டயலொக் கழக ரக்பி லீக் இந்த பருவகாலத் தொடரின் இறுதி வாரத்தில் விறுவிறுப்பான போட்டியின் பின்னர் CR&FC அணியை 24-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்ற CH&FC அணி தொடரின் 3ஆம் இடத்தை பெற்றுள்ளதுடன் ஹாஜி ஒமர் கிண்ணத்தையும் கைப்பற்றிக்கொண்டது.

மூன்றாம் இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற வேண்டும் என அறிந்து லொங்டன் மைதானத்தில் CH&FC அணி களமிறங்கியது. அவந்த லீ விளையாடிய பொழுதும், இலங்கை எழுவர் ரக்பி அணியின் தலைவரான சுதர்ஷன முதுதந்திரி CH&FC சார்பாக விளையாடியமை, அவ்வணிக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

டயலொக் ரக்பி லீக் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த கண்டி கழகம்

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில்…

போட்டியின் முதலாவது ட்ரை CR&FC அணி வைத்தாலும் தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி ட்ரை வைத்தனர். முதலாம் பாதியில் CR&FC அணியின் சார்பாக தலைவர் கவிந்து பெரேரா மற்றும் ஒமல்க ஆகியோர் ட்ரை வைத்தனர். தொடர்ந்து CH&FC அணி சார்பாக முதுதந்திரி மற்றும் சாமுவேல் மதுவந்த ட்ரை வைத்து அசத்தினர். மதுவந்தவின் பெனால்டி காரணமாக CH&FC அணி முதற் பாதியில் முன்னிலை வகித்தது.

முதலாம் பாதி: CR&FC 14 – 15 CH&FC

தீர்மானம் மிக்க இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் கடுமையான விளையாட்டை வெளிப்படுத்தின.  இரண்டு அணிகளும் கடினமாக முயற்சி செய்தும், CR&FC யினால் மற்றுமொரு பெனால்டியினை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. சரண சாமிக அவ்ஒற்றை ட்ரையை வைத்தார்.

மறுமுனையில் இவ்வருடம் தமது பலத்தை நிரூபித்து வரும் CH&FC இரண்டாம் பாதியில் இரண்டு ட்ரைகளை வைத்தது. சதுர டில்ஷான் முதலாவது ட்ரை வைக்க,ஹேஷான் மதுவந்த வெற்றி ட்ரையை வைத்தார்.

இதன் மூலம் CH&FC அணி 3ஆம் இடத்தை கைப்பற்றிக்கொண்டுள்ளது. எனினும், ஹெவலொக்ஸ் அணி கண்டி அணியை வெல்லுமாயின் CH&FC அணி 4ஆம் இடத்திற்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   

முழு நேரம்: CR&FC 24 – 25 CH&FC

ThePapare.com இந்த போட்டியின் சிறந்த வீரர் – ஹஷான் மதுரங்க (CH &FC)


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இராணுவ அணியானது 43-36 என இலகுவாக பொலிஸ் அணியை வென்று இந்தப் பருவத்தினை முடித்துக்கொண்டது.

இராணுவ அணி இவ்வருடம் சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினாலும் இப்போட்டியின் முதலாம் பாதியில் பொலிஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது எனலாம். இரண்டாவதாக புள்ளிகளை பெற பொலிஸ் அணி ஆரம்பித்தாலும், முதலாம் பாதியின் இறுதி நிமிடம் வரை முன்னிலையிலேயே காணப்பட்டது

எனினும், முதலாம் பாதியில் இறுதி நிமிடத்தில் குறுகிய நேரத்தில் இரண்டு துரித ட்ரைகளை வைத்ததன் மூலம் இராணுவ அணியானது முதலாம் பாதி முடிவடையும் போது முன்னிலையில் காணப்பட்டது.

முதலாம் பாதி: இராணுவம் 31 – 19 பொலிஸ்

இரண்டாம் பாதியில் மீண்டும் ஒரு முறை இராணுவ அணி ஆதிக்கம் செலுத்தியது. இம்முறை பொலிஸ் அணியினால் இராணுவ அணியினை முந்த முடியவில்லை. இரண்டாம் பாதியில் இராணுவ அணி 2 ட்ரைகளை வைத்தது. இறுதி நிமிட ட்ரை ஒன்றின் மூலம் பொலிஸ் அணி 3 ட்ரைகளை வைத்தது.  

இராணுவ அணியையும் வீழ்த்தி வெற்றியோட்டத்தை தொடர்கின்றது கண்டி கழகம்

கழக அணிகளுக்கு இடையிலான…

இராணுவ அணி சார்பாக அஷான் பண்டார இரண்டு ட்ரைகளை வைத்ததோடு, சுதாரக திக்கும்புற, மனோஜ் பண்டார, ஷெஹான் சில்வா மற்றும் தினேஷ் சுரங்க ஆகியோர் தல ஒரு ட்ரை வீதம் வைத்தனர். கயான் சாலிந்த 5 கொன்வெர்சன் மற்றும் ஒரு பெனால்டியை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் பொலிஸ் அணி சார்பாக ஜனித்த சந்திமால் 2 ட்ரைகளை வைத்ததோடு, ஷானாக ஹரிஸ்சந்திர, லாகிரி பவித்ர, ரசித்த சில்வா மற்றும் லஹிரு குருசிங்க ஆகியோர் தல ஒரு ட்ரை வைத்தனர். சந்தேஷ் ஜெயவிக்ரம ஒரு கொன்வெர்சனை பூர்த்தி செய்து இருந்தார்.


முழு நேரம்: இராணுவம் 43 – 36 பொலிஸ்

ThePapare.com இந்த போட்டியின் சிறந்த வீரர் அஷான் பண்டார (இராணுவம்)


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

விமானப்படையுடனான இறுதி லீக் போட்டியை 50-28 என வெற்றிகொண்ட இராணுவ அணியானது, இவ்வருட லீக்கை முடித்துக்கொண்டது.

ரத்மலான மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, கடற்படை அணிக்கு மிகவும் இலகுவானதாக அமைந்தது. முதலாம் பாதியில் இரண்டு அணிகளும் சமமாக விளையாடியமையால் முதற் பாதியின் முடிவின் பொழுது இரண்டு அணிகளையும் வெறும் 6 புள்ளிகள் வேறுபடுத்தியது. இதில் இறுதி நிமிடத்தில் இரண்டு அணிகளும் புள்ளிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முதற் பாதி: கடற்படை 22 – 16 விமானப்படை 

இரண்டாம் பாதியில் கடற்படை அணி அதீத திறமையை வெளிக்காட்டி ட்ரை மழை பொழிந்தது. இரண்டாம் பாதியில் கடற்படை அணியானது மொத்தம் 4 ட்ரை வைத்து அசத்தியது. போட்டியின் இறுதி 10 நிமிடத்தில் இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 4 ட்ரை வைத்தமை குறிப்பிடத்தக்கது. 75ஆம் மற்றும் 80ஆம் நிமிடங்களில் இரண்டு ஆறுதல் ட்ரைகளை விமானப்படை அணி பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இலங்கைக்கு அதிக வாய்ப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ்…

கடற்படை அணி சார்பாக திலின வீரசிங்க, மொகமட் அப்சல் மற்றும் கசுன் டி சில்வா ஆகியோர் தல 2 ட்ரைகளை வைத்ததோடு, துலாஞ்சன விஜேசிங்க ஒரு ட்ரை வைத்தார்.

விமானப்படை அணி சார்பாக கௌஷல் மானப்பிரிய, ருமேஷ் ராமதாஸ் மற்றும் சரித் செனவிரத்ன ட்ரை வைத்தனர்.

முழு நேரம்: கடற்படை 50 –  28 விமானப்படை 

ThePapare.com இன் சிறந்த வீரர் மொஹமட் அப்சல் (கடற்படை)