இறுதி நிமிடத்தில் திறமையை வெளிக்காட்டிய இராணுவ ரக்பி அணி, CH&FC அணியை 20-15 என வீழ்த்தி, டயலொக் கழக ரக்பி லீக் போட்டிகளில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலாவது வாரத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்த இரு அணிகளும், வெற்றியை எதிர்பார்த்து இரண்டாவது வாரத்திற்காக இடம்பெற்ற இப்போட்டியில் களமிறங்கின. எனினும் CH&FC அணியின் 30 போட்டிகள் வெற்றியற்ற சாதனை அவ்வாறே தொடர்ந்தது.  

டயலொக் ரக்பி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த கடற்படை, CR & FC

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் தனது…

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் (ரேஸ் கோஸ்) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலாவது புள்ளியினை இராணுவ அணி பெற்றுக்கொண்டது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இராணுவ அணியின் கயான் சாலிந்த உதையின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.

இதற்கு பதிலடியாக, CH&FC  அணியின் இரங்க ஆரியபால, இராணுவ தரப்பின் கோட்டைக் கடந்து போட்டியின் முதலாவது ட்ரையினை வைத்தார். சாமுவேல் மதுவந்த கொன்வெர்சனை தவறவிட்டார். எனினும், CH&FC அணி இரண்டு புள்ளிகளால் முன்னிலையில் காணப்பட்டது. (3-5)  

சிறிது நேரத்தில் அதிரடியாக எதிரணிக்கு அழுத்தம் கொடுத்த இராணுவ அணி, தமது முன் வரிசை வீரரான ஷெஹான் சில்வா மூலமாக முதலாவது ட்ரையினை வைத்தது. சாலிந்தவின் வெற்றிகரமான கொன்வெர்சனுடன் இராணுவ அணி மீண்டும் ஒரு முறை முன்னிலை அடைந்தது. (10-5)

எனினும் இராணுவ அணியின் திருஷ அதிகாரவிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு, அவர் மைதானத்தில் இருந்து 10 நிமிடங்களுக்குள் வெளியேற்றப்பட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட CH&FC அணியின் ஹஷான் மதுரங்க மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். இம்முறை மதுவந்த கொன்வெர்சனை தவறவிடவில்லை.

மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பை வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்ட மதுவந்த தமது அணிக்கு 3 புள்ளிகளை எடுத்துக்கொடுத்தார். இதனால் CH&FC அணி முதல் பாதி நிறைவடையும்பொழுது முன்னிலையில் காணப்பட்டது.

முதல் பாதி: இராணுவப்படை அணி 10 – 15 CH & FC அணி

இரண்டாம் பாதியில் சிறந்த திட்டத்துடன் களமிறங்கிய இராணுவ அணியானது இரண்டாம் பாதியில் ஆதிக்கத்தை செலுத்தியது.  

சுதாரக திக்கும்புற இராணுவ அணி சார்பாக தேவைப்படும் நேரத்தில் ட்ரை வைத்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். எதிரணி வீரர்களை கடந்து மைதானத்தின் ஓரத்தில் சுதாரக ட்ரை வைக்க, வெற்றிகரமான கொன்வெர்சனுடன் இராணுவ அணி மறுபடியும் முன்னிலை அடைந்தது.

கண்டி மற்றும் ஹெவலொக் அணிகளுக்கு வெற்றிகரமான ஆரம்பம்

2017/2018 பருவகாலத்திற்கான டயலொக்…

தனது தொடர் தோல்வி ஓட்டத்தை நிறுத்த கடினமாக முயற்சித்த CH&FC பல்வேறு வழிகளைக் கையாண்ட பொழுதும், அவர்களால் மேலும் எந்த புள்ளியையும் பெற முடியவில்லை.

எனினும் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பொன்று மூலமாக இராணுவ அணி மேலும் 3 புள்ளிகளை பெற, CH&FC அணி கடும் அழுத்ததிற்கு உள்ளானது. (20-15)

CH&FC அணி ட்ரை வைப்பதற்கு தனது முன்வரிசை வீரர்களை பயன்படுத்தி கடுமையாக முயற்சித்த பொழுதும், இராணுவ அணி வீரர்கள் சிறப்பாக அதை கட்டுப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.

முழு நேரம்: இராணுவப்படை அணி 20 (2T ,2P ,2C) – 15 (2T, 1C ,1P ) CH & FC அணி

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் அஷான் பண்டார (இராணுவப்படை அணி


ஹெவலொக்ஸ் எதிர் விமானப்படை

தனது இரண்டாவது வெற்றியையும் போனஸ் புள்ளிகளுடன் பெற்றுக்கொண்ட ஹெவலொக்ஸ் அணியானது, தனது வெற்றியோட்டத்தை தொடர்ந்தது. விமானப்படையுடனான இந்தப் போட்டியில் 46-23 என ஹெவலொக்ஸ் அணி வெற்றிகொண்டது.

தலைவர் ஜேசன் மெல்டர் உபாதை காரணமாக ஹெவலொக்ஸ் அணியில் இடம்பெறாத அதேவேளை, உபாதை காரணமாக சென்ற வாரம் விளையாடாத சந்துன் ஹேரத் இப்போட்டியில் விளையாடினார். மேலும் திமுக அமரசிங்க இந்த போட்டிக்கான அணியில் உள்ளடக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

முதலாவது புள்ளியினை ஷாரோ பெர்னாண்டோவின் ட்ரை மூலமாக ஹெவலொக்ஸ் அணி பெற்ற பொழுதும், விமானப்படை அணியின் சரித் செனவிரத்ன தொடர்ந்து இரண்டு பெனால்டிகளை சரிவர உதைத்து, விமானப்படை அணிக்கு 6 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்(5-6)

எனினும், பலம்மிக்க ஹெவலொக்ஸ் அணியானது குறுகிய நேரத்தில் இரண்டு ட்ரைகளை வைத்து அசத்தியது. முதலாவது ட்ரையை ரோலிங் மோல் மூலமாக பிரசாத் மதுசங்க வைக்க, நிஷோன் பெரேரா இரண்டாவது ட்ரையை வைத்தார். (15-6)

மேலும் ஒரு பெனால்டி மூலமாக செனவிரத்ன விமானப்படை அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதி நிறைவடைய முன்னர் ஹிரந்த பெரேரா ஹெவலொக்ஸ் அணி சார்பாக ட்ரை வைத்தார். போட்டியில் முதல் தடவையாக ரீசா முபாரக் கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார்.

முதல் பாதி: ஹெவலொக்ஸ் 22- 09 விமானப்படை 

இரண்டாம் பாதியில் ஹெவலொக்ஸ் அணி மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. தலைவர் துஷ்மந்த பிரியதர்ஷன இரண்டாம் பாதியில் முதல் ட்ரை வைத்து ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து விமானப்படை அணியும் ரதீஷ சில்வா மூலமாக ட்ரை வைத்து பதிலடி கொடுத்தது. விமானப்படை தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும், வீரர்கள் தத்தமது நிலைகளை சரிவர பேணாமையால் புள்ளி பெரும் வாய்ப்புகளை அவ்வணி தவறவிட்டது. (27-16)

ஹெவலொக்ஸ் தொடர்ந்து தமது பலத்தை நிரூபித்தது. இம்முறை கெவின் டிக்சன் ஹெவலொக்ஸ் அணி சார்பாக, ரீசா முபாரக்கின் உதவியுடன் ட்ரை கோட்டினை கடந்தார். ஹெவலொக்ஸ் அணியின் பிரசாத் மதுசங்க மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, ஹெவலொக்ஸ் அணி 14 வீரர்களுடன் களத்தில் காணப்பட்டது.

இதனை பயன்படுத்திக்கொண்ட விமானப்படை அணியாது ஹுகர் நிலை வீரரான பராக்ரம ரத்நாயக்க மூலமாக, ரோலிங் மோலை பயன்படுத்தி ட்ரை வைத்தது(32-23)

போட்டியின் இறுதி சில நிமிடங்களில் கெவின் டிக்சன் மற்றும் நிஷோன் பெரேரா மூலமாக மேலும் இரண்டு ட்ரைகளை பெற்றுக்கொண்ட ஹெவலொக்ஸ் அணியானது, மொத்தமாக 8 ட்ரைகளுடன் போட்டியை முடித்தது.

முழு நேரம்: ஹெவலொக்ஸ் 46(8T 2C) – 23 (2T ,2C ,3P) விமானப்படை

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் ஷெஹான் டயஸ் (ஹெவலொக்ஸ்)