கடற்படை அதிர்ச்சி கொடுத்த CH&FC : தொடர் தோல்விக்கு முடிவு கட்டிய CR&FC

155

டயலொக் ரக்பி லீக்கின் இந்த வாரத்திற்கான முதல் இரண்டு போட்டிகளிலும் எதிரணிக்கு கடும் அழுத்தம் கொடுத்த CH&FC மற்றும் CR&FC அணிகள் சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

இதில் CR&FC மற்றும் பொலிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே CR&FC அணி அழுத்தத்தை கொடுத்து வந்தது. ஹஷான் கோமேசின் உதையை தடுத்த அவிஷ்க ஹீன்போல CR&FC அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். தொடர்ந்து அணியின் தலைவரான கவிந்து பெரேரா மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்து CR&FC அணியின் ட்ரை மழையை ஆரம்பித்து வைத்தார். தரிந்த ரத்வத்த இரண்டு கொன்வேர்சனையும் தவறவிட்டார். (பொலிஸ் 00- CR&FC 10)

மேலதிக புள்ளியுடன் பொலிஸ் அணியை வீழ்த்திய இராணுவம்

கழகங்களுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின்.. டயலொக் ரக்பி லீக் 5 ஆம்..

எனினும், பொலிஸ் அணி செய்த பந்துப் பரிமாற்றத்தை இடையில் பறித்துக்கொண்ட ரத்வத்த, இலகுவாக ஓடிச் சென்று ட்ரை கோட்டை கடந்தார். இம்முறை அவரது ட்ரையை அவர் கொன்வேர்ட் செய்யத் தவறவில்லை. (பொலிஸ் 00- CR&FC 17)

பொலிஸ் அணி முதலாவது பாதியில் அனைத்து புள்ளிகளையும் சந்தேஷ் ஜெயவிக்ரம ஊடாக பெற்றுக்கொண்டது. சந்தேஷ் தமக்கு கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பினையும் சிறப்பாக உதைத்து பொலிஸ் அணிக்கு 6 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இவ்இரண்டு பெனால்டியிலும் CR&FC வீரர்களான சரண செண்டநாயக மற்றும் உதார கயான் ஆகியோர் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு நடுவரால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (பொலிஸ் 06 – CR&FC 17)

முதற் பாதியில் ஹாபிஸ் நூர் மற்றும் கவிந்து பெரேரா ஆகியோர் CR&FC அணி சார்பாக தொடர்ந்து ட்ரை வைக்க, பொலிஸ் அணி வீரர்கள் போட்டியின் மீதான தமது நம்பிக்கையை இழந்தனர். ரத்வத்தவின் வெற்றிகரமான கொன்வேர்சன் பொலிஸ் அணி வீரர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. (பொலிஸ் 06 – CR&FC 31)

தரிந்த ரத்வத்த ட்ரோப் கோல் ஒன்றை உதைத்ததன் மூலம் முதற் பாதி முடிவுக்கு வந்தது.

முதற் பாதி: பொலிஸ் 06 – CR&FC 34

இரண்டாம் பாதியில் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து விளையாடிய பொலிஸ் அணியானது, நினைத்தது போலவே முதலாவது ட்ரையை வைத்தது. தலைவர் உதார சூரியப்பெரும முதலாவது ட்ரை வைத்து பொலிஸ் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்தார். சந்தேஷ் சிறப்பாக கொன்வேர்ட் செய்தார்.

(பொலிஸ் 13 – CR&FC 31)

ஓமல்க குணரத்ன இப்போட்டியில் சிறப்பான திறமையை வெளிக்காட்டவில்லை. அதே வேளை மோசமான ஆரம்பத்தை ரத்வத்த பெற்றுக்கொண்ட பொழுதிலும், சிறப்பான ட்ரை மூலம் அதை நிவர்த்தி செய்தார். விங் நிலை வீரரான சஷான் மொகமடின் அபாரமான ஆட்டத்தின் பின்னர் பந்தை பெற்றுக்கொண்ட ரத்வத்த மைதானத்தில் ஓரத்தில் ட்ரை வைத்து அசத்தினார். எனினும் கொன்வேர்சனை தவறவிட்டார். (பொலிஸ் 13- CR&FC 39)

கொழும்பு ஸாஹிரா ரக்பி அணியின் புதிய தலைவராக முஅம்மர் டீன்

நடைபெறவுள்ள 2018ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான பாடசாலைகளுக்கு…

பொலிஸ் அணி ட்ரை கோட்டை நெருங்கிய பொழுதும், சுஜான் கொடிதுவக்கு பந்தை நழுவ விட்டதன் மூலம் அவ்வாய்ப்பு பறிபோனது. CR&FC அணி மாற்று வீரர்களை களத்தில் இறக்க, கோகில சம்மத்தப்பெரும தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து CR&FC அணிக்கு மிகப்பெரிய வெற்றியை அன்பளிப்பாக வழங்கினார். இம்முறை ஷானாக குமார இரண்டு கொன்வேர்சனையும் சிறப்பாக உதைத்தார்.

முழு நேரம்: பொலிஸ் 13 (1T, 2P) –  CR&FC 53 (8T, 5C, 1 DG )

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – சுபுன் வர்ணகுலசூரிய (CR&FC)


CH&FC எதிர் கடற்படை  

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் நடைப்பெற்ற விறுவிறுப்பான போட்டியின் பின்னர் 27 – 24 என்ற புள்ளிகள் அடிப்படையில் கடற்படை அணியை தோற்கடித்து, இத்தொடரில் தமது 3ஆவது வெற்றியை CH&FC அணி பெற்றுக்கொண்டது.

போட்டியின் 6ஆவது நிமிடத்தில் CH&FC அணியின் சாமுவேல் மதுவந்த இலகுவான பெனால்டி உதையை தவறவிட்டார். தொடர்ந்து ஏட்டுக்கு போட்டியாக கடற்படை அணியின் திலின விஜேசிங்கவும் 11ஆவது நிமிடத்தில் பெனால்டி உதையை தவறவிட, இரண்டு அணிகளாலும் புள்ளிகளை பெற முடியவில்லை.

போட்டியின் முதலாவது ட்ரையை CH&FC அணியின் யோஷித்த ராஜபக்ச வைத்தார். மோல் மூலமாக முன் நகர்ந்து சென்ற CH&FC வீரர்கள் ட்ரைக்கு துணையாக அமைந்தனர். சாமுவேல் இம்முறை கொன்வேர்சனை தவறவிடவில்லை. தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக ட்ரோப் கோல் ஒன்றை கம்பத்தின் நடுவே உதைத்த சாமுவேல் CH&FC அணியை 10 புள்ளிகளால் முன்னிலைக்கு அழைத்து சென்றார். (CH&FC 10 – கடற்படை 00)

எனினும் கடற்படை அணியின் துலாஞ்சன விஜேசிங்கவின் ட்ரையின் மூலமாக CH&FC அணியின் முன்னிலை சிறிது குறைக்கப்பட்டது. திலினவின் சிறப்பான கொன்வேர்சனுடன் போட்டி மீண்டும் சூடுபிடித்தது. (CH&FC 10 – கடற்படை 07)

33ஆம் நிமிடத்தில் புத்திம பிரியரத்ன கடற்படை அணி சார்பாக ட்ரை வைத்து, போட்டியில் முதன் முறையாக கடற்படை அணியை முன்னிலைக்கு அழைத்து சென்றார். எனினும் திலின கொன்வேர்சனை தவறவிட்டார். (CH&FC 10 – கடற்படை 12)

முதற் பாதி: CH&FC 10 – கடற்படை 12

CH&FC அணிக்கு பெனால்டி மூலமாக புள்ளிகள் பெற வாய்ப்பு கிடைத்த பொழுதும் அது தவறவிடப்பட்டது. எனினும் 5 நிமிடங்களின் பின்னர் CH&FC அணியின் சசங்க ஆரியரத்ன சிறப்பான ஓட்டத்தின் பின்னர் மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்து மீண்டும் தனது அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். மதுவந்த கடினமான கொன்வேர்சனை சிறப்பாக உதைத்தார். (CH&FC 17 – கடற்படை 12)

கடற்படையை வீழ்த்தி கண்டி அணி தொடர்ந்தும் முதலிடத்தில்

கழகங்களுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் மூன்று போட்டிகள் நேற்று (09)..

55ஆவது நிமிடத்தில் CH&FC அணியின் ஹுகர் நிலை வீரரான நிஸால் தேசந்த மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் இளம் வீரர் மதுவந்த ட்ரை வைத்து CH&FC அணிக்கு நம்பிக்கை வழங்கினார். அவரது ட்ரையை அவரே கொன்வேர்ட் செய்தார். (CH&FC 24- கடற்படை 12)

கடும் முயற்சியின் பின்னர் கடற்படை அணியானது 66 ஆவது நிமிடத்தில் தனுஜ மாளிப்பத்த மூலமாக ட்ரை வைத்து CH&FC அணிக்கு அழுத்தம் கொடுத்தது. திலின கொன்வேர்சனை தவறிவிட்டார். (CH&FC கடற்படை 17)

69 ஆவது நிமிடத்தில் கடற்படை தலைவர் தனுஷ்க பெரேரா மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலமாக 3 புள்ளிகளை CH&FC அணி பெற்றுக்கொண்டது. 5 நிமிடங்களே போட்டி நிறைவடைய காணப்படும் தருணத்தில், கடற்படை அணியின் மொகமட் அப்சல் CH&FC அணியின் 3 வீரர்களை தாண்டி சென்று சிறப்பான ட்ரை வைத்து அசத்தினார். திலினவின் கொன்வேர்சனுடன் CH&FC அணி வெறும் 3 புள்ளிகளால் முன்னிலையில் காணப்பட்டது. (CH&FC 27- கடற்படை 24)

இறுதி சில நிமிடங்களில் போட்டி சூடுபிடித்தது. கடற்படை அணிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தாலும் அதன் மூலம் சிறந்த பயனை கடற்படை அணிக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதன் மூலம் CH&FC அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

முழு நேரம்: CH&FC 27 (3T ,1P ,1DG ,3C) – கடற்படை 24 (4T ,2C )

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர்சசங்க ஆரியரத்ன (CH&FC)