரக்பி வீரர்

CR & FC கழகத்தின் முன்கள வீரர்களில் ஒருவராக…

ஹெவ்லொக் SC எதிர் இராணுவப்படை SC

ரத்மலானையில் நடைபெற்ற ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான இந்த வருடத்தின் முதல் போட்டியில், ஹெவ்லொக் அணி 50-32 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியினை பதிவுசெய்தது.

முதல் பாதியில் 5 ட்ரைகளை வைத்து, மூன்று கன்வேர்சன்களுடன் 31-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேறிய ஹெவ்லொக் அணி, இரண்டாவது பாதியில் போட்டியை தங்களது கட்டுக்குள் வைத்து, 50-32 என இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

முடிவு  – ஹெவ்லொக் SC 50-32 இராணுவப்படை SC


CR & FC எதிர் பொலிஸ் SC

CR & FC அணியின் சொந்த மைதானமான லொங்டன் பிளேஸில் கடந்த 5ம் திகதி நடைபெற்ற போட்டியில், பொலிஸ் விளையாட்டுக் கழகம் த்ரில் வெற்றியினை பெற்றுக்கொண்டது.

வெற்றியை மயிரிழையில் தவறவிட்ட கடற்படை வீரர்கள்

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி….

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டன. முதற்பாதியில் பொலிஸ் அணி 9 புள்ளிகளை பெற, CR & FC அணி 7 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. எனினும், இரண்டாவது பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக்கொண்ட பொலிஸ் அணி 21-18 என மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முடிவு – CR & FC 18-21 பொலிஸ் SC


CH & FC எதிர் கடற்படை SC

கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் சர்வதேச அரங்கில் நேற்று (06) நடைபெற்ற மற்றுமொரு விறுவிறுப்பான போட்டியில் CH & FC அணி மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் கடற்படை விளையாட்டுக் கழக அணிக்கு எதிராக த்ரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இரண்டு அணிகளும் கடுமையான போட்டித் தன்மையுடன் ஆட்டத்தை வெளிப்படுத்த, முதற்பாதி 14-14 என்ற புள்ளிகள் கணக்கில் சமனிலையை எட்டியது. தொடர்ந்தும் போட்டி சூடுபிடிக்க 21-21 என மீண்டும் சமனிலையுடன் போட்டி நகர்ந்தது. இறுதியில் CH & FC அணி சிறிய முன்னிலையுடன் முன்னேற 31-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

முடிவு – CH & FC  31-28 கடற்படை SC

Photos: CH & FC v Navy SC – Dialog Rugby League 2018/19 | #Match 31

ThePapare.com | Hiran Weerakkody | 07/01/2019 Editing….


கண்டி SC எதிர் விமானப்படை SC

இம்முறை நடைபெற்று வரும் டயலொக் றக்பி லீக்கின் தோல்வியின்றி பயணித்து வரும் கண்டி அணி, விமானப்படைக்கு எதிரான போட்டியில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதற்பாதியில் 38-05 என்ற புள்ளிகள் கணக்கில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்ட கண்டி அணி, இரண்டாவது பாதியிலும் புள்ளிகளை குவித்து 52-22 என்ற 30 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

முடிவு  – கண்டி SC 32-22 விமானப்படை SC

>>காணொளிகளைப் பார்வையிட<<