டில்ஷானின் ஹெட்ரிக் கோலினால் சுபர் சன்னை வீழ்த்திய சோண்டர்ஸ்

200

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில் இறுதி நேரத்தில் சமோத் டில்ஷான் பெற்ற அபார கோலினால் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.  

சுகததாஸ விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் சோண்டர்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மைதானத்தின் மத்தியில் இருந்து சுபர் சன் வீரர் டியோ டேனியல் உள்ளனுப்பிய பந்தைப் பெற்ற அபீஸ் ஓலெய்மி, அதனை முன்னோக்கி எடுத்துச் சென்று கோல் பெட்டி வரை சென்று, சோண்டர்ஸ் கோல் காப்பாளர் அசன்க விராஜின் தடுப்பிற்கு மத்தியில் பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

புளூ ஸ்டார் வீரர்கள் மீது நாவலப்பிடியில் தாக்குதல்

நாவலப்பிடி, ஜயதிலக்க விளையாட்டரங்கில் நேற்று (09) நடைபெற்ற…

மீண்டும் 5ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்குள் வைத்து வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற மொஹமட் பசான், சோண்டர்ஸ் அணியின் பெனால்டி பெட்டி வரை அதனை எடுத்துச் சென்றார். இதன்போது பந்தை மறைக்க வந்த அசன்க விராஜையும் தாண்டி பந்தை கடத்தி வந்த பசான் அதனை கோலுக்குள் செலுத்தி அணிக்கான அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

தொடர்ந்து 10ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோலுக்கு அருகில் இருந்து அபீஸ் ஒலெய்மி கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

எனினும், அடுத்த நான்கு நிமிடங்களில் சோண்டர்ஸ் வீரர் சுந்தராஜ் நிரேஷ் எதிரணியின் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை வேகமாகச் சென்று பெற்ற சமோத் டில்ஷான் சுபர் சன் கோல் எல்லைவரை அதனை எடுத்துச் சென்று அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

தொடர்ந்து 20 நிமிடங்கள் கடந்த நிலையில், சுபர் சன் அணியின் எல்லையின் ஒரு திசையில் இருந்து சோண்டர்ஸ் வீரர் கிறிஷான்த அபேசேகர உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அருகில் இருந்து ஷமோத் டில்ஷான் ஹெடர் செய்ய இரண்டாவது கோலும் சோண்டர்ஸ் அணிக்கு கிடைத்தது.

25 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து அபீஸ் கோல் நோக்கி உதைந்த பந்தை அசங்க விராஜ் தடுத்து திசை திருப்பினார்.

Photos: Blue Star SC v Renown SC | Week 10 | Dialog Champions League 2018

ThePapare.com | Ahamed Aakil | 01/13/2018 | Editing and re-using images…

போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் சோண்டர்ஸ் அணியின் கோல் எல்லையில் பந்தைப் பெற்ற அபீஸ், அதனை மொஹமட் அப்சாலுக்கு வழங்கினார். கோல் கம்பங்களுக்கு நேர் எதிரே இருந்த அப்சால் பந்தை நிறுத்தி, மீண்டும் கோல் நோக்கி உதைய, அது கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

முதல் பாதி: சுபர் சன் வி.க 2 – 2 சோண்டர்ஸ் வி.க

இரண்டாம் பாதி ஆரம்பமாகிய முதல் நிமிடத்திலேயே சுபர் சன் அணியின் கோலுக்கு அண்மையில் இருந்து சக வீரரால் பின்னோக்கி வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தை சமோத் டில்ஷான் வந்த வேகத்திலேயே கோல் நோக்கி உதைந்தார். இதன்போது பந்து கம்கத்தை விட சற்று மேலால் வெளியே சென்றது.

அடுத்த 5 நிமிடங்களுக்குள் மீண்டும் சோண்டர்ஸ் வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு கோல் இன்றி நிறைவு பெற்றது.

சில நிமிடங்களில் சோண்டர்ஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த ஷமத் ரஷ்மித்தவுக்கு உயர்த்தி உள்ளனுப்பப்பட்ட பந்தை அவர் கோலுக்கு அண்மையில் இருந்து வந்த வேகத்திலேயே கோல் நோக்கி உதைய அது வெளியே சென்றது.

போட்டியின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் பாலகமகே சிவங்க உள்ளனுப்பிய பந்தை அபீஸ் பாயந்து ஹெடர் செய்ய, பந்து கோலை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

மீண்டும் 80ஆவது நிமிடத்தில் சுபர் சன் வீரர் எதிரணியின் கோல் நோக்கி தனித்து எடுத்துச் சென்ற பந்தை அசன்க விராஜ் வேகமாக வந்து தடுத்தார்.

87ஆவது நிமிடத்தில் இன்ந்ரிவ் உதார மற்றும் நிரேஷ் இடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் உதார பெற்ற பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று கோலுக்கு அண்மையில் இருந்து உதைய, அது மைதானத்தை விட்டு வெளியே சென்றது.

பாலியல் பலாத்கார விடயத்தில் ரொனால்டோவுக்கு எதிராக புதிய சர்ச்சை

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ…

அடுத்த நிமிடம் அபீஸ் உள்ளனுப்பிய பந்தை சுபர் சன் வீரர் கோலுக்கு அண்மையில் இருந்து ஹெடர் செய்ய பந்து வெளியே சென்றது.

போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து நிரேஷ் கோலுக்குள் அடித்த பந்தை சுபர் சன் கோல் காப்பாளர் முபஷ்ஷிர் பாய்ந்து தடுத்தார்.

எனினும், போட்டியின் உபாதையீடு நேரத்தில் சுபர் சன் அணியின் கோல் எல்லையில் இடம்பெற்ற வேகமான பந்துப் பரிமாறங்களின் பின்னர் சமோத் டில்ஷான் சோண்டர்ஸ் அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்று, தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

டில்ஷானின் இறுதி நேர கோலினால் போட்டி நிறைவில் சோண்டர்ஸ் வீரர்கள் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, DCL தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: சுபர் சன் வி.க 2 – 3 சோண்டர்ஸ் வி.க

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சமோத் டில்ஷான் (சோண்டர்ஸ் வி.க)

கோல் பெற்றவர்கள்

சுபர் சன் வி.க – அபீஸ் ஓலெய்மி 2′, மொஹமட் பசான் 05′

சோண்டர்ஸ் வி.க – சமோத் டில்ஷான் 14′, 21′ 90+1′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

சுபர் சன் வி.க – அசன்க டி சில்வா 83′

சோண்டர்ஸ் வி.க – S.M ப்ரியதர்ஷன 45+1′

 போட்டியை மீண்டும் பார்வையிட