இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை கௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் 2016ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதற்தடவையாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான ரங்கன ஹேரத் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, கடந்த 3 வருடங்களாக வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றுவந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சைப் பின்தள்ளி இவ்விருதைத் தட்டிச் சென்ற ஹேரத், தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகவும் வருடத்தின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்திய தொடரின் பிறகு இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வருட இறுதியில் நிரந்த…

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழா நேற்று(31) பத்தரமுல்லையில் உள்ள வோர்டஸ் ஏட்ஜ் ஹோட்டலில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. இதன்போது 60 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் அண்மைக்காலமாக இலங்கை அணியில் சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற அசேல குணரத்ன 4 விருதுகளைப் பெற்றுக்கொண்டார். வருடத்தின் சிறந்த T-20 துடுப்பாட்ட வீரர், சிறந்த T-20 சகலதுறை வீரர், ஒரு நாள் போட்டியின் வருடத்தின் சிறந்த சகலதுறை வீரர் மற்றும் வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க வீரர் ஆகிய 4 விருதுகளையும் அவர் தட்டிச் சென்றார்.  

இதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, வருடத்தின் சிறந்த T-20 பந்துவீச்சாளருக்கான விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருதை தனன்ஜய டி சில்வா பெற்றுக்கொண்டதுடன், சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரருக்கான விருதை டில்ருவன் பெரேரா பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், வருடத்தின் சிறந்த ஒரு நாள் பந்து வீச்சாளருக்கான விருதை சுரங்க லக்மால் பெற்றுக்கொண்ட அதேவேளை, சிறந்த ஒரு நாள் துடுப்பாட்ட வீரருக்கான விருதை குசல் மெண்டிஸ் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருடத்தின் வளர்ந்து வளரும் வீரருக்கான விருதை விக்கெட் காப்பாளரும், அதிரடித் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல பெற்றுக்கொண்டார்.Dialog Cricket Awards 2017

பெண்கள் பிரிவில், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளின் வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருதை சமரி அத்தப்பத்து பெற்றுக்கொண்டதுடன், வருடத்தின் சிறந்த T-20 பந்துவீச்சாளராக சுகன்திகா குமாரியும், ஒரு நாள் பந்துவீச்சாளராக தற்போதைய அணியின் தலைவி இனோகா ரணவீரவும் தெரிவாகினர்.   

விருது வழங்கும் விழாவைப் பார்வையிட

இம்முறை விருது வழங்கும் விழாவிலும் சிறப்பு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் வருடத்தின் சிறந்த சர்வதேச போட்டி நடுவருக்கான விருதை குமார் தர்மசேன பெற்றுக்கொண்டார். முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை முன்னாள் வீரர் நீல் பெரேரா பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த வருடம் முதல் வழங்கப்பட்டு வருகின்ற வருடத்தின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதைசண்டே டைம்ஸ்” பத்திரிகையின் விளையாட்டு ஆசிரியர் சம்பிக்க பெர்ணாந்து பெற்றுக்கொண்டார்.

டயலொக் ஆசியாடா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தை முதற்தடவையாக வென்று கொடுத்த அவ்வணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் கலந்துகொண்டதுடன், பிரதம விருந்தினராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கபில் தேவ் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியை எனது இளமைப் பருவத்திலிருந்து பார்த்து வருகின்றேன். நான் இந்திய அணியில் இடம்பெற்ற ஆரம்ப காலம் முதல் இலங்கை கிரிக்கெட், உலகம் முழுவதும் பிரபல்யமடைந்து காணப்பட்டது. மிகவும் குறுகிய காலப்பகுதியில் உலகை நீங்கள் வெற்றிகொண்டீர்கள். இது தனியொரு வீரரால் கிடைத்த வெற்றி அல்ல. மாறாக இதனுடன் தொடர்புபட்ட அனைவரது முயற்சிகளின் பிரதிபலனாக நான் இதை பார்க்கிறேன். கடந்த காலங்களில் விளையாடிய பல போட்டிகளில் நீங்கள் தோல்விகளை சந்தித்தாலும், உங்களுடைய ரசிகர்கள் என்றும் போல மைதானத்துக்கு வந்து உற்சாகமளித்தார்கள் என அவரது உரையில் தெரிவித்திருந்தார்.

வழங்கப்பட்ட விருதுகள்

பெண்கள் கிரிக்கெட் – (T20 – டிவிஷன் 1)

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை – பிரஷாதினி வீரக்கொடி (கடற்படை விளையாட்டுக் கழகம்)
சிறந்த பந்துவீச்சாளர் – ஜனகாந்தி மாலா (கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம்)
சிறந்த சகலதுறை வீராங்கனை – சமரி அத்தபத்து (விமானப்படை விளையாட்டுக் கழகம்)
இரண்டாவது இடம் (2016) – இராணுவ விளையாட்டுக் கழகம்
சம்பியன் (2016) – விமானப்படை விளையாட்டுக் கழகம்

பாகிஸ்தானின் வெற்றியில் இலங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்…

பெண்கள் கிரிக்கெட் – (50 ஓவர்கள் – டிவிஷன் 1)

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை – லசந்தி மதுஷானி (கடற்படை விளையாட்டுக் கழகம்)
சிறந்த பந்துவீச்சாளர் – இனோகா ரணவீர (கடற்படை விளையாட்டுக் கழகம்)
சிறந்த சகலதுறை வீராங்கனை – சமரி அத்தபத்து (விமானப்படை விளையாட்டுக் கழகம்)
இரண்டாவது இடம் (2016) – இராணுவ விளையாட்டுக் கழகம்
சம்பியன் (2016) – விமானப்படை விளையாட்டுக் கழகம்

23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் (T20 – டிவிஷன் 1)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – லஹிரு உதார (NCC)
சிறந்த பந்துவீச்சாளர் – ரமேஷ் மெண்டிஸ் (SSC)
சிறந்த சகலதுறை வீரர் – ரமேஷ் மெண்டிஸ் (SSC)
இரண்டாவது இடம் (2016) – SSC
சம்பியன் (2016) – இராணுவ விளையாட்டுக் கழகம்

23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் (டிவிஷன் 1)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – கிரிஷான் சன்ஜுல (SSC)
சிறந்த பந்துவீச்சாளர் – சலன டி சில்வா (சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம்)
சிறந்த சகலதுறை வீரர் – கசுன் விதுர (சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம்)
இரண்டாவது இடம் (2016) – இராணுவ விளையாட்டுக் கழகம்
சம்பியன் (2016) – சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம்

பிரீமியர் லீக் (B பிரிவு)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – ஹஷான் பிரபாத் (குருநாகல் வை.சி.சி)
சிறந்த பந்துவீச்சாளர் – சாமிகர எதிரிசிங்க (இலங்கை துறைமுக விளையாட்டுக் கழகம்)
சிறந்த சகலதுறை வீரர் – ரஜீவ வீரசிங்க (லங்கன் சி.சி)
இரண்டாவது இடம் (2016) – பாணந்துறை விளையாட்டுக் கழகம்
சம்பியன் (2016) – (இலங்கை துறைமுக விளையாட்டுக் கழகம்

பாடகர்களாக மாறிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

பிரீமியர் லீக் (A பிரிவு)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – சதீர சமரவிக்ரம (கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம்)
சிறந்த பந்துவீச்சாளர் – மலிந்த புஷ்பகுமார (சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம்)
சிறந்த சகலதுறை வீரர் – சத்துரங்க டி சில்வா (NCC)
இரண்டாவது இடம் (2016) – சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம்
சம்பியன் (2016) – SSC

மாகாணங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட்

சிறந்த துடுப்பாட்ட வீரர் – ஹர்ஷ குர்ரே (கிளிநொச்சி மாவட்டம்)
சிறந்த பந்துவீச்சாளர் – சன்ஜிக ரித்ம (பதுளை மாவட்டம்)
சிறந்த சகலதுறை வீரர் – அசான் பிரியன்ஜன் (கொழும்பு மாவட்டம்)
இரண்டாவது இடம் (2016) – கேகாலை மாவட்டம்
சம்பியன் (2016) – கொழும்பு மாவட்டம்

பெண்கள் பிரிவு

சிறந்த T-20 வீராங்கனை – சமரி அத்தபத்து
சிறந்த T-20 பந்துவீச்சாளர் – சுகன்தி குமாரி
சிறந்த ஒரு நாள் துடுப்பாட்ட வீராங்கனை – சமரி அத்தபத்து
சிறந்த ஒரு நாள் பந்துவீச்சாளர் – இனோகா ரணவீர

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும்..

ஆண்கள் பிரிவு

சிறந்த T-20 துடுப்பாட்ட வீரர் – அசேல குணரத்ன
சிறந்த T-20 பந்துவீச்சாளர் – லசித் மாலிங்க
சிறந்த ஒரு நாள் சகலதுறை வீரர் – அசேல குணரத்ன

சிறந்த ஒரு நாள் துடுப்பாட்ட வீரர் – குசல் மெண்டிஸ்
சிறந்த ஒரு நாள் பந்துவீச்சாளர் – சுரங்க லக்மால்
சிறந்த ஒரு நாள் சகலதுறை வீரர் – அசேல குணரத்ன

சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் – தனன்ஜய டி சில்வா
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் – ரங்கன ஹேரத்
சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரர் – தில்ருவன் பெரேரா

சிறப்பு விருதுகள்

உள்ளூர் நடுவர் – ரென்மோ மார்டினஸ்
உள்ளூர் போட்டி நடுவர் – வெண்டெல் லெப்ரோய்
வாழ்நாள் சாதனையாளர் விருது – நீல் பெரேரா
சர்வதேச நடுவர் – குமார் தர்மசேன
சிறந்த ஊடகவியலாளர் – சம்பிக்க பெர்ணாந்து (சண்டே டைம்ஸ்)
வளர்ந்து வரும் வீரர் (உள்ளூர்) – ரொன் சந்த்ரகுப்த
எதிர்பார்ப்பு மிக்க வீரர்(உள்ளூர்) – வனிந்து ஹசரங்க டி சில்வா
வளரந்து வரும் வீரர் – நிரோஷன் திக்வெல்ல
எதிர்பார்ப்பு மிக்க வீரர் – அசேல குணரத்ன
வருடத்தின் டயலொக் வீராங்கனைக்கான விருது – சமரி அத்தபத்து
வருடத்தின் டயலொக் வீரருக்கான விருது – ரங்கன ஹேரத்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<