டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர்

281

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன.

பதினெட்டு வயது பாடசாலை ரக்பி வீரர் பயிற்சியின்போது மரணம்

கண்டியில் பதினெட்டு வயது பாடசாலை ரக்பி வீரர் ஒருவர் பயிற்சியின்போது மயங்கி…

தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன.

22 வயதிற்குட்பட்டோர் பிரிவு

முதல் அரையிறுதி

முதலாவது அரையிறுதிப் போட்டியில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வெற்றியாளராகி, நடப்புச் சம்பியன்களாகத் திகழ்ந்த இளவாலை மத்தி அணியினரை காலிறுப் போட்டியில் 02:01 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்ற புத்தூர் சென்றல் ஸ்ரார் அணியும், மட்டுவில் மோகனதாஸ் அணியுடனான போட்டியில் 02:01 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றிருந்த கெருடாவில் அண்ணா அணியும் போட்டியிட்டிருந்தன.

போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்ற இரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, 25:13, 25:12, 25:12 என இலகுவாக தொடர்ச்சியாக மூன்று செற்களிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர் கெருடாவில் அண்ணா அணியினர்.

இரண்டாவது அரையிறுதி

புத்தூர் வளர்மதி மற்றும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணிகள் மோதியிருந்த மூன்றாவது காலிறுதிப் போட்டியில், முதல் செற்றினை இந்து இளைஞர் அணியினர் கைப்பற்றியிருந்த போதும் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு செற்களிலும் வெற்றிபெற்று 2:1 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றனர் புத்தூர் வளர்மதி அணியினர்.

அதேபோன்று, நான்காவது காலிறுப் போட்டியில் சிறுப்பிட்டி ஜனசக்தி அணிக்கெதிராக தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் இலகுவாகக் கைப்பற்றிய அம்பாள் அணியினர் அரையிறுதிக்குத் தகுதிபெற்றனர்.  

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 25:20, 25:13, 25:21 என மூன்று செற்களையும் தொடர்ச்சியாகக் கைப்பற்றிய வளர்மதி அணி 3:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இரண்டாவது அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டனர்.

இறுதிப் போட்டி

புத்தூர் வளர்மதி மற்றும் கெருடாவில் அண்ணா அணியினர் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில் 25:20, 25:14, 25,21 என தொடர்ச்சியாக முதல் மூன்று செற்களையும் கைப்பற்றி 3:0 என்ற நேர் செற் கணக்கில் இலகு வெற்றி பெற்ற வளர்மதி அணியினர் யாழ் மாவட்ட சம்பியன்காளாகியதுடன் தேசிய ரீதியிலான சுற்றுப் போட்டிக்கும் தெரிவாகினர்.  

தர்ஜினியின் உதவியால் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள புனித அல்பான்ஸ்

உலகின் அதிக உயரமான வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின்…

திறந்த பிரிவு

திறந்த பிரிவில் நடப்பு சம்பியன்களான இந்து இளைஞர் அணியினர் நீர்வேலி ஐக்கியம் அணிக்கெதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் 25:20 என இலகுவாகக் கைப்பற்றினர். இரண்டாவது செற்றில் ஜக்கிய அணியினர் பலத்த அழுத்தத்தினைக் கொடுத்தபோதும் 31:29 என்ற புள்ளிகளடிப்படையில் அந்த செற்றினையும் கைப்பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இளவாலை மத்திய விளையாட்டுக் கழகம், நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக் கழகம் ஆகியன போட்டிக்கு சமூகம் தராததன் காரணமாக இந்து இளைஞர் அணி மீண்டுமொரு முறை இறுதிப் போட்டியில் தடம் பதித்தது.

மறுபக்கத்தில் தற்போதைய தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணியான ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற செற் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றது.

மற்றைய காலிறுதியாட்டத்தில் KMV கரிஷ் அணியினை 2:0 என்ற நேர் செற் கணக்கில்  வீழ்த்திய கலைமதி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்காக ஆவரங்கால் மத்தி மற்றும் புத்தூர் கலைமதி அணிகள் போட்டியிட்டிருந்தன. முதலாவது செற்றினை 25:14 என மத்திய விளையாட்டுக் கழக அணி கைப்பற்றியது. இரண்டாவது செற்றினை 24:26 என போராடிக் கைப்பற்றியது கலைமதி. அதனையடுத்து வந்த இரண்டு செற்களையும் ஆவரங்கால் மத்தி அணியினர் 25:18, 25:20 என்ற புள்ளிகளடிப்படையில் கைப்பற்றினர்.

இதன் காரணமாக, இறுதியாக 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்ற ஆவரங்கால் மத்திய அணியினர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.  

பலம் மிக்க சென் மேரிசை வீழ்த்தியது செரண்டிப் அணி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l)…

இறுதிப் போட்டி

நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்த இறுதிப் போட்டியில் முதலாவது செற்றினை 25:15 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது இந்து இளைஞர் அணி. அடுத்த செற்றினை 25;14 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது மத்தி அணி.

போட்டி மிகவும் விறுவிறுப்படைய இந்துவின் பக்கத்தில் ஜனகனின்  நேர்த்தியான அறைதல்கள், மறுபக்கம் சொறுபனின் மீள்வருகை, நேர்த்தியான தடுப்பாட்டம் என இருக்கையில், பரபரப்பான மூன்றாவது செற்றினை 25:23 என இந்து இளைஞர் அணி போராடிக் கைப்பற்றியது.

தொடர்ச்சியாக நான்காவது செற்றினையும் 25:18 எனக் கைப்பற்றிய இந்து இளைஞர் அணி 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று யாழ் மாவட்ட சம்பியன்களாக மாறியதுடன், அவ்வணியினர் நடப்பாண்டிற்கான  தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகினர்.