வெற்றியை மயிரிழையில் தவறவிட்ட கடற்படை வீரர்கள்

91

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின், ஏழாவது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (23) நிறைவுக்கு வந்தன.

இதில் கடந்த ஆறு வாரங்களாக வெற்றிநடை போட்டு வரும் கண்டி விளையாட்டு கழகம் மீண்டும் ஒரு வெற்றியை கடந்த வாரம் பதிவுசெய்ததுடன், ஹெவ்லொக் விளையாட்டு கழகம் மற்றும் CH&FC ஆகிய கழகங்களும் வெற்றிகளை பதிவுசெய்தன. எனினும், இராணுவப்படை மற்றும் CR&FC அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

தொடரின் முதல் தோல்வியை கண்டி அணியிடம் பெற்ற ஹெவலொக்

முதல்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின், ஆறாவது…

இராணுவப்படை வி.க எதிர்  CR & FC

ரத்மலானையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்த 24-24 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

முதற்பாதியில் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இராணுவப்படை அணி, 14-12 என்ற இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. எனினும், இரண்டாவது பாதியில் இராணுவப்படை அணியை கட்டுப்படுத்திய CR & FC அணி, எதிரணியை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று போட்டியை சமப்படுத்தியது.

முடிவு – இராணுவப்படை வி.க 24-24  CR & FC

கண்டி வி.க எதிர் கடற்படை வி.க

டயலொக் கழக றக்பி லீக் தொடரில், தொடர்ந்து சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்திவந்த கண்டி அணிக்கு, கடற்படை அணி கடும் நெருக்கடியை கொடுத்திருந்தது. எவ்வாறாயினும் இறுதிநேரம் வரை முன்னிலையை வைத்திருந்த கண்டி அணி 22-20 என இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வெலிசறை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின், முதற்பாதியில் 14-8 என்ற முன்னிலையில் இருந்த கண்டி அணி, இரண்டாவது பாதியில் நெருக்கடியை சந்தித்தது.

போட்டியின் முழு நேரத்திலும் கண்டி அணி, 3 ட்ரைகள், 2 கன்வேர்சன் மற்றும் ஒரு பெனால்டியுடன் 22 புள்ளிகளை பெற, கடற்படை அணி 3 ட்ரைகள், ஒரு கன்வேர்சன் மற்றும் ஒரு பெனால்டி என்ற அடிப்படையில் 20 புள்ளிகளை பெற்று தோல்வியடைந்தது. கடற்படை அணி கன்வேர்சன்களில் விட்ட தவறுகளால் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுகண்டி வி. 22-20 கடற்படை வி.  

 

விமானப்படை வி.க  எதிர் ஹெவ்லொக் வி.க

விமானப்படை மற்றும் ஹெவ்லொக் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஹெவ்லொக் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியில் 22-21 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படை முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய ஹெவ்லொக் அணி, முன்னிலையை தகர்த்து வெற்றிபெற்றது.

முடிவு – ஹெவ்லொக் வி.க 31-25 விமானப்படை வி.க

தொடரின் முதல் தோல்வியை கண்டி அணியிடம் பெற்ற ஹெவலொக்

முதல்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின், ஆறாவது

CH&FC மற்றும் பொலிஸ் வி.க ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதற்பாதியில் பெற்றிருந்த சிறந்த முன்னிலையின் ஊடாக CH&FC அணி, 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

CH&FC அணி முதற்பாதியில் 24-10 என்ற 14 புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றது. எனினும், இரண்டாவது பாதியில் பொலிஸ் அணி மேலதிகமாக 14 புள் ளிகளை பெற்று 24 புள்ளிகளை பெற, CH&FC அணி 5 புள்ளிகளை மாத்திரம் மேலதிகமாக பெற்று, 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

முடிவு – CR & FC 29-24 பொலிஸ் S வி.க

 

இதேவேளை, இந்த போட்டி முடிவுகளின் அடிப்படையில், கண்டி வி.க அணி 41 புள்ளிகளை பெற்று, புள்ளிப் புட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், ஹெவ்லொக் மற்றும் CR&FC அணிகள் முறையே 34 மற்றும் 26 புள்ளிகளுடன் இரண்டாாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன.

 

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<